பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் கொள்கை வடிவமைப்பு மாநாடான COP 29ல் சத்குரு மற்றும் மண் காப்போம் இயக்கத்தின் பங்களிப்பு குறித்த ஒரு பார்வை. உலகத் தலைவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், செய்தி நிறுவனங்கள் மற்றும் முக்கிய ஆளுமைகள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முக்கிய அம்சமாக மண் புத்துயிராக்கம் விளங்குவதை மாநாட்டில் அங்கீகரித்தனர். மாநாட்டின் மையக்கருவாக “பசுமை உலகத்திற்கான ஒருமைப்பாடு” என நிர்ணயிக்கப்பட்டுள்ளதை சத்குரு பாராட்டினார், மேலும் பருவநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான செலவு குறைந்த தீர்வுகளில் ஒன்றாக மண் புத்துயிராக்கக் கொள்கைகளை இயற்றவும், மண் புத்துயிராக்கத்திற்காக செயல்படவும் தலைவர்களை அவர் வலியுறுத்தினார்.
video
Nov 27, 2024
Subscribe