ஈஷா வனநிலத்தை ஆக்கிரமித்துள்ளதா? உண்மையை அறிந்து கொள்ளுங்கள்…
ஈஷா அறக்கட்டளை வனநிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்ற குற்றச்சாட்டுகள் உலவுகின்றன. நாங்கள் இதை அழுத்தமாக மீண்டும் பதிவுசெய்ய விரும்புகிறோம், "இது முற்றிலும் பொய்யானது, ஈஷா அறக்கட்டளைக்கு பங்கம் விளைவிக்க, அதன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள அடிப்படையில்லா அவதூறு இது
ஈஷா அறக்கட்டளை வனநிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்ற குற்றச்சாட்டுகள் உலவுகின்றன. நாங்கள் இதை அழுத்தமாக மீண்டும் பதிவுசெய்ய விரும்புகிறோம், "இது முற்றிலும் பொய்யானது, ஈஷா அறக்கட்டளைக்கு பங்கம் விளைவிக்க, அதன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள அடிப்படையில்லா அவதூறு இது."
உண்மை
ஈஷா யோக மையம் இருக்கும் நிலம், தனிமனிதர்களிடமிருந்து சட்டப்பூர்வமாக வாங்கப்பட்ட, 100% பட்டா நிலங்களாகும். ஈஷா அறக்கட்டளை நிறுவப்பட்டதற்கு முன்பாகவே, இந்நிலங்கள் பல தலைமுறைகளாக தனியார் வசம் இருந்து வந்துள்ளன.
அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு
இதனை தமிழக வனத்துறை அதிகாரிகள் சரிபார்த்து தெளிவாக ஆவணப்படுத்தியுள்ளனர். இதன்மூலம், வனநிலத்தை ஈஷா யோக மையம் ஆக்கிரமிக்கவில்லை என்பதையும், சுற்றியுள்ள தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
- போலி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடுத்த ரிட் மனுவிற்கு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றமும் தேசிய பசுமை தீர்ப்பாயமும் கொடுத்த பதில் மனுவில், CFCIT/07/2013 என்ற குறிப்பு எண் கொண்ட ஆவணத்தை தமிழ்நாடு வனத்துறை குறிப்பிட்டது.
- (ii) இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சகமும், பசுமைத் தீர்ப்பாயத்திடம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் இதனை உறுதிசெய்துள்ளது.
பழைய அரசு ஆவணங்களில் சரிபார்ப்பு
ஈஷா அறக்கட்டளை வன நிலங்களை ஆக்கிரமிக்கவில்லை என்பதைக் காட்டும் அதிகாரப்பூர்வமான ஆவணங்கள் உள்ளன என்று மீண்டும் மீண்டும் விளக்கிய பின்னரும், உள்நோக்கம் கொண்ட சிலர் பல்வேறு விதங்களில் ஈஷா குறித்து இட்டுக்கட்டி, அவதூறுகள் பரப்பி வருகின்றனர்.
உண்மையை உரக்கச் சொல்ல, சில ஆதாரங்களை உங்கள் பார்வைக்கு சமர்பிக்க விரும்புகிறோம். தற்போது ஈஷாவிற்கு சொந்தமான நிலங்களுக்கான சர்வே எண்கள், கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக தனிமனிதர்களின் உரிமையில், முறையான சர்வே எண்களுடன் இருந்தன என்பதற்கு ஆதாரமான பழைய ஆவணங்கள் இங்கே உள்ளன. 1960ல் வரையப்பட்ட சர்வே வரைபடத்திலும், சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்தபோது 1910ல் வரையப்பட்ட வரைபடத்திலும், இந்த சர்வே எண்கள் தனியார் நிலங்கள் என்பதையும், அருகில் காட்டப்பட்டிருக்கும் வன நிலங்கள் மூலம் இவை வன நிலங்கள் இல்லை என்பதையும் உறுதிசெய்ய முடியும்.
இதனுடன் 1994ன் சர்வே வரைபடங்களையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம், இதில் தற்போது ஈஷாவிற்கு சொந்தமான நிலங்களின் சர்வே எண்கள் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளன. இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள சர்வே எண்கள், இவை தனியார் நிலம் என்பதையும், வன நிலம் இல்லை என்பதையும் தெள்ளத் தெளிவாக காட்டுகின்றன.
தொழில்நுட்பத்தின் அத்தாட்சி
உண்மையை சரிபார்க்க மேலும் ஆதாரம் வேண்டுமென்றால், நாம் செயற்கைக்கோள் தொழிலுநுட்பத்தின் உதவியை நாடலாம். சர்ச்சைகளைக் கிளப்பும் கும்பல்களின் முக்கிய குற்றச்சாட்டாக விளங்கும் ஆதியோகி தலம் வன நிலம் இல்லை என்பதை,கூகுள் எர்த் புகைப்படங்களில் நீங்களே கண்கூடாகக் காணமுடியும். சுற்றியுள்ள நிலங்கள் அனைத்தும் தனியார் நிலங்களாக விளங்குவதே இதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. மேலும், 2006ம் ஆண்டிலிருந்தே (இதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு கூகுள் எர்த் புகைப்படங்கள் இல்லை) இந்நிலங்கள் வனத்திற்கு சொந்தமானவை இல்லை என்பதும் தெளிவாகிறது. இவை பெரும்பாலும் தனியாருக்கு சொந்தமான வேலி வேயப்பட்ட தரிசு நிலங்கள், அல்லது சில நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டது என்பதை நீங்கள் 2006ம் ஆண்டின் புகைப்படங்களில் காணமுடியும்.
இதற்கு அத்தாட்சியான சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:
கூகுல் எர்த் புகைப்படம் 2006
கூகுல் எர்த் புகைப்படம் 2012
கூகுல் எர்த் புகைப்படம் 2016
தனிப்பட்ட சரிபார்ப்பு
இன்னும் சந்தேகம் தீராமல், நேரடியாக இதனை சரிபார்க்க சிலர் விரும்பினால், அவர்களை வரவேற்கிறோம். பஞ்சாயத்து ஆவணங்கள், சர்வே எண்கள், வருவாய் பதிவுகள், என்று சுதந்திரத்திற்கு முந்தைய காலம் முதல் எல்லாவிதமான அரசு ஆவணங்களும் உள்ளன. ஒவ்வொரு குடிமகனின் கையிலும் இன்று தொழில்நுட்பமும் இருக்கிறது. மனதில் சந்தேகமும் அவநம்பிக்கையும் எவர் மனதிலும் இருக்கிறதென்றால், உண்மையை அவர்களே சரிபார்த்துக்கொள்ள சிரத்தையெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.