இரண்டு மோதிரங்கள், ஒரு முச்சதம்... சேப்பாக்கத்தில் ஒரு மேஜிக்!
இந்தியா, இங்கிலாந்துக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது இரண்டு ஈஷா தியான அன்பர்கள் தற்செயலாக சந்தித்தனர். இந்தப் போட்டியில் கருண் நாயர் வரலாற்றுச் சிறப்பு மிக்க முச்சதம் அடித்தது மட்டுமல்லாமல் இந்திய அணி சிறப்பான வெற்றி பெற்றது. ஆனால் அதைவிட மிகச் சிறப்பான ஒன்று இவர்களுக்கிடையே நிகழ்ந்தது.
இந்தியா, இங்கிலாந்துக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது இரண்டு ஈஷா தியான அன்பர்கள் தற்செயலாக சந்தித்தனர். இந்தப் போட்டியில் கருண் நாயர் வரலாற்றுச் சிறப்பு மிக்க முச்சதம் அடித்தது மட்டுமல்லாமல் இந்திய அணி சிறப்பான வெற்றி பெற்றது. ஆனால் அதைவிட மிகச் சிறப்பான ஒன்று இவர்களுக்கிடையே நிகழ்ந்தது.
Subscribe
“இந்த மேட்ச் ஃபிக்ஸிங் செய்தியெல்லாம் வந்ததிலிருந்தே நான் கிரிக்கெட்டெல்லாம் அவ்வளவா பாக்குறதில்ல, ஆனா, என்னுடைய நண்பர் ஒருவர் மூலமா டிக்கெட்ஸ் கிடைச்சது. சிறந்த நண்பர் ஒருத்தர் குடுத்த அந்த வாய்ப்ப மறுக்க மனமில்லாம சேப்பாக்கம் வந்தோம். ஆனா என்னுடைய பாம்பு மோதிரம் மூலமா இங்க இப்படியொரு ஆச்சரியம் நடக்கும்னு நான் நினைக்கல!”
என்னோட கணவர் வர கொஞ்சம் தாமதமானதால நான் மட்டும் உலகப்புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்டேடியத்தில இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரோட கடைசி மேட்ச பாத்துட்டிருந்தேன். நான் உட்கார்ந்திருந்த வரிசையில என் பக்கத்தில் ஒரே ஒரு இளைஞர் மட்டும் இருந்தார். ஒரு அரை மணிநேரம் கழிச்சு, ‘அக்கா நீங்க ஈஷா வாலண்டியரா?’ அப்படீன்னு என்னோட பாம்பு மோதிரத்தை பாத்துக்கிட்டே கேட்டார். நான் சந்தோஷமா ஆமான்னு சொன்னவுடனே தன் கையிலுள்ள பாம்பு மோதிரத்தை கையை உயர்த்திக் காண்பிச்சார்!
அவர் "அக்கா நமஸ்காரம்"ன்னு சொன்னவுடனே நான் உணர்ந்த மகிழ்ச்சிக்கும் அன்புக்கும் அளவே இல்லை. முதல்ல நான் கொஞ்சமாத்தான் பேசினேன். நான் நமஸ்காரம் மட்டும் சொன்னேன் ஆனா எவ்வளவு அழகான நேரமா அது மாறிடுச்சு! முன்பின் தெரியாத ஒரு நபர் "அக்கா நமஸ்காரம்"ன்னு சொல்றாரு, நான் அப்படியே ஆனந்தத்தில மிதக்கிறேன்! சத்குருவால மட்டும்தான் நம்மை இப்படியெல்லாம் உணர வைக்க முடியும்.
அவர் சத்குருவோட கட்டுரைகளையெல்லாம் blogல படிக்கிறதப் பத்தி சொன்னாரு. ஒவ்வொரு ஓவருக்கு இடையிலேயும் ப்ரேக் டைம்லயும்... இப்படி இடைவெளி கிடைக்கும்போதெல்லாம் கிரிக்கெட் பாத்துக்கிட்டே ரெண்டுபேரும் ஈஷா பத்தியும் சத்குரு பத்தியும் நிறைய விஷயங்கள ஷேர் பண்ணிக்கிட்டோம். அப்படியே வர்தா புயல் பாதிப்பு பத்தி டாப்பிக் மாறுச்சு!
வர்தா புயலால சரியான இன்டெர்நெட் கனெக்ஷன் இல்லாததால சத்குருவோட வாசகங்களையும், கட்டுரைகளையும் என்னால படிக்க முடியாம போனதை சொன்னேன். "இது ஒரு பெரிய விஷயமே இல்லை" அப்படீன்னு சொல்லிவிட்டு "Pocket" அப்படீங்கிற மொபைல் ஆஃப் பத்தி சொன்னாரு. கட்டுரைகள blogலயிருந்து டவுன்லோட் பண்ணி "Pocket" ஆப்ல சேவ் பண்ணி வைச்சு அவருக்கு எப்பெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்பெல்லாம் படிக்கிறாராம். நெட் கனெக்ஷன் இல்லாதப்ப கூட படிச்சிருக்காரு. கரெண்ட் இல்லாத கடந்த சில நாட்கள்ல கூட கும்மிருட்டுல சத்குருவோட கட்டுரைகளைப் படிச்சுருக்காரு. கரெண்ட் வந்தப்பெல்லாம் மொபைல் சார்ஜ் பண்ணிக்குவாராம். மறுபடியும் கரெண்ட் போனவுடனே கூட சத்குருவோட இருந்திருக்காரு :-)
உடனே என் மொபைல எடுத்து ஆப் டவுன்லோட் பண்ணிக்கொடுத்தார். எப்பவும் நான் சத்குருவோட வார்த்தைகளோட இருக்கிறதுக்கும் வழிசெஞ்சு கொடுத்தாரு.
நாங்க ரெண்டு மணி நேரத்துக்கு மேலா பேசிக்கிட்டிருந்தோம். ஆனா ஒருத்தரோட பேர இன்னொருத்தர் தெரிஞ்சுக்கணும்னு கூட தோணல. எங்களுக்குள்ள பொதுவா இருந்த ஒண்ணே ஒண்ணு "ஈஷா மெடிட்டேட்டர்" அப்படீங்கிறதுதான். ஆனா அதுவே எங்களுக்குள்ள அன்பு, நட்பு, ஆழமான ஈடுபாடு உடனே உருவாகிறதுக்குப் போதுமானதா இருந்துச்சு.
-ரஞ்சனி, ஈஷா தியான அன்பர்.