மஹாசிவராத்திரி சாதனாவால் மாறிய என் வாழ்க்கை!
பெங்களூருவை சேர்ந்த காவ்யா அவர்கள் மஹாசிவராத்திரி சாதனா பற்றிய தன்னுடைய வியத்தகு அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
பெங்களூருவை சேர்ந்த காவ்யா அவர்கள் மஹாசிவராத்திரி சாதனா பற்றிய தன்னுடைய வியத்தகு அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
சில வருடங்களுக்கு முன்னர் தகவல் தொழில்நுட்ப துறையில் இருந்த எனக்கு பணியின் மீது சலிப்பு உண்டானது. என்னுள் ஆத்மார்த்தமான இந்த தேடல் எழுந்தது: "நான் மகிழ்ச்சியாக இல்லை. பின்பு எதற்கு இந்த பணியில் உள்ளேன்?". எது உண்மையில் என்னை மகிழ்ச்சியாக வைக்கும் என்று அறிவதற்கு தீர்மானித்த நான், என் பணியை ராஜினாமா செய்தேன்.
புகைப்பட கலையில் இருந்து உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் வரை வெவ்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் எதுவும் என்னுள் இருந்த வெறுமையை நிறைவு செய்யவில்லை. ஒருகட்டத்தில் என்னுள் ஏதோ கதியற்று புலம்பியது "கடவுளே! எனக்கு உதவிசெய். வழிகாட்டு"
இவ்வாறாக நான் நிர்கதியாய் உணர்ந்தபடி, என் கேள்விகளுக்கெல்லாம் விடைதேடி காத்துக்கொண்டு இருந்தேன். ஒருநாள் என் கணவர் ஒருசெய்தி ஊடகத்தில் ஒளிபரப்பான சத்குருவின் பேட்டியை பார்க்கச்சொல்லி வற்புறுத்தினார். அப்பொழுது அந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமாகி இருந்தது.
"குருமார்"களைப் பற்றி எனக்கு இருந்த அபிப்பிராயத்தால் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தயங்கினேன். ஆனாலும் என்னுள் ஒரு எண்ணம் தோன்றியது, "ஒரு பிரபலமான குரு என்னதான் சொல்கிறார் என்று பார்க்கலாம்!". அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது, சிக்கலான பல விஷயங்களை சத்குரு எப்படி இவ்வளவு எளிமையாக விளக்குகிறார் என மிகவும் வியந்துபோனேன்.
Subscribe
என் வாழ்வில் முதல்முறையாக அவை அனைத்தும் என் உணர்வுக்கு வந்தன. அன்றைய நாள் முதல் சத்குருவின் காணொளிகளை காண்பது என் வாழ்வில் வழக்கமாக மாறியது. வாழ்வை நான் உணரும் விதத்தை அது பெருமளவு பாதித்தது.
ஒருநாள் மஹாசிவராத்திரி சாதனா பற்றி ஈஷா வலைதளத்தில் காணநேர்ந்தது. வேறெந்த யோகப் பயிற்சிகளையும் நான் அதுவரை செய்ததில்லை, இருந்தும் என் உள்ளுணர்வு கூறியது "என்ன நேர்ந்தாலும் சரி, இதை நான் கண்டிப்பாக செய்யவேண்டும்". சாதனா என்னும் பாதையை தேர்ந்தெடுக்க சொல்லி சத்குரு என்னை அறிவுறுத்துவதாக எனக்கு தோன்றியது. மிகுந்த உற்சாகத்தோடு அந்த சாதனாவை தொடங்கினேன். இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் காலை 4:00 மணிக்கே எழுந்தேன். சிவநமஸ்காரம் மற்றும் உச்சாடனை செய்தேன். நான் இவ்வாறு ஒரு செயல் செய்வேன் என்று இதுவரை நான் நினைத்ததில்லை.
இந்த பயிற்சிகளை செய்த மூன்றே நாட்களில் என்வாழ்வில் முதல்முறையாக ஒரு அமைதியை உணர்ந்தேன். அதன் தீவிரத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நாட்கள் செல்லச் செல்ல இன்னும் தீவிரமாய் மிக ஆனந்தமாய் இந்த அனுபவம் அமைந்தது.
மஹாசிவராத்திரி எனும் அற்புத அனுபவம்!
மஹாசிவராத்திரி இரவில் மிகுந்த ஆர்வத்தோடு ஈஷா மையத்தில் நிகழ்ந்த கோலாகலமான நிகழ்வை தொலைக்காட்சியில் கண்டேன். சத்குரு வழிநடத்திய நள்ளிரவு தியானத்தின்போது என் வாழ்வில் முதல்முறையாக உடலை மனதை தாண்டிய ஒரு அனுபவத்தை உணர்ந்தேன். அது ஒரு ஆனந்தமயமான அனுபவம். தியானம் தொடரத் தொடர பெரும்பரவசத்தில் என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. மிக சாதாரணமான எனக்கு இப்படி ஒரு அனுபவம் நிகழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மூடியகண்களை திறக்க எனக்கு விருப்பம் எழவில்லை. எங்கும் பேரானந்தம் என்னும் நிலையில் நான் இருந்தேன். சிறிது நொடிகளே இதை உணர்ந்தாலும் இந்த அனுபவம் மிகவும் ஆழமான தாக்கத்தை எனக்கு கொடுத்தது. இது என்றும் நீடித்து இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். எனவே உடனடியாக ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியில் (Inner Engineering) நான் கலந்துகொள்ள முடிவுசெய்தேன்.
ஷாம்பவி பயிற்சிக்கு பின்னர் என் வாழ்வு பெரும்மாற்றம் கண்டது. என்னால் இயலும் என்றே நான் அறிந்திராத பல வேலைகளை நான் இப்பொழுது செய்துவருகிறேன். என் வாழ்வில் மிக நிம்மதியாக இருக்கிறேன். இத்தகைய அரிய வாய்ப்பை நமக்கு வழங்கியதற்கு சத்குருவிற்கு எவ்வளவு நன்றிகளை சமர்ப்பித்தாலும் தகும்.
என்றும் நன்றியுடன்,
காவ்யா.B.V., பெங்களூரு
குறிப்பு:
மஹாசிவராத்திரி இரவு நமக்கு வழங்கும் எல்லையில்லா சாத்தியங்களுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் விதமாக சத்குரு சில பயிற்சிகளை வழங்கியுள்ளார்கள். இதனை, மஹாசிவராத்திரிக்கு முந்தைய 40, 21, 14, 7 அல்லது 3 நாட்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும். இதனை 8 வயதிற்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.
இந்த மஹாசிவராத்திரி சாதனாவின் பலன்குறித்து சத்குரு பேசும்போது, "3 வருடம் ஆன்மீகப் பயிற்சி செய்துகிடைக்கும் பலனை இந்த மஹாசிவராத்திரி சாதனாவை 40 நாட்கள் செய்வதில் பெற்றுவிடலாம்," என்றார்.
இந்த சாதனா குறித்து விவரங்கள் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்.