தேர்வு நேரத்திலும் விளையாட்டு... வித்தியாசமான ஈஷா வித்யா!
ஈஷா வித்யா மாணவர்களின் வாழ்வில் ‘யோகா’... எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதையும், விளையாட்டும் கொண்டாட்டமும் அவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது எப்படி என்பதையும் இந்த பதிவு உணர்த்துகிறது.
புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள் -பகுதி 8
ஈஷா வித்யா மாணவர்களின் வாழ்வில் ‘யோகா’... எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதையும், விளையாட்டும் கொண்டாட்டமும் அவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது எப்படி என்பதையும் இந்த பதிவு உணர்த்துகிறது.
“கல்வி என்பது குழந்தைகளை நீங்கள் விரும்பியபடி வடிவமைப்பதன்று, அறிவதற்கான அவர்களின் இயல்பான விருப்பத்தை ஊக்குவிப்பதை குறித்தது!” -சத்குரு
“9ஆம் வகுப்பு வரை (ஈஷா வித்யாவில் நான் சேர்ந்த ஒரு வருடத்திற்கு பிறகு) கணித பாடத்தில் நான் மிகவும் பின்தங்கியிருந்தேன். ஆனால் இங்கு எனக்கு சொல்லித்தரப்படும் வழிமுறை வித்தியாசமாக இருந்ததால், நான் கணிதத்தை விரைவிலேயே விரும்பத் துவங்கினேன். மெதுவாக நான் அந்த பாடத்தில் முன்னேற்றம் கண்டேன்.
இப்போது நான் உண்மையில் கணிதத்தில் பட்டம் படிக்கும் ஆசையும் கொண்டுள்ளேன்.” -கார்த்திக் U. G.
நான் தமிழ் பாடத்தில் மிகவும் பின்தங்கி இருந்ததால் எனது தமிழ் ஆசிரியை என்மீது கூடுதலான கவனம் செலுத்தினார். நான் தமிழில் தேர்ச்சி பெற்றேன், அவருக்கு எனது நன்றிகள்! -கௌதம் E., (நிலம் நன்கொடை வழங்கியவரின் மகன்)
மனப்பாடம் செய்யும் எனது மற்ற நண்பர்களைப் பார்க்கும்போது, நாங்கள் ஈஷா வித்யாவில் வெறுமனே மனப்பாடம் செய்யாமல் எப்படி புரிதலின் அடிப்படையில் கற்றுக்கொள்கிறோம் என்பதை எடுத்துக்கூறுகிறேன்.” -ஜனார்தன்.C
Subscribe
முந்தைய பள்ளியில் எனக்கு ஆங்கில பாடம் என்றால் வெறுப்பாக இருக்கும். இங்கே ஈஷா வித்யாவில் விளையாட்டு தன்மையுடன் கற்றுத்தரப்படும் விதத்தைப் பார்க்கையில் மற்றும் அங்கில வகுப்புநேரத்தில் ஆங்கிலத்தில் பேச ஊக்குவிக்கப்படும் விதத்தைப் பார்க்கையில், எனக்கு இப்போது ஆங்கிலம் மிகவும் பிடித்த பாடமாகிப்போனது.” ஜெகன். R
எப்போதும் கொண்டாட்டம், விளையாட்டு!
ஈஷா வித்யாவில் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் பாரம்பரிய முறையில், ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றாக இணைந்தபடி முழு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்று கேட்கும்போது மாணவர்கள் சொல்லும் இரண்டாவது பொதுவான விஷயம், “நாங்கள் இங்கு பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகிறோம், மற்றும் அந்த நாட்களில் நாங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிவோம்!”
ஈஷா வித்யாவிலுள்ள மாணவர்கள் ஒவ்வொரு நாளும் விளையாடுகிறார்கள். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் உட்பட ஈஷா வித்யா மாணவர்கள் தினந்தோறும் குறைந்த பட்சம் அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேரம் (தேர்விற்கு முந்தையநாள் கூட) விளையாடுகிறார்கள். முழுமையான ஈடுபாடுடன் முழுமையாக கொண்டாடும் இவர்கள், தேர்விற்கு தயாராகும் 6 மாத காலங்களில் கூட இரவு 11 மணிக்கு மேல் படிப்பதில்லை; படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு சக மாணவர்கள் உதவுகிறார்கள்; ஆடுவது பாடுவது போன்ற கேளிக்கை விஷயங்களில் அடிக்கடி மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் சிறப்பான மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைகிறார்கள்.
யோகா செய்யும் மாயங்கள்!
பள்ளியில் சேர்ந்ததும் ஈஷா வித்யா மாணவர்களுக்கு ஈஷா யோகா அறிமுகம் செய்யப்படுகிறது. அவர்களின் மனக்குவிப்பு மற்றும் கவனம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மட்டுமலாமல், அவர்கள் சமநிலையான மனிதர்களாக வளர்வதற்கு யோகா துணைநிற்கிறது. இங்கே சில மாணவர்களின் அனுபவப் பகிர்வுகள் இதனை நமக்கு உணர்த்துகிறது.
மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த புத்திசாலி மாணவியான கவிதா ஈரோட்டிலுள்ள சிறந்த பள்ளியில் முழுமையான கல்வி உதவித்தொகை பெற்று படிப்பதற்கான வாய்ப்பை பெற்றாள். அங்கு மெடிக்கல் கல்லூரியில் இடம் கிடைக்கும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சியும் சிறந்த கல்வியும் வழங்கப்படுகிறது.
தான் ஒரு மருத்துவராகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதில் மகிழ்ச்சிகொண்ட கவிதா ஈஷா வித்யா ஆசிரியர்களுக்கு தொடர்புகொண்டு பேசிவருவதோடு தனது பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளைக் கொண்டாட ஈஷா வித்யாவிற்கு அவ்வப்போது வருவாள். ஏழ்மையிலும் சிறப்பான கல்விச் சூழலை பெறுவதற்கு துணைநின்ற ஈஷா வித்யா, அவள் வயதைக் கடந்த பக்குவத்தையும் வழங்கியுள்ளது. அவளது புதிய பள்ளியில் இதற்கான பலனைக் கண்கூடாக காணமுடிந்தது.
சமீபத்தில் அவளது அறையிலுள்ள சக மாணவி எதிர்வரவிருக்கும் தேர்வுகள் குறித்த பயம் மற்றும் அழுத்தத்தால் தனது மணிக்கட்டுகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாள். ஆனால், கவிதா இதற்காக சஞ்சலம்கொள்ளவில்லை, மாறாக, இதுபோன்ற தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என மேலும் தன்னை செழுமைப்படுத்திக்கொண்டாள்.
ஈஷா வித்யா போன்ற ஒரு அற்புதமான பள்ளியில் படிக்கும் வாய்ப்பை பெற்றதற்காக சத்குருவிற்கு தனது நன்றிகளை அவள் தெரிவிக்கிறாள். ஈஷா வித்யா பள்ளி மாணவர்களுக்கு விரும்பிய துறையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் திறனையும் வழங்கி நம்பிக்கை தருவதாக மட்டுமல்லாமல், சமநிலையான மனநிலையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனையும் வழங்கும் பள்ளியாகவும் விளங்குகிறது.
“எனது 12ஆம் வகுப்பு வரை நான் வேறு பள்ளிக்கு செல்லாமல் ஈஷா வித்யாவில்தான் படிப்பேன். ஏனென்றால் இங்கு யோகா கற்றுத்தரப்படுகிறது!” வீட்டிற்கு அருகில் இருப்பதால் ஈஷா வித்யாவை விட்டு விலகி வேறுபள்ளியில் சேரச்சொல்லி தமிழ்செல்வனின் தந்தை அவனிடம் கூறியபோது, தமிழ்செல்வன் இப்படி சொன்னான். தற்போது 7ஆம் வகுப்பிலுள்ள தமிழ்செல்வனின் பெற்றோர் முழுமையான கட்டணம் செலுத்தி 40கி.மீ தொலைவிலுள்ள ஈஷா வித்யாவிற்கு அவனை அனுப்பி வைக்கின்றனர்.
“சார், ஏன் நீங்க ரொம்ப பதற்றமாக இருக்கீங்க? எல்லாம் சரியாக நடக்கும்!” தேர்விற்கு முன்பு தனது ஆசிரியரிடம் அஸ்வின். R இப்படி நம்பிக்கை வழங்கினான். ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் தேர்வு குறித்து கவலைகொள்ள, மாணவன் அவருக்கு நம்பிக்கை கூறுகிறான் -எங்கேயும் காணமுடியாத ஒரு காட்சி இது! இதுதான் யோகா செய்யும் மாயமோ?
நேர்மையை வளர்க்கும் “நேர்மை கடை”
குழந்தைகளிடத்தில் நேர்மை தன்மையை வளர்க்கும் விதமாக “Honesty Shop” / “நேர்மை கடை” எனும் ஒரு பிரமாதமான செயல்முறையை ஈஷா வித்யா பள்ளியின் முதல்வர் துவங்கியுள்ளார். எழுதுபொருட்களை ஒரு அலமாரி முழுவதும் பூட்டாமல் வைத்து, அங்கே அதற்கான முழுமையான விலைப்பட்டியலையும் தெளிவாக வைத்துவிடுகிறார்கள் (கண்காணிப்பு கேமரா ஏதும் இல்லை!). பணம் போடும்வகையில் ஒரு திறந்த கிண்ணம் ஒன்று அங்கே அலமாரியில் உள்ளது. மாணவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, சரியான தொகையை அந்த கிண்ணத்தில் வைத்துவிட்டு செல்கின்றனர். இதுபோன்ற ஒரு கடைக்காக ஒரு வங்கி நிதியுதவி செய்யுமா என எனக்கு வியப்பாக இருந்தது.
“பள்ளியில் நேர்மை கடை அறிமுகப்படுத்தியபோது, நேர்மையாக நடந்துகொள்வதற்கு தேவையில்லாத அழுத்தம் இருப்பதை நான் பார்த்தேன். முறையற்ற வகையில் நான் பொருட்களைப் பெறமுடியும்போது, நான் ஏன் நேர்மையாக இருக்க வேண்டும்? பல மாதங்களாக எனக்குள் நான் கேள்விகேட்டுக்கொண்டேன், மேலும் நான் பணம் செலுத்தாமல் ஒரு சில பொருட்களை எடுக்கவும் செய்தேன். பின்பு மெதுவாக நான் எனக்குள் “நேர்மை வழி” என்பதில் திருப்தி இருப்பதை உணர்ந்துகொண்டேன். இப்போது அது எனக்கு இயல்பான தன்மையாகி விட்டது. -ஒரு ஈஷா வித்யா மாணவர்.
தேர்வு நேரத்தில் சென்ற சுற்றுலா!
பொதுத் தேர்விற்காக நாங்கள் தயாரகிக்கொண்டிருந்த வேளையில் திருச்செங்கோடு மலைப்பகுதியில் தூய்மைப் பணிக்காக நாங்கள் சென்றிருந்தோம். அது மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவமாகவும் புத்துணர்வு தருவதாகவும் மனநிறைவான ஓர் அனுபவமாகவும் அமைந்தது. இதுபோன்ற வாய்ப்புகள் மற்ற பள்ளிகளில் கிடைக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.” கோகுலன் E.A. இந்த சுற்றுலா நிகழ்வு நிர்வாக பணியாளர்களில் ஒருவரான ஜெகதீஷ் அண்ணா மற்றும் இன்னொரு ஈஷா தன்னார்வத் தொண்டரான பாலாஜி அவர்களால் வழங்கப்பட்டது.
கட்டிடங்களில் அழகுணர்ச்சி... மனதிற்கு மகிழ்ச்சி!
அங்குள்ள கட்டிடங்களின் அழகுணர்ச்சியை வெகுவாக ரசித்துப் பார்த்தேன். பள்ளியின் விஸ்தாரமான வகுப்பறைகள் மற்றும் நடைபாதைகள் மற்றும் மென்மையான வண்ணத்தில் வரையப்பட்ட ஓவியங்கள், யானைகள் மற்றும் மீன்கள் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கரும்பலகைகள், சுவர்களெங்கும் குழந்தைகளால் வரையப்பட்ட ஓவியங்கள், நடைபாதை சுவர்களில் வரையப்பட்டிருந்த கணித விளையாட்டுகள், பறவைகள் வந்து முட்டையிட்டு குஞ்சுபொறிக்கும் விதமாக கூடுகள் நிறைந்திருக்கும் சிறிய வித்தியாசமான ஒரு தோட்டம், திறந்தவெளி தோட்டத்தில் படிக்கும் மாணவர்கள்... இதுபோன்ற ஒரு சில விஷயங்கள் இந்த இடத்தில் மகிழ்ச்சியை வரவழைக்கின்றன.
“முன்பு படித்த பள்ளியில் ஆசிரியர்களின் கண்களைக் கூட பார்ப்பதற்கு மிகவும் பயப்படுவேன். நான் முதலில் ஈஷா வித்யாவில் சேர்ந்தபோது ஒரு ஆசிரியர் என் முன்னே வந்து நிற்கும்போதெல்லாம், அவருக்கு பின்னாலிருக்கும் கரும்பலகையைத்தான் பார்ப்பேன். அந்த கரும்பலகை ஒரு யானை வடிவத்தில் அமைந்திருப்பதால் அதைப் பார்ப்பதில் எனக்கு அலாதி சந்தோஷம். அதோடு நடைபாதை வழியிலுள்ள வண்ணங்களும் அங்குள்ள தோட்டமும் எனக்கு மிகவும் பிடிக்கும். இத்தகைய தன்மைகளின் தாக்கமும் ஆசிரியர்களின் மென்மையான அணுகுமுறையும் என்னை கொஞ்சம் கொஞ்சமாக பயமில்லாமல் செய்தது” -நர்மதா, 11ஆம் வகுப்பு, 8 வயதில் பள்ளியில் சேர்ந்தவர்.
ஆசிரியர் குறிப்பு:
ஈஷா வித்யா பள்ளிகள் துவக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, "Innovating India's Schooling" என்ற தலைப்பில் நவம்பர் 5, 2016 அன்று கோவை ஈஷா யோக மையத்தில் தேசிய கல்வி மாநாடு நடைபெற்றது. சத்குரு, மாண்புமிகு மனித வளத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கல்வித்துறையில் உள்ள பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வு Live Blog செய்யப்பட்டது. அதன் தொகுப்பு இங்கே.