ஈஷா யோக மையம் – ஒரு பாதுகாப்பான புகலிடம் மற்றும் கொரோனா நோய்த்தொற்று இல்லாத பகுதி
உலக சுகாதார அமைப்பால், கொரோனா ஒரு நோய்த்தொற்று என்று அறிவிக்கப்படுவதற்கு மிகவும் முன்னதாகவே பயணம் குறித்த அறிவுறுத்தல்களை வெளியிட்ட ஈஷா யோக மையம், கோவிட்-19 இல்லாத ஒரு இடம் என்று பொது சுகாதாரத் துறையால் அதிகாரபூர்வமாக கூறப்பட்டதுடன், இன்று வரை பாதுகாப்பான புகலிடமாக இருந்து வருகிறது.
பொது சுகாதாரத் துறையில் இருந்து சுகாதார ஆய்வாளர்கள், ஈஷா யோக மையத்தில் வழக்கமான பரிசோதனை மேற்கொண்டு, தற்போது யோக மையத்தில் இருக்கும் 2500 க்கும் அதிகமானவர்களுள் எவருக்கும் கொரோனா பாசிட்டிவ் இல்லை என்று சான்றளித்துள்ளனர். யோக மையம், 4000 க்கும் அதிகமானவர்களின் வசிப்பிடமாக இருந்து வருகிறது. தற்போது அவர்களில் பலரும், உலகளவிலான பயணத்தடையின் காரணமாக, உலகின் பல பகுதிகளிலும் சிக்கிப்போயுள்ளனர். உலக சுகாதார அமைப்பால், கோவிட் 19 ஒரு நோய்த்தொற்று என்று அறிவிக்கப்படுவதற்கு மிகவும் முன்னதாகவே பயணம் குறித்த அறிவுறுத்தல்களை வெளியிட்ட யோக மையம், கொரோனா இல்லாத ஒரு இடமாக தொடர்ந்து இருந்து வருவதாக அறிவித்தது
நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது ஈஷா யோக மையத்தில் இருந்தவர்கள், இப்போது – பெரும்பாலானோரும் கனத்த இதயத்துடன் - வெளியேறுவதற்குத் தயாராகிக்கொண்டுள்ளனர். லாக்டவுனில் உள்ளே இருப்பதற்கு இதைக்காட்டிலும், பாதுகாப்பான, தூய்மையான, அமைதி ததும்பும் வேறொரு இடம் அவர்களுக்கு வாய்த்திருக்க முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர். “நான் சென்றாகவேண்டும், எனக்குக் கடமைகளும், குடும்பமும் உள்ளது,” என்கிறார் ஹைதராபாத் செல்லத் தயாராகும் ஒருவர். “இங்கு நான் கழித்த நாட்களை ஒருபோதும் மறக்கமாட்டேன். இவ்வளவு பத்திரமாக, பாதுகாப்பாக உணர்ந்ததை உலகின் வேறெந்த இடத்திலும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.”
பெரும்பாலானவர்களும், ஈஷா யோக மையத்தின் பாதுகாப்பான, உத்தரவாதமான உணர்வை அவர்கள் வெளி உலகில் பெரிதும் இழந்துவிடுவார்கள் என்று கூறுகின்றனர். UK திரும்பவிருக்கும் ஒரு வெளிநாட்டுப் பயணி பகிர்ந்துகொள்கிறார்,” இது ஒரு பிறவியின் சாதனா! வாரக்கணக்காக அனைவருடனும் வாழ்தல், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனைகள் செய்து, சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற அனைத்து நடைமுறைகளும் இதில் அடங்குகிறது. மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் நாங்கள் முன்னணியில் நிற்பதற்கு எங்களுக்கு ஈஷா ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கிறது. இதைப்போன்ற ஒரு நேரத்தில் எனது உடலில் நிகழ்ந்த மாற்றங்கள், என் ஆரோக்கியத்தின் மாறுபாடுகள், என் சக்தி மற்றும் மனதளவில் சமநிலையில் இருப்பதற்கான எனது திறன் அசாதாரணமானது.”
Subscribe
யோக மையம் அமைந்துள்ள தொண்டாமுத்தூர் பகுதியின் நிர்வாகப் பிரிவுப் பகுதியில் நோய்த்தொற்று அதிகரிக்கும்பட்சத்தில், யோக மைய வளாகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற உறுதியை மார்ச் மாதம் சத்குரு அவர்கள் வழங்கினார்.
மருத்துவ பரிசோதனை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கிருமி நாசினி தெளித்தல், தன்னார்வலர்களுடன் சமூக இடைவெளி காத்தல் மற்றும் இவைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய பாதுகாவலர்கள் ஆகிய அனைத்துக்கும் யோக மையம் ஒரு தீவிர கவனத்திற்குரிய வழிமுறையை வடிவமைத்தது. மேலும், தினமும் நிலவேம்பு கஷாயம் இரண்டு முறையும் மற்றும் சுக்கு காபி, நோய் எதிர்ப்பு பானங்கள் இரண்டு முறையும் பரிமாறப்படுகின்றன. நுரையீரல் மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை பலப்படுத்துவதற்கு, சத்குருவால் வடிவமைக்கப்பட்ட ஒரு எளிமையான யோகப் பயிற்சியாகிய சிம்மக் கிரியாவும். இங்கு வசிப்பவர்களுக்கு கற்றுத்தரப்பட்டுள்ளது. இந்த 3- நிமிடப் பயிற்சி ஆன்லைனில் பரவலாக்கப்பட்டதுடன், சில மருத்துவர்கள் அடங்கலாக பலரும் பயிற்சியின் திறன் குறித்து சான்றளித்துள்ளனர். பாதுகாப்புக்குப் பக்கபலமாக, சத்குருவின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்ட விபூதியும் யோக மைய வாசிகளுக்கு 40 நாட்களுக்கு வழங்கப்பட்டது. பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்படும் உணர்வை வழங்கி, பெரும் ஆறுதலுக்கு ஆதாரமாக விளங்கிய பிரதிஷ்டை செய்யப்பட்ட விபூதிக்கு அவர்கள் நன்றி பாராட்டுகின்றனர்.
பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய மக்கள், பொதுமக்களிடம் இருந்து விலக்கப்பட்டு, special wristbands வழங்கப்பட்டு, அவர்களுக்குத் தனியாக உணவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் தினசரி மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட, தீவிரக் கவனிப்புக்காக, தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் குழுவின் கீழ் பராமரிக்கப்பட்டனர். லாக்டவுன் துவங்கியதில் இருந்து, மையத்தில் ஒவ்வொருவரும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை கட்டாயமாக பரிசோதிக்கப்படுகின்றனர். அத்தியாவசியக் காரணங்களுக்காக மையத்திற்குள் வருகை தருபவர்கள் மற்றும் மையத்திலிருந்து வெளியே செல்பவர்கள், ஒவ்வொரு முறை உள்ளே வரும்போதும், பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் முன், பரிசோதிக்கப்பட்டு, அவர்களது வண்டிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றது.
யோக மையத்தின் முன்னெச்சரிக்கை பராமரிப்பு நடவடிக்கைகளில், கவன ஈர்ப்பு அறிவிப்பு பலகைகள், குறிப்பிட்ட இடைவெளிகளில் சானிடைசர் வைத்திருத்தல், சுவாச உறுப்பு குறித்த விஷயங்கள் மற்றும் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், பரிமாறுதல் அல்லது உணவு தயாரித்தல் மற்றும் பொதுப் பரப்புகளைத் தொட்டதற்குப் பிறகு என்று குறிப்பிட்ட செயல்பாடுகளின்போது கைகளைச் சுத்தம் செய்வதைக் கட்டாயமாக்கும் பழக்க வழக்கங்கள் குறித்து, இந்த மாறுபட்ட சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் அனைவருக்கும் பயிற்சி அளிப்பதும் அடங்கியுள்ளது.
அறிவிப்பு வாசகங்கள் தாங்கிய பாதுகாவலர்களும், தன்னார்வலர்களும் ஒருவருக்கொருவர் இடைவெளியுடன் இருப்பதை நினைவூட்டுகின்றனர். அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடங்களில், தனிமனிதர்களுக்கு இடையில் இடைவெளி இருக்கவேண்டியதை வரைபடங்கள் குறிக்கின்றன. அரசாங்க வழிகாட்டுதல்படி, ஈஷா யோக மையம் தினமும் மூன்று முறை கிருமி நாசினி கொண்டு தெளிக்கப்படுகிறது. அதிகம் தொடப்படும் பரப்புகள் அதிக முறை சானிடைஸ் செய்யப்படுகிறது.
களத்தில் இறங்கிச் செயல்படும், ஈஷாவின் வைரஸை வெல்வோம் (#BeatTheVirus) நோய்த்தொற்று நிவாரண முன்னெடுப்பானது, தமிழக கிராமங்களில், தினமும் சமைக்கப்பட்ட உணவு மற்றும் நிலவேம்பு கஷாயம் விநியோகிப்பதை, ஏப்ரல் மாதத்திலிருந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. கொரோனா காலகட்டத்தில், ஈஷா யோக மையத்தில் காலமான, "பைரவா" என்ற காளைமாட்டின் நினைவாக, சத்குரு அவர்கள் ஒரு ஓவியத்தை தீட்டினார். ஏலத்தில் விடப்பட்ட அந்த ஓவியம் மூலம் 5.1 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. அதற்குமுன், சத்குரு அவர்கள் "முழுமையாய் வாழ" எனும் தலைப்பில் வரைந்த ஒரு ஓவியம் 4.2 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த இரு ஓவியங்களிலிருந்து ஏலத்தில் பெறப்பட்ட முழுத் தொகையையும் சத்குரு அவர்கள் ஈஷாவின் சமூகநலத் திட்டங்களுக்கு நன்கொடையாய் வழங்கினார்.
யோக மையத்தை மீண்டும் திறப்பது குறித்த அரசாங்கத்தின் ஆணைக்காக காத்திருக்கும் நிலையில், இதுவரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், ஒருவருக்கொருவர் போதுமான இடைவெளியுடன் இருப்பது, சுகாதார முறைகள் மற்றும் சமூக விலகல் போன்றவைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தக்கூடிய விதத்தில் விரிவான நிர்வாக வழிகாட்டு முறைகளுடன், சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் மையத்திற்கு வருபவர்களை வரவேற்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை யோக மையம் செய்து வருகின்றது. இந்த முன்னேற்பாடுகள், நீண்ட நாட்களுக்குப் பிறகு பொதுமக்களுக்கு மையம் திறக்கப்படும்போது, கடந்த நான்கு மாதங்களில் வென்ற பலன்களை உறுதிப்படுத்துவதாக இருக்கும்.
ஆசிரியர் குறிப்பு: இந்தக் கட்டுரை ஜூன் 12, 2020 அன்று, Free Press Journal பத்திரிக்கையில், “லாக்டவுன் தளர்வுகள் துவங்கியுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அற்ற ஈஷா யோக மையம்” என்ற தலைப்பில் வெளியானது