நற்பண்புகளால் செதுக்கப்படும் ஈஷா வித்யா மாணவர்கள்!
ஈஷா வித்யாவில் மாணவர்கள் கண்டுள்ள மகத்தான தாக்கங்கள் குறித்து மாணவர்களே தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்!
புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள் -பகுதி 4
ஈஷா வித்யாவில் மாணவர்கள் கண்டுள்ள மகத்தான தாக்கங்கள் குறித்து மாணவர்களே தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்!
இந்த உலகில் தனது சரியான பங்களிப்பை வழங்கும் விதமாக நமது குழந்தைகளை நாம் வளர்த்தெடுக்க வேண்டிய தேவையுள்ளது. அடுத்துவரும் தலைமுறை நம்மை விட சிறந்தவர்களாக இருக்க வேண்டும். -சத்குரு
ஒரு தன்னார்வத் தொண்டரின் பகிர்வு!
Subscribe
மாணவர்கள் மீது ஈஷா வித்யா ஏற்படுத்தும் உன்னத தாக்கம்!
ஒரு திருமண நிகழ்ச்சிக்காக நானும் UKG படிக்கும் எனது மகள் ப்ரியதர்ஷினியும் சென்றிருந்தோம். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைந்ததும் என்னுடைய காலணிகளைக் கழற்றி, அங்கு ஒழுங்கற்ற முறையில் குவிந்துகிடந்த செருப்புகளுடன் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தேன். சிறிது நேரத்திற்குப் பின், எனது மகள் ப்ரியதர்ஷினி என்னுடைய கையை பற்றிக்கொண்டிராமல் இருப்பதை நான் உணர்ந்தேன். உடனே நான் பதற்றமானதுடன், அங்கிருந்த மக்கள் கூட்டத்திற்கிடையே அவளைத் தேடினேன். ஒருவர் வந்து அவளை வரவேற்பு இடத்தில் பார்த்ததாகச் சொன்னார். நான் உடனே அங்குசென்று பார்த்தபோது, அவள் அங்கிருந்த செருப்பு குவியலை ஒழுங்குபடுத்தி வைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஈஷா வித்யா பள்ளி எனது 5 வயது மகளிடம் ஏற்படுத்தியுள்ள இந்த அற்புத தாக்கத்தை நம்புவதற்கு கடினமாகவே இருக்கிறது. நான் எல்லோரிடமும் இந்த பள்ளியை சிபாரிசு செய்கிறேன்; என்னுடைய நண்பர்கள் பலர் ஈஷா வித்யாவில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துள்ளனர். -ப்ரியதர்ஷினியின் தந்தை
ஒரு விளையாட்டு நிகழ்ச்சிக்காக நாங்கள் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தோம். இன்னொரு பள்ளியிலிருந்து வந்த மாணவர்கள் அங்கிருந்த பைப்களையும் மற்ற பொருட்களையும் சேதப்படுத்தியதைப் பார்த்தபோது எனக்கு கோபம் வந்தது!” இப்படிக் கூறும் ஈஷா வித்யாவில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜனார்தன், தொடர்ந்து கூறுகையில், “அதன்பின்னர் நான் ஏன் இவ்வளவு கோபம்கொள்கிறேன் என சற்று எண்ணிப்பார்த்தேன். நான் வேறொரு பள்ளியில் ஒருவேளை படித்துக்கொண்டிருந்தால், இதனைப் பார்த்துவிட்டு அப்படியே கடந்து சென்றிருப்பேன் அல்லது ஒருவேளை அவர்களுடன் சேர்ந்து நானும் அச்செயலில் ஈடுபட்டிருப்பேன். ஈஷா வித்யா எங்களை இத்தகைய ஒரு அற்புத தன்மைகள் கொண்டவர்களாக உருவாக்கியிருப்பதற்கு நான் நன்றிகூறுகிறேன்.”
ஒருமுறை நான் மதிய உணவருந்திவிட்டு கைகளை கழுவிக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த ஒரு பையன் தண்ணீரை வீணாக்குவதைக் கண்டேன். அவன் தண்ணீர்க்குழாயைத் திறந்துவிட்டபடி, அவனது பாத்திரத்தை திறந்து வைத்தபடி இன்னொரு பையனுடன் பேசிக்கொண்டிருந்தான். என்னால் அதைப் பார்த்துக்கொண்டிருக்க இயலவில்லை. நான் அவனிடம் ‘Save Water’ என தண்ணீர்க் குழாய்க்கு மேலே எழுதியிருந்த வாசகத்தை பார்க்கும்படி கண்டிப்பான முகபாவனைகளுடன் கூறினேன். அவன் தவறை உணர்ந்து வருந்தினான். பின்னர் அவன் ஒருநாள் என்னிடம் வந்து தற்போது கவனத்துடன் தண்ணீரை உபயோகிப்பதாகவும், அடுத்தவர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்துவதாகவும் பகிர்ந்துகொண்டான்.” -ஜனார்தன், ஈஷா வித்யாவின் 11ஆம் வகுப்பு மாணவன்
“முன்பு பயின்ற பள்ளியில் இருக்கும்போது நான் மிகவும் கோபப்படுவேன், அதோடு எனது கோபம் பலநாட்களுக்கு என்னுள் நீடித்திருக்கும். ஆனால், இப்போது நான் கோபப்பட்டால் எனக்குள் அதுகுறித்து ஆராய்ந்து பார்க்கிறேன். பிறகு விரைவிலேயே கோபம் தணிந்துவிடுகிறேன். மேலும், எனது தவறை உணரவோ அல்லது அதற்கான தீர்வு காணவோ முயல்கிறேன். -ஜெகன், ஈஷா வித்யாவின் 11ஆம் வகுப்பு மாணவன்
“நான் ஆசையாய் வைத்த மரத்தை ஒரு பையன் சேதப்படுத்திக்கொண்டிருப்பதை பார்த்தபோது எனக்கு கோபம் வந்தது. ஆனால் அந்த சிறுவன் குழந்தை தனமாக அவனது இயல்பில் விளையாடிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்தபோது, நான் கோபத்தை விட்டுவிட்டேன். இந்த பள்ளியில் சேர்வதற்கு முன்னர் நான் இதுபோன்று சூழ்நிலைகளை இவ்வாறு அணுகியதில்லை” -அஸ்வின், ஈஷா வித்யாவின் 11ஆம் வகுப்பு மாணவன்
“தெருநாய்கள் குரைக்கும்போது முன்பெல்லாம் நான் அவைகளை கல்லால் அடிப்பேன். இப்போது நான் அவைகளுக்கு அன்புடன் உணவளிக்கிறேன். எனக்குள் நிகழ்ந்த இந்த மாற்றம் இந்த பள்ளியில் பயில்வதால் வந்ததுதான் என்று என்னால் நன்றாக உணரமுடிகிறது.” -கோகுல், 6ஆம் வகுப்பில் ஈஷா வித்யாவில் சேர்ந்து, தற்போது 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவன்.
“எனது வீட்டருகில் ஒரு வயதான மனிதர் தனது மிதிவண்டியை நிறுத்துவதற்கு சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். அங்கே சில பையன்கள் அவரை வேடிக்கை பார்த்தபடி சுற்றிலும் இருந்தாலும், அவர்கள் அவருக்கு உதவவில்லை. நான் வீட்டிலிருந்து உடனே அங்கே ஓடிச்சென்று உதவினேன். பிறருக்கு உதவும் இந்த மனப்பான்மையை நான் என்னுடைய பள்ளி ஆசிரியர்களிடமிருந்துதான் பெற்றேன்.” -ப்ரியதர்ஷினி, ஈஷா வித்யா மாணவி, 11ஆம் வகுப்பு.
“நான் ஈரோடு ஈஷா வித்யா பள்ளியின் முதல்வராக விரும்புகிறேன்.” -இப்படி சொல்லும் அந்த ஒளிரும் கண்களை உடைய மாணவி சொற்செல்வி, கல்வி உதவித் தொகை மூலம் பயிலும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளது அந்த லட்சியம் நமக்கு சற்று வியப்பைத் தந்தது. அந்த உயரிய லட்சியத்திற்கு ஏதும் காரணம் உண்டா எனக் கேட்டபோது, “பலரும் நல்ல சம்பாதிக்கக் கூடிய புரஃபஷனல் துறைகளையே தேர்ந்தெடுக்க நினைக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே இந்த பணியை செய்ய விரும்புகிறார்கள். இந்த பள்ளி எனக்கு என்ன வழங்கியுள்ளதோ அதற்கு பிரதிபலனாக நான் இந்த பள்ளிக்காக பணிபுரிய விரும்புகிறேன்” அந்த மாணவி மென்மையாகக் கூறினாள். இதைக் கேட்கும்போது நமது இதயம் அன்பில் திளைத்தது.
அடுத்த பதிவில் முழுமையான, இயற்கை சார்ந்த வழிமுறைகளுடன் இயங்கும் இந்த பள்ளியைப் பற்றி, இதுபோல் இன்னும் பிரம்மிக்கத்தக்க பகிர்வுகளை வழங்குகிறோம்!
ஆசிரியர் குறிப்பு:
“Innovating India’s Schooling” இந்த கல்வி மாநாடு ஈஷா வித்யா, ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட தனிநபர்கள், கல்வித்துறை சார்ந்த அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சிந்தனையாளர்கள் போன்றோரை ஒன்றிணைத்து இந்த கலந்துரையாடல் நிகழவுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் உரைகள், விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் கல்வி குறித்த பொதுப்படையான பார்வைக் கோணத்தை மாற்றியமைப்பதாய் அமையும். கல்வி என்றால் அதிக வேலைசெய்யக் கூடிய திறம்படைத்த ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்குவதற்கானது மட்டுமல்ல, கல்வி என்பது முழுமையான பொறுப்புமிக்க மற்றும் மகிழ்ச்சியான ஒரு சமுதாயத்தை வடிவமைப்பதற்கானது என்ற சிந்தனையை இது உருவாக்கும். இந்த நிகழ்ச்சி கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் ஈஷா வித்யாவின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்திற்கான அடையாளமாகவும் நிகழ்கிறது. மேலும் அறிய: ishavidhyaconference.com