கே: நமஸ்காரம் சத்குரு. என்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதற்கு நான் சற்று அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதுடன், அதனால் வருத்தமும் அடைகிறேன்.

 

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரிகிறது? நீங்கள் மனதை வாசிப்பவரா?

 

கே: இல்லை, சில நேரங்களில் என் முதுகுக்குப் பின்னால் நிகழும் விஷயங்கள் எனக்குத் தெரிந்துவிடுகிறது. வாழ்க்கை துல்லியமான வரையறைகளில் அடங்குவதில்லை என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். வாழ்வின் சில விஷயங்களை நான் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, சிலருடன் எனது உறவை மேம்படுத்துவது எப்படி என்று எனக்குக் கூற முடியுமா?

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
தற்போது, உங்கள் முதுகுக்குப் பின்னால் என்ன நிகழ்கிறது என்பது உங்களுக்குத் தெரிகிறதா?

 

கே: இல்லை.

 

என்ன நிகழக்கூடும் என்று நீங்கள் கற்பனைதான் செய்கிறீர்கள். கற்பனை செய்வதை நிறுத்துங்கள். உங்களைப்பற்றி யாரோ எதையோ நினைத்தால், அது உங்கள் பிரச்சனை அல்ல. அவர்களுடைய எண்ணங்கள் அவர்களின் பிரச்சனை. அவர்கள் விரும்பியபடி எதையும் நினைத்துக்கொள்ளட்டும். உங்களைப்பற்றி ஒவ்வொருவரும் எல்லா நேரமும் நினைத்துக்கொண்டிருக்கும் அளவுக்கு நீங்கள் சுவாரஸ்யமானவர் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

 

கே: இல்லை.

 

அப்படியென்றால் விட்டுவிடுங்கள். அவர்கள் என்ன நினைக்கக்கூடும் என்று நீங்கள் ஏன் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? அதைப் பெரிதாக்க முயற்சிக்கவேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது என்னவோ அதில் கவனம் செலுத்துங்கள். யாரோ ஒருவர் எப்போதும் உங்களைப்பற்றி நினைக்கின்றார் என்பது உங்களது கற்பனையில் மட்டுமே இருக்கிறது. பெரும்பாலான மக்களும் அவரவர் சொந்த பிரச்சனைகளில் மூழ்கியுள்ளனர். யாராவது நம்மைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அப்படி நினைக்கவில்லை என்றால் நாம் சந்தோஷப்பட வேண்டும், ஏனென்றால், நாம் சுதந்திரமாக இருக்கிறோம் என்பது அதன் பொருள்.

நாம் செய்ய விரும்புவதை செய்வதற்கு ஒவ்வொருவருடைய ஒப்புதலையும் ஒருபோதும் நம்மால் பெறமுடியாது. ஆகவே நீங்கள் செய்ய விரும்பும் செயலில் மட்டும் முனைப்பாக இருங்கள்.

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது. நினைப்பதற்கு அவர்களுக்கு அதைவிட மேலான எதுவும் இல்லாமல் இருக்கலாம், ஆகவே உங்களைப்பற்றி அவர்கள் நினைக்கின்றனர். அவர்களது மனரீதியான பிரச்சனைகளை அவர்களிடமே விட்டுவிடுங்கள். அவர்கள் விருப்பம் போல எந்தவிதமான முட்டாள்தனமான விஷயத்தையும் நினைத்துக்கொள்ளட்டும். அது ஏன் நீங்கள் யார் என்பதை பாதிக்க வேண்டும்.

நம்மைப்பற்றி யார் என்ன நினைப்பார்களோ என்று நாம் வருந்திக்கொண்டிருந்தால், நமது வாழ்வில் நாம் எதையும் செய்யமாட்டோம். நாம் செய்ய விரும்புவதை செய்வதற்கு ஒவ்வொருவருடைய ஒப்புதலையும் ஒருபோதும் நம்மால் பெறமுடியாது. ஆகவே நீங்கள் செய்ய விரும்பும் செயலில் மட்டும் முனைப்பாக இருங்கள்.

tamilapp