கண்டதும் காதல் வருவது நல்லதா? (Love at First Sight Meaning in Tamil)
கண்ணும் கண்ணும் நோக்கியதும், நூறுகோடி மின்னல் பாய்ந்து, பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்து, காதல் பூப்பதாகச் சொல்வது கவித்துவமாக இருந்தாலும், கண்டதும் காதல் வந்துவிட்டதாகச் சொல்லி சீரியஸ் உறவில் ஈடுபடுகின்றவர்களுக்கு சத்குரு தரும் இந்த பதில், தெளிவைத் தருவதாக இருக்கும்.
கேள்வி: "கண்டதும் காதல்" என்று சொல்வார்கள். இன்னொருவரைப் பார்த்தாலே ஒரு நல்ல தாக்கம் ஏற்படுகிறது. எப்படி இப்படி நடக்கிறது? இந்த உள்ளுணர்வை நம்பலாமா? அல்லது இது நிரந்தரமற்றதா? இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது?
கண்டதும் காதல் (Love at First Sight)
சத்குரு: அப்படியென்றால் நீங்கள் அவசரத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படியென்றால் நீங்கள் மிகவும் அவசரத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். இதில் பல அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த வார்த்தைகள் வேறொரு காலகட்டத்தில் இருந்து வருகிறது.Subscribe
கண்டதும் காதல்... இதைப் பற்றிதானே நீங்கள் பேசுகிறீர்கள், சரியா? கண்டதும் காதல் மிகவும் பரவலாக நடந்தது எந்த காலத்தில் என்றால், இரண்டு பாலினர்களும் ஒருவரையொருவர் தினமும் பார்த்திருக்க மாட்டார்கள்.
நீங்கள் அந்தப் பெண்ணை எப்போது பார்ப்பீர்கள் என்றால், அந்த ஆங்கிலேய சூழ்நிலையைச் சொல்கிறேன். அந்தப் பெண் அவர்களின் பெற்றோர்களோடு குதிரை வண்டிமீது ஏறிக் கொண்டிருக்கிறார், நீங்கள் அப்படியே பார்க்கிறீர்கள், அவர் உங்களை இப்படி பார்த்தால், மின்னல் பாய்ந்துவிட்டது.
இப்போது அவர் உங்களோடு நடக்கிறார், பேசுகிறார், உங்களோடு படிக்கிறார். இப்போது அதற்கு நேரம் எடுக்கும். அதற்கு நேரம் எடுப்பது நல்லதுதான். எவ்வளவு அதிக நேரம் எடுக்கிறதோ அவ்வளவு நல்லது. அதனால், இந்தமாதிரி வார்த்தைகள் வேறு காலகட்டங்களில் இருந்து வருகிறது. அப்போது இரு பாலினருக்கும் இடையே பரிட்சயம் இல்லை. பார்க்கிற முதல் பெண்ணே... பூபூபூம்ம்ம்
அதனால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபரை நோக்கி ஈர்க்கப்படலாம், அதுவேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்கள் அடிப்படையாக பரிச்சயம் இல்லாததால் வருகிறது. போதுமான பரிச்சயம் இருந்தால் நீங்கள் என்ன பார்ப்பீர்கள் என்றால், நீங்கள் ஒருவரை கவனமாக பார்ப்பீர்கள்,
சும்மா பூபூபூம்ம்ம்... என்று நடக்காது. நீங்கள் நேரம் எடுத்துக்கொள்வீர்கள், அது நல்லது.
அழுத்தமான உறவை உருவாக்கும் முன்
நீங்கள் நேரம் எடுத்து நிலைக்கக்கூடிய முறையான உறுதியான உறவுகளை உருவாக்குவது நல்லது. பாருங்கள், நீங்கள் வாழ்க்கையில் ஒரு உறவைஉருவாக்குவது எங்கேயோ இரண்டு என்பது ஒன்றைவிட மேலானது என்று நீங்கள் நினைப்பதால், இல்லையா? இரண்டு என்பது ஒன்றைவிட உங்களுக்கு நன்றாக இருக்கலாம். ஆனால் அந்த உறவில் நீங்கள் ஒரு உபத்திரமாக இருக்கலாம்.
அதனால், உங்கள் வாழ்க்கையில் அழுத்தமான எந்த ஒரு உறவையும் உருவாக்குவதற்கு முன்பு முதலில் சும்மா இதைப் பாருங்கள். (தன்னை நோக்கி சுட்டிக்காட்டுகிறார்) இந்த ஒன்று உலகத்தில் இருக்கின்ற எல்லாவற்றிற்கும் தகுதியாக இருக்கின்றதா? ஏனென்றால், இளமை என்பது நீங்கள் இந்த ஒன்றை கட்டமைப்பதற்கான நேரம். வாழ்வதற்கு அவசரப்படாதீர்கள். நீங்கள் வளர வேண்டிய சமயத்தில் வாழ்வதற்கு அவசரப்படாதீர்கள்.
வளரும் நேரத்தில் வாழ அவசரம் வேண்டாம்
தமிழ்நாட்டில் தென்னிந்தியாவில் விவசாயிகளிடம் ஒரு விவேகம் இருக்கிறது. குறிப்பாக, மாமரம் வைப்பவர்கள் இப்படி செய்வார்கள். நீங்கள் ஒரு மாங்கன்றை நட்டால், 12-14 மாதங்களில் பருவம் வந்ததும் பூப்பூக்கும். ஆனால் என்ன கவனிப்பீர்கள் என்றால், விவசாயி கவனமாக எல்லாப் பூக்களையும் ஒடித்து எடுத்துவிடுவார். ஏனென்றால், நீங்கள் அதை காய்பிடிக்க விட்டால் முதல் பருவத்திலேயே ஒன்றிரண்டு காய்கள் பிடிக்கும். ஆனால் அப்படி செய்தால் அந்த குறிப்பிட்ட மரம் அதனுடைய முழு வளர்ச்சியை அடையாது. அதனால் முதல் மூன்று வருடம் எல்லாப் பூக்களையும் எடுத்துவிடுவார்கள். மரம் போதுமான அளவு உறுதியான பிறகுதான் அதில் காய்பிடிக்க விடவேண்டும். அதனால் வளர்வதற்கான நேரம் இருக்கிறது, வாழ்வதற்கான நேரம் இருக்கிறது, மிகவும் சீக்கிரமாக வாழ முயற்சி செய்தால், என்ன கவனிப்பீர்கள் என்றால், அப்போது வளர்ச்சி நடக்காது. ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் வளர்ச்சி மிகவும் சுலபமாக நடக்கும். பிற்காலத்தில் அது நடக்க முடியாது என்று இல்லை, அது கஷ்டமாகிவிடும். ஏனென்றால், வாழ்க்கையில் பலவிதமான விஷயங்களில் நீங்கள் ஈடுபட தேவை இருக்கும்.
அதனால் நீங்கள் இளமையாக இருக்கும்போது, நீங்கள் படிக்கும்போது, இது நீங்கள் எல்லா நிலையிலும் வளர்வதற்கான நேரம். உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்ச்சிரீதியாக, சக்திரீதியாக, நீங்கள் உங்களை அதிகபட்சமாக மேம்படுத்த வேண்டும். பிறகு நீங்கள் வாழ்வதற்கு முயற்சி செய்யலாம். நீங்கள் மிக சீக்கிரமாக வாழ முயற்சி செய்தால், நீங்கள் அதிகம் சாரம் உடையவராக ஆகமாட்டீர்கள். நீங்கள் அதிகம் சாரம் இல்லாதவராக இருந்தால், நீங்கள் யாரோடு உறவினை உருவாக்கி இருக்கிறீர்களோ, அவர்கள் நன்றாக வளர்ச்சி அடையும்போது, அவர்கள் உங்களைப் பார்த்து, இவரோடு நான் ஏன்தான் மாட்டிக் கொண்டேனோ என்று யோசிப்பார்கள்.