17 அக்டோபர் 2024 அன்று, யாமினி ராகனி என்ற நபரால், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஈஷா ஹோம் ஸ்கூல் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஈஷா ஹோம் ஸ்கூல் நிர்வாகத்தின் இந்த அறிக்கையில், இந்த பொய்யான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.

யாமினி ராகனி என்பவர், தனது மகன் பள்ளியில் படித்து முடித்துவிட்டு சென்ற பிறகு, 2022 முதல் 2024 வரை ஈஷா ஹோம் ஸ்கூலில் ஆசிரியராக தன்னார்வத் தொண்டு செய்தார். 2024ல், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்களின் காரணமாக அவரது பணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை. குழந்தைகளின் பாதுகாப்பு எங்களுக்கு எப்போதும் முதன்மையானது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். எங்கள் குழந்தைகள் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு களங்கம் ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் சற்றும் சகித்துக்கொள்ளாத கொள்கையை நாங்கள் கடைப்பிடிக்கிறோம்.

அவரால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை மற்றும் அடிப்படையற்றவை. தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்கனவே ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து விரிவான ஆய்வு செய்து, பள்ளியின் பல்வேறு அம்சங்களைப் பாராட்டி சான்று வழங்கியுள்ளது.

ஈஷா ஹோம் ஸ்கூல், யாமினி ராகனிக்கு எதிராக உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.