Main Centers
International Centers
India
USA
Sadhguru Quotes
FILTERS:
SORT BY:
Clear All
ஒரு ஆணின் உலகிற்குள் ஒரு பெண் பொருந்தவேண்டி இருக்கக்கூடாது. பாதி உலகம் எப்படியும் அவளுடையதாக இருக்கவேண்டும்.
உயிர் தோல்வி அறியாது. தோல்வி என்பது தங்களை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான்.
நீங்கள் விசித்திரமானவர் என்று உலகம் நினைத்தால் பரவாயில்லை. ஒவ்வொருவரும் வித்தியாசமாக இருப்பதால், ஒவ்வொருவருமே யாரோ ஒருவரின் கண்களுக்கு விசித்திரமாகவே தெரிவார்கள். மகிழ்வாக விசித்திரமாக இருக்கிறீர்களா அல்லது துயரமாக விசித்திரமாக இருக்கிறீர்களா என்பது உங்கள் தேர்வு.
பாரதம், ஒரு நாகரிகமாக, அனைத்தையும் ஒரு கொண்டாட்டமாக மாற்றியது. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த உத்வேகம் மனிதகுலம் முழுவதையும் சென்றடையட்டும்.
உங்கள் கவனத்தின் ஆழம்தான் உங்கள் அனுபவத்தின் ஆழத்தை நிர்ணயிக்கிறது. உங்கள் கவனம் ஆழமாக இருந்தால், உங்கள் வாழ்க்கை அனுபவமும் ஆழமாக இருக்கிறது.
உங்கள் ஆளுமைத்தன்மை எந்த அளவு இறுக்கமின்றி இருக்கிறதோ, அந்த அளவு உங்கள் இருப்பு சக்திவாய்ந்ததாய் இருக்கும்.
நீங்கள் விருப்பத்துடன் இருந்தால், உங்கள் காரண அறிவுக்கு அப்பாற்பட்ட விதங்களில் நான் உங்களுக்காக இருக்கிறேன்.
நீங்கள் இங்கு வாழ்க்கையை உணர்வதற்காக இருக்கிறீர்களா அல்லது அதைப்பற்றி சிந்திப்பதற்காக இருக்கிறீர்களா.
ஒருவருடன் உங்களால் எவ்வளவு அழகாகத் தொடர்புகொள்ள முடிகிறது என்பது உங்கள் விருப்பம், வளைந்துகொடுக்கும் தன்மை, மற்றும் மகிழ்ச்சியை சார்ந்தது.
நேரம் என்றால் பணமல்ல. நேரம் என்றால் வாழ்க்கை.
இந்த மஹாசிவராத்திரி, இரவு முழுவதும் விழித்திருந்து முதுகுத்தண்டை நேராக வைத்திருப்பதன் மூலம், இயற்கையில் ஏற்படும் சக்தி அலை மீது சவாரி செய்யுங்கள், ஆதியோகியின் அருளுக்குத் திறந்தவராகுங்கள், உயிரை மேம்படுத்துங்கள்.
நமக்கு உள்ளே பிரச்சனைகள் இருக்கும்போது அவற்றை நாம் நேரடியாக எதிர்கொள்ள வேண்டும். உங்கள் கவனத்தை திசைதிருப்பப் பார்க்காதீர்கள் - கவனத்தை திசைதிருப்புவது தீர்வாகாது.