காசி தமிழ் சங்கமம் - அரசியலா? ஆன்மீகமா? (Kashi Tamil Sangamam)
மத்திய அரசின் 'காசி தமிழ் சங்கமம்' முன்னெடுப்பு, அரசியல் நோக்கம் கொண்டதா அல்லது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததா என்ற விவாதம் அரசியல் வெளியில் எழுந்த நிலையில், இத்திட்டம் குறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதை இங்கே முழுமையாகப் படித்தறியலாம்.
பத்மஜா: பிரதமரோட இந்தத் திட்டம் அதன் நோக்கத்திலும் அளவிலும் மிகவும் பெரிய ஒரு லட்சியம். ஆனா உங்க கருத்துல இதனுடைய முக்கியத்துவம் என்ன? இது ஏன் தேவைப்படுது?
சத்குரு: இது பேரார்வம் என்று நான் நினைக்கவில்லை. ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்ததினுடைய ஒரு சிறிய மறுமலர்ச்சி இது. ஏனென்றால் நீங்கள் வரலாற்றைப் பார்த்தால், ராமேஸ்வரம், காசி, கேதார்நாத் மற்றும் கைலாஷ், இந்த எல்லா இடங்களுக்கும் இருக்கிற தொடர்பு பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.வடக்கும் தெற்கும் தொடர்புகொண்ட விதம்
இன்றைக்கும் கூட, தீபாவளிக்கு பிந்தைய குளிர்காலம் துவங்குவதால், இமயமலை பகுதியில் வாழ்கின்ற ஆயிரக்கணக்கான சாதுக்கள், சந்நியாசிகள், யோகிகள் மற்றும் முனிவர்கள் தெற்கு நோக்கி நடக்கத் துவங்கி இருக்கிறார்கள். சில யோகிகள் கிழக்குக் கடற்கரை நோக்கி நடக்கிறார்கள். ஏனென்றால், உங்களுக்கே தெரியும் ஆந்திரப்பிரதேச கடற்கரையில் சப்தரிஷிகளுடைய வழித்தடங்கள் இருக்கிறது. அதனால் அவர்கள் அந்த வழியில் நடக்கிறார்கள்.
கோரக் நாத்திகள் மற்றும் பலர் மேற்கு கடற்கரை நோக்கி நடக்கிறார்கள். ஏனென்றால், அவர்களின் சாப்பாடு தங்கும் வசதியை கவனிப்பதற்கு அந்த பகுதியில் உள்கட்டமைப்புகள் இருக்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் பலர் மத்திய இந்தியா வழியாக நடந்து போகிறார்கள். இது பல்லாயிரம் வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்ற இயக்கம், படையெடுப்புகள் நடந்தபோது மட்டுமே இந்த விஷயங்கள் தொந்தரவிற்கு ஆளாகியது. ஆனால் அவர்கள் இதை தொடர்ந்தார்கள். இது தானாக நடந்து கொண்டிருந்தது.
1947வது வருடத்தில் இருந்து இது மிகவும் கெட்டுப்போய்விட்டது. இது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த நேரத்தில் ஒரு சிறிய இயக்கம் இருந்து அடங்கிவிட்டது.
ஆன்மீக சாதகர்களை மதிக்கும் கலாச்சாரம்
பாருங்கள், இந்த நாட்டில் ஆங்கிலேயர் காலத்தில் கூட பல பெரிய முனிவர்கள், வழியெல்லாம் நடக்க முடியாத மகான்கள் ரயிலில் போக ஆரம்பித்தார்கள். அவர்கள் சாதுக்கள் மற்றும் சந்நியாசிகள். அவர்கள் வேறு ஏதோவொன்றில் ஈடுபட்டவர்கள். அவர்களுக்கு சொந்தமாக உடைமைகள் இல்லாததால், காவி உடை போட்டவர்களுக்கு ரயில்கள் எப்போதும் இலவசம். அதனால் யாரும் டிக்கெட் கேட்கமாட்டார்கள்.
நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், நான் இந்த நாடு முழுவதும் தனியாக பயணம் செய்யும்போதுகூட, நான் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது, எங்கேயாவது ஒரு சாலையோர தாபாவில் சாப்பிட்டால், அவர்கள் என்னிடம் பணம் வாங்க மறுத்துவிடுவார்கள். தேசத்தினுடைய கலாச்சாரம் இது. அதனாலேயே அவர்களுக்கு நான் வற்புறுத்தி கொடுக்க வேண்டும். இந்த பயணம் எப்போதுமே நடந்து கொண்டிருக்கும்.
Subscribe
எப்போதும் தெற்கே சென்றால் ராமேஸ்வரம் செல்வதாக நினைக்கிறார்கள். நீங்கள் வடக்கு நோக்கி சென்றால் காசி அல்லது இமயமலைக்கு செல்கிறீர்கள் என்று நினைக்கிறார்கள். இது நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது.
காசி தமிழ் சங்கமம் (Kashi Tamil Sangamam)
சங்கமம்… இந்த மாதிரியான விஷயங்கள் நடப்பதற்கு, இந்த தலைமுறை மக்கள் ஏன் ஆச்சரியப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கு நாம் புத்துயிர் கொடுப்பது அருமையாக இருக்கிறது. இது ஒரு மறுமலர்ச்சி இல்லை, இது ஒரு அதிகாரப்பூர்வ முத்திரை என்று நான் சொல்வேன். இது மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், இது எப்போதும் அப்படித்தான்.
நாட்டில் அரசியல்ரீதியாக பல எல்லைகள் இருந்தபோதும், ஒரு காலத்தில் 600 நாடுகள் வரை நாம் இருந்தோம். சில சமயத்தில் பல ராஜ்ஜியங்கள் இருந்தது. அப்போதும் கூட காசி மற்றும் ராமேஸ்வரம் போகின்ற இந்த பயணத்தில் ஒருபோதும் எந்த ராஜாவும் குறுக்கிடவில்லை. அவர்கள் மற்ற ராஜ்ஜியங்களோடு போரில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் இதில் ஒருபோதும் குறுக்கிடவில்லை. ஏனென்றால், அதை புனிதமாக நினைத்தார்கள். அது அப்படித்தான் இருந்தது. அதனால் இப்போது ஒருவகையான அதிகாரப்பூர்வமான விஷயத்தை கொண்டுவருவதை ஒரு இயல்பான விஷயமாக நான் நினைக்கிறேன்.
இப்போது எதற்கு இது?
அது ஆரம்பத்தில் இருந்தே நடந்திருக்க வேண்டும். அது இப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறது. ஒருவேளை இந்த நாட்டினுடைய பொருளாதாரம் மற்றும் பிற உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நாம் மிகவும் Busyஆக இருந்திருக்கலாம். நாம் சற்று சிறப்பாகிக்கொண்டு வரும்போது நுட்பமான அம்சங்களைப் பற்றியும் யோசிக்கிறோம்.
பத்மஜா: இது எப்படி சாத்தியம்? நீங்க வரலாற்றுலயே இந்த தொடர்பு இருக்கறதா சொல்லறீங்க, காசிக்கும் கன்னியாகுமரிக்கும் பாரம்பரியமா தொடர்பு இருக்கறதா சொல்றீங்க. ஆனா நாங்க எப்பவும் கேள்விப்பட்டிருக்கறது வடக்கும் தெற்கும் வெவ்வேறு பகுதிகள், ரொம்பவும் வித்தியாசமான மக்கள், ரொம்ப மாறுபட்ட கலாச்சாரங்கள், ரெண்டுக்கும் பொதுவானது எதுவுமே இல்லன்னு எங்களுக்கு சொல்லியிருக்காங்க. அரசியல்ரீதியா, வட இந்திய அரசியலுக்கு தென்னிந்தியால இடமில்ல, தென்னிந்தியாவுக்கு வடக்குல இடமில்ல.
சத்குரு: அரசியல் வெளியில் நடக்கின்ற பேச்சில் நான் தலையிட விரும்பவில்லை. ஏனென்றால், அரசியல் வெளியில் உங்கள் தலைமுடியை மசாஜ் செய்தால், முதுகு காயத்தை குணப்படுத்த முடியும். நான் அதில் நுழைய விரும்பவில்லை. அது அரசியல் வெளி. அதிலும் குறிப்பாக, தேர்தல் நெருங்கும்போது, எல்லாவிதமான விஷயங்களையும் எல்லோரும் பேசுவார்கள்.
பத்மஜா உங்களை எச்சரிக்கிறேன். உங்கள் பெயர் பத்மஜா. அதாவது, நீங்கள் தாமரையில் இருந்து வெளியில் வந்தீர்கள். நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்கள். இங்கே இந்த அற்புதமான மலர் என் அருகில் இருக்கிறது. இதை யாரோ இங்கே வைத்திருக்கிறார்கள். இதற்கு கிருஷ்ண கமலம் என்று பெயர். இது ஒரு தாமரை இல்லை. இது ஒரு கொடியில் வளரும். ஆனால், இது கிருஷ்ண கமலம். இந்த பூவில் கமல் என்பது இருப்பதால், இது பிரச்சனை, சரியா? அதனால் நாம் தீவிர வரம்புகளுக்கு போகிறோம் என்று நான் சொல்கிறேன்.
நம் முன்னோர்கள் எப்படிப்பட்டவர்கள்?
நம் கடந்தகால மாவீரர்கள், அவர்கள் அரசர்களாக இருந்தாலும் சரி, முனிவர்களாக இருந்தாலும் சரி, மகான்களாக இருந்தாலும் சரி, நம் சுதந்திரப் போராட்ட வீரர்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, நாம் அவர்களை மதிக்கிறோம் என்று கூறிவிட்டு, மறந்துவிடுகிறோம்.
இன்றைய ஒழுக்கம், இன்றைய வாழ்க்கைத் தரம், இன்றைய வாழ்க்கையைப் பற்றிய புரிதலில் இருந்து நாம் அதைத் தீர்மானிப்பதால் நாம் அவர்களைப் பிரித்து மதிப்பிட முயற்சிக்கக் கூடாது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இங்கே வாழ்ந்தவர்களை நீங்கள், அவர்கள் இதுவா, இல்லை அதுவா என்று தீர்ப்பு சொல்ல முயற்சிக்காதீர்கள்.
அவர்களாகவே இருந்தார்கள். யாராக இருந்தாலும் சரி, அவர்கள் நம் முன்னோர்கள். அதனாலேயே நாம் அவர்களை மதிக்கிறோம், அவ்வளவுதான். அவர்கள் எல்லோரும் சரியாக இருந்தார்களா? அவர்கள் எல்லோரும் தவறா? யாரோ சிலர் அவர்கள் சரியானவர்கள் என்று சொன்னார்கள். யாரோ சிலர் அவர்கள் பயங்கரமானவர்கள் என்று சொன்னார்கள். இதற்குள் போகவேண்டாம்.
ஏனென்றால், ஆயிரம் வருடங்களுக்கு முன்பு என்ன ஒழுக்கம் இருந்தது? சமூகம் என்ன? அன்றைய உண்மைகள் என்ன? இதெல்லாம் மிகவும் வித்தியாசமானது.
தெற்கு வடக்கு பற்றி...
இந்த விஷயம் தமிழ்நாட்டில்... காசி விஸ்வநாத் பற்றி பல கோவில்கள் இருக்கிறது. “விஸ்வநாதர்” என்று அவர்கள் அழைக்கிறார்கள். சிறிய உச்சரிப்பு மாறுபாடு. சிவகாசி இருக்கிறது. குறைந்தபட்சம் பட்டாசுகளால் சிவகாசியை நீங்கள் நிச்சயமாக கேள்விப்பட்டிருப்பீர்கள். தென்காசி இருக்கிறது. அதாவது தெற்கு காசி. இது பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது.
அதை ஸ்தாபனம் செய்ய காசியில் இருந்து லிங்கத்தைப்பெற விரும்பி, அங்கிருந்து கொண்டுவந்து தென்காசியை ஸ்தாபித்தார்கள்.
அதோடு பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமிழ் குடும்பங்கள் காசியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் எல்லோரும் அங்கே சென்றது எப்போது என்று தெரியாது, சரியா? அவர்கள் அங்கே எப்போது போனார்கள் என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் எல்லோரும் அங்கே போனார்கள்.
தமிழ் சுற்றுலா பயணிகள், அவர்கள் போகும்போது, தமிழர்கள் எப்படி வாழமுடியும், உங்களுக்கே தெரியும். இன்றைக்கு நீங்கள் போனால், நீங்கள் விமானத்தில் வந்து அங்கே ஒருநாள் இருந்துவிட்டு, திரும்பிவிடுவீர்கள். ஒருவேளை லால்பேடா சாப்பிட்டுவிட்டு திரும்பிவிடலாம். ஆனால் அந்த காலத்தில் நீங்கள் போனால் சில மாதங்கள் தங்கியிருப்பீர்கள்.
இட்லி, சாம்பார், பொங்கல் இல்லாமல் தமிழ் மக்கள் எப்படி வட இந்தியாவில் இருக்க முடியும்? நாம் எப்படி வாழமுடியும்? அதனால் இயல்பாகவே தமிழ் மக்கள் அங்கே போய் நிறுவினார்கள், எப்போது என்று தெரியவில்லை,
இன்றைக்கும் காசிக்கு வருகின்ற தமிழ் மக்களுக்கு சேவை செய்கிற 2500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான தமிழர்கள் காசிக்கு போகிறார்கள். இது நான் காசிக்கு போகிறேன் என்று யாரும் அறிவிக்கப் போவதில்லை. இதை அமைதியாக செய்துவிட்டு திரும்பி வந்துவிடுவார்கள்.
அது புனிதமான பயணம். இப்போது எல்லா இடங்களிலும் அரசியல் சூடு பிடிப்பதால், எல்லாவற்றையும் அரசியல் வழியில் கையகப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அதனால் இந்த விஷயங்களுக்கு உண்மையான அர்த்தத்தை நான் கொடுக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் - இதை சொல்கிறார்கள், அவ்வளவுதான்.