சில நாட்கள் முன்பு, ஒரு ட்விட்டர் பயனாளி சில ட்வீட்களை பதிவிட்டுள்ளார். கிருஷ்ணரின் தாய் யசோதா குறித்து சத்குரு பேசியதை தீய எண்ணத்துடன் எடிட் செய்து அதில் வெளியிட்டுள்ளார். யசோதா, கிருஷ்ணரின் மேல் வைத்துள்ள அன்பு காமம் தொடர்பானது என்னும் விதமாக அவர் எடிட் செய்திருக்கிறார்.

அவர் இந்த எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் மூலமாக ஒரு சர்ச்சையை கிளப்பி அதன் மூலம் சத்குரு மீது புழுதி வாரி தூற்றுவதற்கு முயற்சித்து அதில் தோல்வி அடைந்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக பெரும்பாலோனோர் இதன் பின்னுள்ள பொய்களை கண்டு கொண்டனர்.

இந்த விளக்கப் பதிவு, எடிட் செய்யப்படாத ஒரிஜினல் வீடியோவில் சத்குரு பேசியதன் சரியான நோக்கத்தைj இங்கு விவரிக்கிறது. அந்த அற்புதமான பெண்கள் அனைவருமே எப்படி கிருஷ்ணரின் பக்தர்களாக இருந்தார்கள் என்பதை சத்குரு விவரித்ததை அந்த ஒரிஜினல் வீடியோ தெளிவுபடுத்துகிறது. அந்த பகுதிகள் வேண்டுமென்றே அந்த ட்விட்டர் பயனாளியால் நீக்கப்பட்டிருக்கிறது.

ஒரிஜினல் வீடியோவில், சத்குரு, கிருஷ்ணரை, மனித விழிப்புணர்வின் மகத்தான வெளிப்பாடாக புகழ்ந்துள்ளார். எவருமே கிருஷ்ணரின் தீவிர தெய்வீகத் தன்மையின் ஆற்றலால் அவனின் பக்தராக மாறுவதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதையும் அதனால்தான் அவனின் தாயார் கூட அவனின் பக்தராகவே மாறினார் என்பதையும் சத்குரு விவரிக்கிறார். தெய்வீகத்தின் மேல் உள்ள அன்பே பக்தி என்பதைக் குறித்து சத்குரு மேலும் விவரிக்கிறார். மற்ற பல வீடியோக்களிலும், பக்தி என்பது எப்படி பொருள் உடலுக்கும் அப்பாற்பட்டதாக விளங்குகிறது என்பதையும் சத்குரு தெளிவுபடுத்தியுள்ளார். இது, முக்தி அடைவதற்கான அனைத்தும் அடங்கிய ஒரு செயல்முறையாகும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு இந்த கண்ணோட்டத்திலேயே வெட்டப்படாத ஒரிஜினல் வீடியோவில் பேசியிருக்கிறார். அந்த உரை, 2005ல் கிருஷ்ணனின் விளையாட்டுத்தனமான பாதை குறித்து மிகவும் விமரிசையாக சத்குரு நடத்திய "லீலா" என்னும் நிகழ்ச்சியிலிருந்து எடுக்கப்பட்டதாகும். சத்குரு பேசியதின் சரியான கண்ணோட்டத்தை நீங்கள் அறியும் பொருட்டு அதே நாளில் அந்த நிகழ்ச்சியில் பேசியதை நாங்கள் இங்கு கீழே கொடுத்திருக்கிறோம்:

"கிருஷ்ணன் ஆரம்பத்திலிருந்தே அனைத்தும் ஒன்றிணைந்தவனாக இருந்திருக்கிறான். தான் மண்ணை சாப்பிட்டதற்காகவோ அல்லது மண்ணை சாப்பிடவில்லை என்பதைக் காண்பிப்பதற்காகவோ கிருஷ்ணன், குழந்தையாக இருந்தபோது வாயைத் திறந்த காலத்திலும் கூட அவன் அனைத்தும் ஒன்றிணைந்தவனாக இருந்திருக்கிறான். அவன் கோபியர்களுடன் நடனமாடிய போது கூட, அவன் அனைத்தும் ஒன்றிணைந்தவனாக இருந்திருக்கிறான். அவன் எந்த காலத்திலுமே அந்த கோபியர்களுடன் இன்பம் துய்க்க நினைத்ததில்லை."

"ராஸ்...... ஒரு வேளை ஆங்கிலத்தில் சரியான மொழிபெயர்ப்பு இல்லாமல் இருக்கலாம். அதை "வாழ்வின் சாரம்" என்பதாக அர்த்தம் கொள்ளமுடியும். எனவே நாம் சொல்கிறோம், கோவிந்தா என்பது வாழ்வின் சாரத்துடன் விளையாடிய ஒருவர் என்று. எனவே அந்த சமூகங்களில், நிறுத்தமின்றி தொடர்ந்து நடந்த அந்த நடனங்கள் - குறைந்தபட்சம் மாதத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் அல்லது பணி நாட்களின் மாலை வேளைகளில் - ராசலீலைகள் என்று குறிப்பிடப்படுகின்றன. அதன் பொருள் வாழ்வின் சாரத்துடன் விளையாடுவது என்பதாகும். நாளடைவில் அந்தத் தருணங்கள் கோபமோ ஆசையோ அற்ற வெறுமனே உயிரோட்டம் நிறைந்ததாக அடையாளம் காணப்பட்டது. கோபமோ ஆசையோ இல்லாததால் அந்த வாழ்வின் சாரம் தங்குதடையின்றி அங்கே வெளிப்பட்டது."

இந்தக் கலாச்சாரத்தில் அனைத்து பக்தர்களுமே பிரேமம் கொண்டவர்களாகத்தான் அறியப்படுகின்றனர். அந்த புரிதல் இன்றைக்கும் கூட மிகவும் உண்மையானதாக இருக்கிறது. உதாரணமாக, இன்றைக்கும் பலர், கிருஷ்ணனின் மேல் உள்ள பிரேமம் காரணமாக தங்களை "கிருஷ்ண ப்ரேமி" என்று அழைத்துக் கொள்கின்றனர். இலட்சக்கணக்கான பக்தர்கள் தங்களைத் தாங்களே அவ்வாறு கிருஷ்ணனின் காதலர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். இதில் எவ்விதமான காம உணர்வுகளும் கிடையாது.

துரதிர்ஷ்டவசமாக, தீய உணர்வுள்ள இந்த ட்விட்டர் பயனாளி, "காதலர்" என்னும் வார்த்தை காம உறவுகளுக்கு மட்டுமே உரித்தானது என்று நம்புவதாகத் தெரிகிறது. அதனால் சத்குருவின் வார்த்தைகளை, தன் கெட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, திரித்து பயன்படுத்த முயற்சிக்கிறார்.

இந்த வீடியோ, நம் கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக காண்பிக்கும் தீய நோக்கத்தோடு கண்டிக்கத்தக்க வகையில் எடிட் செய்யப்பட்டிருக்கிறது. துரதிர்ஷ்டமான இந்த செயல் சத்குரு பற்றியதல்ல, இது கிருஷ்ணனைப் பற்றியும் இந்த பாரத தேசத்தின் கலாச்சாரம் பற்றியுமானது.