உள்நோக்கம் இல்லாமல் கெட்ட வார்த்தை பேசினால் என்ன தவறு?
IIT மும்பையில் நடைபெற்ற Youth and Truth நிகழ்ச்சியின்போது, கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது குறித்த ஒரு கேள்விக்கு சத்குரு அளித்த பதில் இங்கே.
கேள்வி:
கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் நாங்கள் அடிக்கடி கண்டிக்கப்படுகிறோம். ஆனால் அந்த வார்த்தைகள் இப்போது பேச்சு வழக்கிலேயே பயன்படுத்தப்படுகிறது. நான் அந்த வார்த்தைகளை எந்த உள்நோக்கமும் இல்லாமல் சாதாரணமாக பயன்படுத்துவதில் என்ன பெரிய தவறு இருக்கிறது?
சத்குரு:இப்படி நடந்தது, கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்குப் போனார். மூன்று நாட்களுக்குப் பிறகு தனது அம்மாவை அழைத்து, “இவருடன் என்னால் இருக்க முடியாது. அவர் எப்போதுமே ஆங்கிலத்தில் அந்த நான்கு எழுத்து வார்த்தையையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்” என்று அந்த பெண் சொன்னார். அதற்கு அம்மா, “எந்தவிதமான வார்த்தைகளை அவர் பயன்படுத்துகிறார்” என்றுகேட்டார். அதற்கு அந்தப் பெண் "cook, clean, wash, iron" (சமை, சுத்தம் செய், துவை, துணிகளை அயர்ன் பண்ணு) என்ற வார்த்தைகளையே சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார். சில வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது? நீங்கள் கெட்ட வார்த்தைகள் என்று பொதுவாக குறிப்பிடுவது இன்றைக்கு...
Subscribe
ஒவ்வொரு மொழியிலும் சில கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன. சில வார்த்தைகள் கொச்சையாக இருக்கும். சில வார்த்தைகள் குறிப்பிட்ட நோக்கத்தோடு சொல்லப்படுகின்றன. சில நம் குடும்பத்தை நோக்கி சொல்லப்படுகின்றன. சில ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதற்காக சொல்லப்படுகின்றன. ஆனால் பொதுவாக ஆங்கிலத்தில் நீங்கள் பயன்படுத்துகிற கெட்ட வார்த்தைகள் எல்லாமே, அமெரிக்காவிலிருந்து வந்தவை. அவை கழிவிடம் அல்லது படுக்கை இடம் சம்பந்தமாக இருக்கும், சரியா?
சத்குருவிடம் சொல்லப்பட்ட கெட்ட வார்த்தை
நான் இந்த நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். இது பல வருடங்களுக்கு முன்பு நடந்தது இது 40 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு. ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு விருந்தினர் வந்திருந்தார். அவருக்கு நான் மைசூரை சுற்றிக்காண்பிக்க வேண்டியிருந்தது. மைசூரு ஒரு சுற்றுலாத்தலம். அங்கே பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. நான் அவரை என்னோடு பைக்கில் கூட்டிப்போனேன். நான் வண்டியை சிறிது வேகமாக ஓட்டினால், என்னுடைய காதில் 'ஷிட்' என்று கேட்கும். பிறகு நான் நினைப்பேன், “நான் பிரேக் போட்டால் என்ன சொல்வார்?” அப்போதும் 'ஷிட்' என்று சொன்னார். அவர் அழகாக எதையாவது பார்த்தால் 'ஷிட்'. சாப்பாடு மிகவும் காரமாக இருந்தால் 'ஓ ஷிட்' என்று சொல்வார்.
உலக நாகரிகத்தில் வளர்ந்த மிக நுட்பமான ஒரு அம்சம் மொழி ஒரு சிறிய விஷயம் கிடையாது இந்தியாவில் 1300 மொழிகள் இருக்கின்றன. எவ்வளவு அறிவு புத்திசாலித்தனம் இருந்திருக்க வேண்டும்?
நான் நினைத்தேன், “ஏன் இந்த நபர் நாள் முழுக்க ஷிட் மந்திரத்தை என் காதுகளில் ஓதிக்கொண்டே இருக்கிறார்?” என்று ஒருவேளை அவரது மலச்சிக்கலை வெளிவர செய்ய தன்னையே ஊக்கப்படுத்திக் கொள்கிறாரோ என்று நான் நினைத்தேன். காலையில் நீங்கள் முடிக்க வேண்டிய வேலையை ஒருநாள் முழுக்க ஏன் கொஞ்சம் கொஞ்சமாக செய்ய வேண்டும்? பிறகு நான் கவனித்தேன், அவர் கோபமாக இருக்கும்போது ‘ஷிட்' என்று சொல்கிறார், பிறகு கொஞ்சம் அமைதியாக ஆகிவிடுகிறார். அப்படியென்றால் ஒருவிதத்தில் அவர்களுக்கு அது பயன்படுகிறது என்று நினைத்துக்கொண்டு, அதைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று விட்டுவிட்டேன். ஏனென்றால் மற்றவர்களுக்கு பயன்படுகிற எதையும் நான் தொந்தரவு செய்ய விரும்பமாட்டேன். அது பயன்படுகிறது, அதனால் நாம் அதை விட்டுவிடலாம்.
சப்தங்களின் அறிவியல்
பிறகு நான் இதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். சப்தங்களை சக்திவாய்ந்த விதத்தில் பயன்படுத்தும் அறிவியலைப் பற்றி நமக்குத் தெரியும். அது உங்களது விழிப்புணர்வுக்கு என்ன செய்யமுடியும்; உங்களது உடலுக்கு என்ன செய்யமுடியும்; உங்கள் சக்தியை தூண்டுவதற்காக என்ன செய்யமுடியும்; இன்னும் பற்பல அம்சங்கள் இதைப் பற்றி நமக்கு தெரியும். நாம் “ஷிவா” என்று சொல்வோம். சரியான தயார்நிலையில் உங்களை இந்த ஒரு சப்தத்தை உச்சரிக்க வைத்தால், நீங்கள் கடவுளையோ அல்லது வேறெதையோ நம்பத் தேவையில்லை. அந்த சப்தத்தை மட்டும் சொன்னாலே உங்களது மூளை வெடித்துப் போகிற அளவு அது இருக்கும்.
நான் இதை உங்களுக்கு காண்பிக்க முடியும். நான் நினைத்துப் பார்த்தேன் - “Shiva – shit – Shiva”, “ஷிட்-ஷிவா-ஷிட்”.
நாம் இதை விஞ்ஞான அறிவுடன்தான் கண்டுபிடித்திருக்கிறோம். அவர்களுக்கு எப்படியோ அது தெரிந்திருக்கிறது. 'ஷி-வா’ என்ற வார்த்தையில் கூட, “ஷி” தான் சக்திவாய்ந்த பகுதி. “வா” என்பது தீவிரத்தைக் குறைக்கும் சப்தம்; மக்கள் வெடித்துவிடக்கூடாது என்று "வா" என்று பயன்படுத்தப்படுகிறது. அது சமநிலையைக் கொண்டுவருவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இப்போது "வா"விற்கு பதிலாக "ட்"ஐ பயன்படுத்துகிறார்கள். "சரி, அது பயன்படுகிறது" என்று நான் நினைத்தேன். ஏனென்றால் அந்த வார்த்தையை அவர்கள் நிறைய தடவை பயன்படுத்தும்போது, "ட்" வராது. அவர்கள் "ஷி" என்றுதான் சொல்வார்கள். நான் "ஷிவா" என்று சொல்லும்போது கூட “வா” என்னுடைய வாயிலிருந்து வராது. "ஷி" தான் வரும். அதனால், "சரி பரவாயில்லை!" என்று நான் நினைத்துக்கொண்டேன்.
ஷிவாவும் ஷிட்டும் ஒன்றா?
பிறகு சில மக்கள், "சத்குரு நீங்கள் ஷிவாவும் ஷிட்டும் ஒன்று என்று எப்படி சொல்ல முடியும்? - ஒன்று மிக உயர்ந்தது, இன்னொன்று மிகத் தாழ்ந்தது" என்று சங்கடப்பட்டு கேட்டார்கள். அதற்கு நான், "பாருங்கள், இந்த உயர்ந்தது தாழ்ந்தது எல்லாம் உங்கள் பொறுப்பு. உங்கள் மூளைக்குள் எழுத்துக்களின் வரிசையில் வார்த்தைகள் அடுக்கப்பட்டிருந்தால், ஷிவாவும் ஷிட்டும் பக்கத்து பக்கத்தில்தான் இருக்கும். நீங்கள் ஷிவாவை இங்கேயும், ஷிட்டை அங்கேயும் வைக்க முடியாது. உங்களுக்கு அந்த திறமை எல்லாம் இல்லை.
உங்கள் மூளையில் எப்படி அடுக்கப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அது எழுத்துக்கள் அடிப்படையில் அடுக்கப்பட்டிருந்தால், அந்த இரண்டு வார்த்தைகளும் பக்கத்து பக்கத்தில்தான் இருக்கும். உங்களால் அதைப் பிரிக்கமுடியாது. அதனால் எது நல்லது, எது கெட்டது, எது சரி, எது தவறு என்பதைப் பற்றி இல்லை நமது கேள்வி. "அது எல்லா இடத்திலும் வேலை செய்யுமா?" என்பதுதான் கேள்வி. நீங்கள் எங்கே பார்த்தாலும் "ஷிட்" செய்துகொண்டே இருந்தால், அது உங்களுக்கு நல்லவிதமாக வேலை செய்யுமா? அதுதான் கேள்வி.
நாம் “ஷிவா” என்று சொல்வோம். சரியான தயார்நிலையில் உங்களை இந்த ஒரு சப்தத்தை உச்சரிக்க வைத்தால், நீங்கள் கடவுளையோ அல்லதுவேறெதையோ நம்பத்தேவையில்லை அந்த சப்தத்தை மட்டும் சொன்னாலே உங்களது மூளை வெடித்துப்போகிற அளவு அது இருக்கும்.
சரி, இளவயதினர் மத்தியில், நீங்கள் “ஷிட், ஷிட்” என்று எல்லா இடங்களிலும் சொல்கிறீர்கள். அது பரவாயில்லை என்று விட்டால், இப்போது அமெரிக்காவில் முதன்மை நிர்வாகிகள் கூட சர்வ சாதாரணமாக இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் சர்வதேச சபைகளில் இந்த வார்த்தையை எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்றால் முடிந்துபோனமாதிரிதான், சரியா? வேறெந்த காரணத்திற்காகவும் இல்லை நீங்கள் சில அமெரிக்க திரைப்படங்களிலும், சில Standup காமெடி நடிகர்களிடமும் பார்த்தால், அவர்கள் ஒரு முழு வாக்கியத்தையே அந்த ஒரு வார்த்தையை வைத்து அமைக்கிறார்கள். ஆமாம்! முழு வாக்கியமே அந்த ஒரு வார்த்தையைக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வார்த்தையை அந்த வாக்கியத்தில் பல விதங்களில் சொல்லியிருப்பார்கள், அதை அவர்கள் தொடர்ந்து துதிக்கவும் செய்கிறார்கள்.
மொழி வளர்ச்சிக்கு எடுத்துக்கொண்ட காலம்
நான் என்ன சொல்கிறேன் என்றால், இந்தமாதிரி ஒரு நுட்பமான மொழியை வளர்ப்பதற்காக, மனித மூளைக்கு எவ்வளவு காலம் எடுத்திருக்கும். ஒரு மொழியை வளர்ப்பதற்கு இவ்வளவு நேரம் எடுத்திருக்கிறது. உலக நாகரிகத்தில் வளர்ந்த மிக நுட்பமான ஒரு அம்சம் மொழி. ஒரு சிறிய விஷயம் கிடையாது. இந்தியாவில் 1300 மொழிகள் இருக்கின்றன. எவ்வளவு அறிவு புத்திசாலித்தனம் இருந்திருக்க வேண்டும்? நீங்கள் மராத்தி பேசுகிறீர்கள் இன்னொருவர் தெலுங்கு பேசுகிறார் இன்னொருவர் கன்னடம் பேசுகிறார் இன்னொருவர் கொங்கணிபேசுகிறார்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நீங்கள் பக்கத்து பக்கத்தில் வாழ்ந்து வந்தாலும் நீங்கள் உங்கள் மொழியின் இலக்கியத்தைப் பராமரித்திருக்கிறீர்கள். அவரவர் மொழியின் இலக்கியத்தைப் பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு புத்திசாலித்தனம் தேவை; ஒரு மொழியை இப்படி வளர்ப்பதற்கு… இப்போது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வார்த்தைகள் கொண்ட ஒரு மொழியை நீங்கள் ஒரு வார்த்தையில் குறைக்கப் பார்க்கிறீர்கள். அதை முன்னோக்கிய ஒரு படியாக நீங்கள் நினைத்தீர்கள் என்றால், மன்னிக்க வேண்டும், நீங்கள் நினைப்பது சரியில்லை!