அடிப்படை வசதிகள்கூட முழுமையாக இல்லாமல், தரிசு நிலமாக இருந்த ஈஷாவிற்குள் வந்த முதல் ஐந்து ஆசிரமவாசிகளுள் ஒருவரான, இளம்பெண்ணின் 25 வருட பயணமிது. ஈஷா அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவரான மா கம்பீரி, ஈஷாவின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியிருப்பதுடன், மஹாசிவராத்திரி, வைபவ் ஷிவா, லீலா, ஈஷா ஃபெஸ்ட் போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துவதிலும் முக்கிய பங்காற்றியிருக்கிறார். சத்குரு அவர்களிடம் நேரடியாக பயிற்சிபெற்றுள்ள இவர், எதையும் நேர்த்தியாக ஒருங்கிணைப்பதோடு, வசிப்பிடங்களையும் மக்களையும் கருத்துடன் கவனித்துக்கொள்பவர். உதவிகேட்டு வருவோருக்கு மனமுவந்து உதவுபவர்.