கேள்வியாளர்:

நமஸ்காரம் சத்குரு,

இன்டர்நெட்டில் PORN பார்ப்பதை நிறுத்துவது எப்படி என்பது மிக அதிகமாக கேட்கப்பட்டிருக்கிற கேள்விகளில் ஒன்று என்று கேள்விப்பட்டேன். என்னோடு படித்தவர்கள் சிலர் அதற்கு அடிமையாகி, அவர்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போய்விட்டது. ஏன் இதற்கு அடிமையாகிறார்கள்? இதிலிருந்து சுலபமாக வெளியே வருவது எப்படி? 

சத்குரு:

நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். Pornography என்பது பாலுணர்வு இல்லை. இது நீங்கள் வளர்த்துக்கொள்கிற ஒருவித நோய். இது நோய் என்றால், பாலுணர்வே நோய் என்று இல்லை. அது நம் உருவாக்கத்துடைய ஒரு பகுதி. நாம் இங்கே இருப்பதே அதனால்தான். நாம் இங்கே அதற்காக இல்லை. நாம் இங்கே அதனால் இருக்கிறோம். அதிலிருந்துதான் நாம் பிறக்கிறோம். இது சரி-தவறு பற்றிய கேள்வி இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இது யாரோ ஒருவருடைய சந்தோஷத்தையோ, உல்லாசத்தையோ, இன்பத்தையோ பற்றியது இல்லை. இது பெண்களை போகப் பொருளாக்குகிறது.

மனிதர்களுக்கு இயற்கை வழங்கியுள்ள சுதந்திரம்

ஆனால் என்னவென்றால், மற்ற எல்லா உயிரினத்திற்கும் இயற்கை அதனுடைய பாலுணர்வை கட்டுப்படுத்தும். ஏனென்றால், அவைகளுடைய பாலுணர்வு பருவநிலையை சார்ந்திருக்கும், மற்ற நேரம் அவைகளுக்கு எது ஆண், எது பெண் என்று தெரியக்கூட செய்யாது. இயற்கை அவைகளை கட்டுப்படுத்துகிறது. அந்த கட்டுப்பாட்டை இயற்கை உங்களிடம் இருந்து எதற்காக எடுத்தது என்று நினைக்கிறீர்கள்? ஏனென்றால், உங்களுக்கு இன்னும் கொஞ்சம் மூளை இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கை.

ஆனால் அது உங்களுக்கு இல்லை என்று நீங்கள் நிரூபிக்கப் பார்க்கிறீர்கள், ஆமாம். ஏனென்றால் சிறிய வயதிலேயே நீங்கள் அந்த விஷயங்களைப் பார்த்தால், உங்கள் தலைக்குள் வேறு எதுவும் நடக்காது. அதனால் இந்த விஷயத்தில், இந்த விஷயங்களை நிறுத்துவதில் பெண்களுக்கு அதிக பொறுப்பும் அவசியமும் இருக்கிறது என்று நான் சொல்வேன். ஏனென்றால் இதைப் பற்றி யாரும் எதுவும் சொல்வதில்லை.

பெண்களுக்கு இதில் இருக்கும் பொறுப்பு

இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால், பெண்களும் இதைப் பார்ப்பது ஃபேஷன் ஆகிவிட்டதாம். யாரோ இதை பாலியல் கல்வி என்று சொல்கிறார்கள். இல்லை, இது அப்படி எதுவும் இல்லை. ஏனென்றால் இதுவரை நடந்திருக்கிற சண்டைகளாலேயும், பெண்கள் போராடி இருப்பதாலேயும், வெளியே பெண்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் வந்திருக்கிறது. Pornography பார்க்கும்போது நீங்கள் அந்த சுதந்திரத்தைத் தூக்கி எறிகிறீர்கள்.

அதைப் பார்த்தால், நீங்கள் எப்படியும் ஒரு யோகப் பொருள்தான், புரிகிறதா? நீங்கள் ஒரு உயிராக ஆக விரும்பினால், நீங்கள் இதை எதிர்க்க வேண்டும். வீதியில் இல்லை, இதை எங்கே பார்த்தாலும், நீங்கள் அதை அங்கேயே நிறுத்த வேண்டும். நீங்கள் என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இது யாரோ ஒருவருடைய சந்தோஷத்தையோ, உல்லாசத்தையோ, இன்பத்தையோ பற்றியது இல்லை. இது பெண்களை போகப் பொருளாக்குகிறது. இது உங்களை ஒரு பொருளாக்குகிறது. பெண்கள் இந்த பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Porn பார்ப்பதால் வரும் பாதிப்பு என்ன?

அந்த அளவிற்கு இன்னும் ஒரு ஆணுடைய தலைக்குள் இல்லை. ஒரு ஆண் பரிணமித்து வளர்ந்தால்தான் அவன் இதற்கு பொறுப்பு எடுத்துக்கொள்ள முடியும். குறிப்பாக நான் இப்படி நூற்றுக்கணக்கானவர்களைப் பார்த்திருக்கிறேன். சிறிய வயதிலேயே இதற்குள் போனவர்கள் அதனால் மோசமாக சீரழிந்துவிட்டார்கள். சுற்றி இருப்பவர்களோடு அர்த்தமுள்ள உறவுகள் உருவாக்குவதற்கு அவர்களுக்குள் அவர்கள் அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் எவ்வளவு பைத்தியமாகிறார்கள் என்று உங்களிடம் சொல்லக்கூட முடியாது. இப்படி அவர்கள் கஷ்டப்படுவதைப் பற்றி எனக்கு சொன்னார்கள். ஏனென்றால், மிக சிறிய வயதிலேயே அவர்கள் இதற்கு அடிமையாகிவிட்டார்கள்.

இப்போது அதிலிருந்து எப்படி வெளியே வருவது? நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். நான் ஏற்கனவே சொன்னது போல, இயற்கை உங்களை விழிப்புணர்வான உயிர் என்று நினைத்து, நீங்கள் எல்லாவற்றையும் விழிப்புணர்வாக செய்வீர்கள் என்று நினைத்து, உங்களை ஒரு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து இருக்கிறது.

அதற்கென்று, நீங்கள் எப்போதும் இனப்பெருக்க செயலையே செய்து கொண்டிருக்க வேண்டும் என்று இல்லை. இது இன்பத்தைப் பற்றியது இல்லை, இது சந்தோஷத்தைப் பற்றியது இல்லை, இது அன்பைப் பற்றியது இல்லை, இது ஒரு கட்டாயத்தன்மை. கட்டாயத்தன்மை என்றால் அடிமைத்தனம் என்று உங்களுக்கு புரியவில்லை என்றால், உங்களை என்ன செய்ய? கட்டாயத்தன்மை என்றால் அடிமைத்தனம். விழிப்புணர்வுதான் நமக்கு இருக்கும் ஒரே விடுதலை என்று உங்களுக்கு புரியவில்லை.

Porn பார்க்கும் பழக்கத்தை எப்படி விடுவது? (Porn Addiction in Tamil)

அதனால் அதை விடவேண்டிய அவசியம் இல்லை. அங்கே போகாமல் இருந்தால் போதும், அவ்வளவுதான். அதை விடுவதற்கு என்ன இருக்கிறது? அது இங்கே இப்போது நடந்து கொண்டிருக்கிறதா? இல்லை, அது என் தலைக்குள் நடக்கிறது. உங்கள் தலை அப்படித்தான். அதில் நீங்கள் எதை பதிய வைத்தாலும், அதுதான் அதில் நடக்கும், இல்லையா? உங்கள் தலை அப்படித்தான். நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு வருகிற ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் சௌகரியத்தையும் உங்கள் அழிவிற்கு நீங்கள் பயன்படுத்த நினைக்கிறீர்கள்.

அட! இதில் என்ன தவறு சத்குரு?

இதுதான் தவறு.

உங்கள் அம்மா, உங்கள் சகோதரி, உங்களைச் சுற்றியிருக்கிற ஒவ்வொரு பெண்ணையும், நீங்கள் வெறும் பொருட்களாக குறைத்து மதிப்பிடுகிறீர்கள். நீங்கள் எல்லோரும் பிரம்மச்சாரிகளாகி எங்கேயோ போகவேண்டும் என்று நான் சொல்லவில்லை, அது முடியாது. அப்படி வாழ்கிற திறமை இருக்கிற சிலர் மட்டும்தான் அப்படி இருக்க முடியும். ஆனால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் கண்ணியத்தோடு நடத்திக்கொள்ள வேண்டும்.

இதில் எங்கே கண்ணியம் இருக்கிறது? Pornographyல் பெண்ணிற்கு எங்கே கண்ணியம் இருக்கிறது? அதிலே எங்கே கண்ணியம் இருக்கிறது? பூமியில் இருக்கிற மக்களில் பாதி பேருக்கு கண்ணியம் இல்லாமல் செய்வதால், உங்களுக்கு கொஞ்சம் சந்தோஷம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? இது அருவருப்பானது. இது சரி-தவறு பற்றிய பிரச்சனை இல்லை, இது மனநலப் பிரச்சனை.

அசிங்கமான ஏதோவொன்றைப் பார்த்து நண்பர்களோடு சிரித்துக்கொள்வதால், நீங்கள் ஏதோ பெரிய காரியம் செய்வதாக நினைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் செய்வது அடிமுட்டாள்தனம். நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லை என்றால், அந்த Pornographyல், அதில் வருகிற பெண்ணிற்கு உங்கள் அம்மாவின் முகத்தை வைத்துப் பாருங்கள், அப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.