பால்பெக்,லெபனன்
லெபனன் நாட்டில் பால்பெக் எனும் இடத்தில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் பாரதத்தின் யோகிகளால் கட்டப்பட்ட புராதான கோயில் பற்றிய ஆச்சரியங்களை சத்குரு கூறுகிறார்!
சில ஆயிர வருடங்களுக்கு முன் யோகிகளால் கட்டப்பட்ட கோவில்களுள்ள லெபனானில் இருக்கும் தொய்மை வாய்ந்த பால்பெக்கைப் பற்றி சத்குரு.
சத்குரு: பால்பெக் நம்ப முடியாத, வியக்கத்தக்க ஒரு நினைவுச்சின்னம். எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு இடம். அங்கிருக்கும் ஒரு சில கற்கள் 800 டன் எடை கொண்டது. இவ்வளவையும் ஒரு கருவியும் இல்லாமல், பளுதூக்கிகள் இல்லாமல், பெரிய கலன்களோ, வாகனங்களோ இல்லாமல் இவைகளை உண்டாக்க நினைத்தவர்கள் என்ன அசாதாரணமான மனிதர்களாக இருந்திருப்பார்கள் என சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாக இவர்கள் பணத்தைப் பற்றியோ, உணவைப் பற்றியோ ப்ரதானமாக நினைக்கக் கூடிய சாதாரணமானவர்களாக இருந்திருக்க மாட்டார்கள்.
ஒரு மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் மேலே அன்னாந்து கூரையைப் பார்த்தீர்களானால் கல்லில் செதுக்கிய தாமரைப் பூக்கள் தொங்குவதைப் பார்க்கலாம். நிச்சயமாக மத்திய கிழக்கு தேசங்களில் தாமரைகள் பூப்பதில்லை. இந்திய ஆன்மீகத்தில் தாமரை ஒரு இன்றியமையாத விஷயம். எல்லாவற்றையும் தாண்டி கல்லினால் செதுக்கப்பட்ட 16 கோணங்கள் கொண்ட கல் ஒன்று குரு-பூஜை கல் என்று அழைக்கப்படுகிறது.
குரு பூஜை என்பது உணர்வுபூர்வமான ஒரு விஷயம் மட்டுமல்ல, முழு செயல்பாட்டினை உருவாக்கும் சாத்தியக்கூறு. இதை ஷோடசௌபசாரம் என்று சொல்வார்கள் – அதாவது 16 விதமாக குருவை உபசச்சாரம் செய்வது என்பது பொருள். இதற்காக யோகக் கலாசாரத்தின் தனித்தன்மையாக விளங்கும் 16 கோணங்கள் கொண்ட குரு பூஜை பீடங்களை உருவாக்கினார்கள். இது மாதிரியான ஒரு விஷயம் இந்த கிரகத்தில் எங்கும் காணக்கிடைக்காது – பால்பெக்கில் மட்டுமே 3600 வருஷ புராண குரு பூஜை கல் இருக்கிறது. இதிலிருந்து நம் இரு நாடுகளுக்கும் இடையில் சுறுசுறுப்பான வணிக போக்குவரத்தும் ஆன்மீகத் தொடர்பும் இருந்தது என்பது தெளிவாகிறது.