சத்குருவுடன் இந்தியாவின் மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு துறைகளுக்கான மாண்புமிகு அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி அவர்கள் ஒரு சுவாரஸ்ய கலந்துரையாடலில் ஈடுபட்டபோது, காசி விஸ்வநாதர் கோயிலிருந்து கங்கையின் படித்துறையை சென்றடையும் நடைபாதையின் முக்கியத்துவம் பற்றிய தனது நுண்ணறிவை சத்குரு பகிர்கிறார். இது இந்தியாவின் பழமையும் புனிதமும் மிக்க நகரங்களில் ஒன்றான காசியின் புராதன பெருமையை மீட்டெடுக்கும் ஒரு திட்டமாகும். கடந்த காலங்களில் மேற்கு ஆசியாவுடனான வர்த்தக உறவுகளின் மூலம் இந்தியாவின் வளமான கலாச்சாரமும் வர்த்தகமும் எவ்வாறு செழித்தோங்கியது என்பதை எடுத்துரைக்கும் வரலாற்றுக் கதைகளையும் அவர் விவரிக்கிறார்.