குரு கோவிந்த் சிங் உருவாக்கிய வீரமிகு சீக்கியப் படை!
குரு கோவிந்த் சிங் எதற்காக ஒரு வீரமிகு சீக்கியப் படையை உருவாக்கினார் என்பது பற்றியும், சீக்கியர்களின் குருத்வாராக்களில் அவர்கள் செய்யும் அற்புதமான தன்னார்வத் தொண்டு பற்றியும் சத்குரு விளக்குகிறார்.
சீக்கிய சமூகம் ஒரு குறிப்பிட்ட வகை வரலாற்று சூழ்நிலையில் பிறந்தது. குரு நானக் வந்தபோது, அவர் ஒரு குறிப்பிட்ட மதத்தை ஆரம்பிக்கவில்லை, அவர் தன்னைச் சுற்றி ஒரு பெரிய குழுவைச் சேர்த்த குருவாக இருந்தார். அவர் எந்த ஒரு குறிப்பிட்ட மதகோட்பாட்டையும் குறித்துக்காட்டவில்லை; அவர் பொதுவாக கற்பித்தார்... அவரின் போதனைகள் உலகளாவியது. அவர் மக்களுக்கு சில குறிப்பிட்ட வகை தியானங்களுக்கும், பக்தி சாதனைகளுக்கும் தீட்சை வழங்கினார்.
குரு கோவிந்த் சிங்
பிறகு அவருக்குப் பிறகு மேலும் ஐந்து குருக்கள் வந்தனர்; ஆறாவது வந்தவருக்கு இக்குழுவை இன்னும் ஒருங்கிணைக்கப்பட்ட குழுவாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனெனில் நாட்டின் குறிப்பிட்ட பகுதியான பஞ்சாப், அந்த பஞ்சாபின் ஒரு பாதி இப்போது பாகிஸ்தானில் உள்ளது, ஒரு பாதி இங்கே உள்ளது.
Subscribe
எனவே, பஞ்சாப் புவியியல் ரீதியாக, துணைக்கண்டத்திற்குள் வந்த ஒவ்வொரு வெளி படையெடுப்பாளரும் இயல்பாகவே முதலில் பஞ்சாப்பைத் தாக்கக்கூடிய ஓர் இடத்தில் அது அமைந்துள்ளது.
இதனால் அங்குள்ள மக்களை அவர்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முயன்றனர். இவர்கள் எழுந்து நின்று சிறிது சண்டையிட்டனர்.
மேலும், அவர்களை ஒழுங்கமைக்காமல் விட்டுவிடுவதால் காரியங்கள் நடக்கப் போவதில்லை என்பதையும், வேறு வழியில்லை என்பதையும் குரு கோவிந்த் சிங் பார்த்தார். எனவே, முறையான ஒரு மதமாக அவர் நிறுவினார். அவர்கள் வாழ்வதற்கும் போரிடுவதற்குமான எளிய கோட்பாடுகள்.
அதனால் ‘நிஹாங்ஸ்' என்று அழைக்கப்பட்ட குரு கோவிந்த் சிங்கின் படைவீரர்கள், இன்னும் அதே வழியில் இருக்கின்றனர். எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக அங்கு செல்லும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. அங்கு நிஹாங்ஸ் அவர்களின் தற்காப்பு திறன்களை வெளிப்படுத்தினர். அவர்கள் இன்னும் ஏறக்குறைய 300 வருடங்களுக்கு முன் குரு கோவிந்த் சிங் காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தனரோ, அப்படியே ஆயுதம் ஏந்தியிருக்கின்றனர். இன்னும் அப்படியே வாழ்கின்றனர்.
இன்றும் மாறாத சீக்கியர்கள்
அவர்கள் இன்னும் அப்படியே வாழ்கின்றனர், இன்னும் குதிரை சவாரி செய்கின்றனர். அவர்களின் திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தினர். மேலும், வயதானவர்கள், 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள், இரண்டு குதிரைகளின் மேல் நின்றபடி சவாரி செய்தனர், தெரியுமா? இரண்டு குதிரைகள் முழு வேகத்தில் செல்கின்றன, அந்த இரண்டு குதிரைகளின் மேல் நின்றுகொண்டு இப்படி சவாரி செய்துகொண்டு, மக்கள் கீழே விழுகிறார்கள், அவர்கள் அத்தகைய காட்டுத்தனமானவர்கள், தங்களின் வாள் மற்றும் வில் அம்பு திறமைகளைக் காட்டினார்கள்.
குரு கோவிந்த் சிங் எப்படி ராணுவத்தை உருவாக்கினாரோ, அவர்கள் இன்னும் அதே பாணியில், அதே வகையான ஆடை, அதே வகையான ஆயுதங்கள், அதே வகையான மனப்பான்மை (அதே வகையான போர்க்குணம்) உள்ளவர்களாக இருக்கின்றனர். ஒரு பகுதியினர், எவ்வளவு பேர் என்று தெரியாது, அவர்கள் மிக இளம் வயதிலேயே இவற்றை பயிற்சி பெறுகிறார்கள். அவர்களின் முழு வாழ்க்கையே போருக்காக. அது மிகவும் உருக்கமாக, சுவாரஸ்யமாக இருந்தது. எவ்வாறு அவர்கள் ஒரு காலகட்டத்தில் இருக்கிறார்கள், எவ்வாறு அவர்கள் அதிலேயே நிலைத்திருந்தனர், ஏனென்றால் அந்த நேரத்தில் அந்த சமூகத்தை காப்பதென்பது, அவர்களுக்கு தலையாய புனிதக் கடமையாகக் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அது மிகவும் பொருத்தமான விஷயம். ஆனால் நீங்கள் திரும்பிப் பார்த்தால், அவர்கள் ஏன் அப்படி ஆனார்கள் என்று பார்த்தால், அவர்கள் அப்படி ஆவதற்கு போதுமான காரணம் இருந்தது.
பக்தியும் அர்ப்பணிப்பும்
மேலும், மிகவும் நம்பமுடியாத விஷயம் முழு சீக்கிய சமூகத்திலும், அவர்களின் கோவில்களிலும் அவர்களின் குருத்வாராக்களிலும் செய்யப்படுகின்றன. இது கர்சேவா என்று அழைக்கப்படுகிறது, இது தன்னார்வத் தொண்டு. எல்லாம் தன்னார்வத்தின் அடிப்படையில் நடக்கிறது. ஒரு லட்சம் பேர் இருந்தாலும், கூட்டம் அதிகமாக இருந்தாலும், அந்த இடம் மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. எல்லாம் அதீத தூய்மையாக வைக்கிறார்கள்; மக்கள் இதை தங்கள் பக்தியின் வெளிப்பாடாக எடுத்துக்கொண்டு, தங்கள் சொந்த ஆடைகளால் தரையை சுத்தம் செய்கிறார்கள். நீங்கள் ஒரு சால்வை அணிந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், இந்த சால்வையால் நீங்கள் தரையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை சுத்தம் செய்கிறீர்கள்.
இப்போது ஆயிரம் தன்னார்வலர்கள் தாங்களாகவே வருகிறார்கள், அவர்கள் ஒழுங்கமைக்கப்படவில்லை என்றாலும். நீங்கள் இன்று வருகிறீர்கள், தரையின் ஒரு பகுதியை சுத்தமாக வைத்திருக்கிறீர்கள். அதுவே அன்றைய உங்களின் சாதனாவாக இருக்கும். இதனால் கோவில் மிகவும் சுத்தமாக இருக்கிறது. மக்கள் தாங்கள் உடுத்திய உடைகளாலேயே தங்கள் சொந்த ஆடைகளால் சுத்தம்செய்து வருகின்றனர். அதீத பக்தி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு உண்மையில் மனதைக் கவர்ந்தது. அவ்வளவு பக்தி மற்றும் அர்ப்பணிப்பு நிலைகளில் பலரைப் பார்ப்பது மிகவும் மனதைத் தொடுவதாகவும் அழகாகவும் இருக்கிறது.