வரலாற்றாசிரியர் டாக்டர் விக்ரம் சம்பத் அவர்களுடன் கலந்துரையாடியபோது, இடைக்கால ஆட்சியாளர்களான ஔரங்கசீப், திப்பு சுல்தான், பக்தியார் கல்ஜி போன்றோரின் கொடுங்கோன்மை பற்றி சத்குரு பேசுகிறார். அப்பாவி மக்களைக் கொன்று குவித்த, கோவில்களை அழித்த, இனப்படுகொலைகளை நிகழ்த்திய கொடுங்கோலர்களின் பெயர்கள் தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்களாக இருப்பதை, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் மாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை சத்குரு வலியுறுத்துகிறார்.