பெருகும் சாத்தியங்கள்
இந்த வார ஸ்பாட் காணொளிகள், சத்குருவின் சமீபத்திய நிகழ்வுகளைக் கண்முன்னே நிறுத்துகின்றன: இந்திய பொருளாதாரக் கூட்டம் 2018-நிகழ்வில், ஒருவர் தன்னுடைய உச்சத்தில் செயல்படுவதற்கான அம்சங்கள் குறித்து சத்குரு எடுத்துரைக்கிறார். பெங்களூருவில் நடைபெற்ற இன்னர் இன்ஜினியரிங் நிறைவு வகுப்பில், எட்டாயிரத்துக்கும் அதிகமான பங்கேற்பாளர்களை சத்குரு அவர்கள் உள்நிலை பயணத்திற்கு வழி நடத்துகிறார். சாஃப்ட் பவர் குறித்த மாநாட்டில், ஒட்டுமொத்த உலகின் எதிர்காலத்தையும் பாரதத்தின் ஆன்மீக வளம் எந்த அளவுக்குப் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த முடியும் என்பதை சத்குரு சுட்டிக்காட்டுகிறார். ரிபப்லிக் உச்சி மாநாடு 2018-ல், அர்னாப் கோஸ்வாமியுடனான விவாதத்தில், சத்குரு மேற்கத்திய தேசியவாதக் கருத்துக்களையும், இந்தியக் கலாச்சாரத்தையும் இணைத்து அலசுகிறார். இறுதியாக, டெல்லியில் CII -இன் மூத்த அதிகாரிகளை ரேலி ஃபார் ரிவர்ஸ் போர்ட் அங்கத்தினர்கள் சந்தித்து, நதிகளைக் காப்பாற்றி, இந்தியாவை ஒரு நிலையான, முன்னேற்றமடையும் தேசமாக உருவாக்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆலோசனை செய்கின்றனர். கண்டுகளியுங்கள்!
Subscribe