படைத்தவன் மற்றும் படைத்தல் பற்றி பேசும் சத்குரு, படைத்தவனை உயர்வாகவும் படைப்பை தாழ்வாகவும் எண்ணும் மக்களின் பிளவுபட்ட பார்வை பற்றி எடுத்துரைக்கிறார். பெரும்பாலான மக்கள் கடவுளை தங்களின் மிகைப்படுத்தப்பட்ட ஒரு வடிவமாகவே பார்ப்பதால், கடவுளைப் பற்றி உங்களுக்கு இருக்கும் எண்ணம் எதுவாகினும், அது நம்மைச் சுற்றி நாம் பார்ப்பவற்றிற்கு ஏற்ற ஒரு வரையறை மட்டுமே என்பதை சத்குரு விளக்குகிறார். படைப்பின் மூலமானது எதுவாக இருந்தாலும், அதை அனுபவத்தில் மட்டுமே உணரமுடியும், புரிந்துகொள்ள முடியாது.