ராஜராஜ சோழன் இந்துவா? (Raja Raja Cholan in Tamil)
ராஜராஜ சோழன் ஒரு இந்து அல்ல என்றும், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியும், சமீபத்தில் சில சர்ச்சைகள் அரசியல் களத்தில் பேசுபொருளாகின. இந்த சர்ச்சைகள் குறித்த சத்குருவின் கருத்துகள் கேட்கப்பட்டபோது தென்னக வரலாறு மறைக்கப்பட்டது குறித்தும், ராஜராஜ சோழனின் பெருமைகள் பற்றியும் கூறி விடையளித்தார் சத்குரு, தொடர்ந்து படித்தறியுங்கள்.
பத்மஜா: அரசியல் இருக்கும் விதம் பற்றி பேசும்போது, உங்களுக்கு தெரியும், வரலாற்றை மாற்றியெழுதும், ராஜராஜ சோழன் பற்றி சமீப காலத்தில் பெரிய விவாதம் எழுந்தது. அவர் ஹிந்து அரசர் இல்லை என்று சிலர் சொன்னார்கள். நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?
சத்குரு:ராஜராஜ சோழன் - சிவபாதசேகரன்
நான் இந்த சர்ச்சையை miss பண்ணிவிட்டேன். ஏனென்றால், அப்போது நான் நாட்டில் இல்லை. எப்படியும் நீங்கள் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். நான் அவர் இந்தியரே இல்லை என்று சொல்கிறேன். ஏனென்றால், அவரிடம் இந்திய பாஸ்போர்ட் அப்போது இல்லை, அவரிடம் ஆதார் அட்டை இல்லை, நாம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இப்படியே எங்கே போகிறோம்?
அவரை இப்படி அழைத்தார்கள். அதை அவர் ரசிக்கவும் செய்தார். அவரை 'சிவபாதசேகரன்' என்று சொன்னார்கள். அது அவருடைய பட்டம். அவர் பிரகதீஸ்வரர் கோவிலை கட்டினார். அது பெரிய கோவில். இன்றைக்கும் அது தமிழ்நாட்டில் முக்கியமான ஒரு சுற்றுலாத் தலமாக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கின்றது. அவர் இன்னும் நிறைய கோவில்களை கட்டினார். அவர் கம்போடியாவிலும் இந்தியாவிற்கு வெளியே பல இடங்களில் கோவில்களை கட்டினார்.
Subscribe
அவரை நீங்கள் என்ன சொல்லி அழைக்க விரும்புகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அவருடைய ஆவணங்களை சரிபார்த்து அவர் இந்தியர் இல்லை என்று நாம் நிரூபித்துவிடலாம், ஆனால், அதனால் என்ன பயன்?
காவிநிறம் ஒரு மத அடையாளமா?
பத்மஜா: ஏனென்றால் இதைப் பற்றி விவாதம் என்னவென்றால், அரசியல் ஆதாயத்துக்காக திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போலவே, வலதுசாரிகள் அல்லது காவிகள் ராஜராஜ சோழனையும் ஹிந்து அரசராகப் பார்ப்பதாக சொல்கிறார்கள்.
சத்குரு: திருவள்ளுவர் என்று வரும்போது அவர் மீது காவியை எப்படி பூசினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், காவி எப்போதுமே இந்திய ஆன்மீக செயல்முறையுடைய நிறமாக இருந்திருக்கிறது. ஏனென்றால், அது துறவுடைய நிறம். வாழ்க்கையுடைய தினசரி பற்றுகளைத் தாண்டி இருப்பது என்று புரிந்துகொண்டார்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர்களை இன்றைய அரசியல் சிக்கல்களுக்குள் இழுக்கிறோம். நீங்கள் காவி என்று சொன்னால், அது எந்த கட்சியையும் சார்ந்ததில்லை. காவி என்று சொல்லும்போது, சமூகத்தில் நடக்கின்ற தினசரி அம்சங்களில் இருந்து விலகி இருப்பதை நாம் குறித்தோம். அவர்கள் அதற்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் தேவைக்கேற்ப சமூகத்தோடு தொடர்பு கொண்டார்கள். ஆனால், அதற்குமேல் அவர்கள் இருந்தார்கள்.
மகான்கள் யாருக்குச் சொந்தம்?
தமிழ்நாட்டினுடைய மகான்கள் எல்லோருமே சிவ பக்தர்களாக இருந்தார்கள். அவர்கள் பலர் இருக்கிறார்கள். சுந்தரர், அப்பர் இப்படி அவர்கள் கோவில்களில் பாடி தேவாரம் என்று உருவாக்கினார்கள். ராஜராஜ சோழன் தான் இதை கண்டெடுத்து தேவாரமாக உருவாக்கினார். இன்றைக்கும் கூட தமிழ்நாட்டில் கோவில்கள் எல்லாவற்றிலும் இது பாடப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய வழிபாட்டு முறையாக ஆகிவிட்டது. இது பக்தியில் தோய்ந்த ஒரு கலாச்சாரம். துரதிருஷ்டவசமாக ஒரு கையளவு மக்கள் வடக்கோ, தெற்கோ, அரசியலில் இருப்பவர்கள் இப்போது எல்லா கடவுள்களையும் அவர்களின் உடைமைகளாக ஆக்கிக்கொள்கிறார்கள். இதை நாம் சும்மா விட்டுவிட வேண்டும் என்று நினைக்கிறேன்.
வடக்கைப் பின்வாங்க வைத்த சோழர்கள்
நான் முன்பே சொன்னது போல, கடந்த காலத்தினுடைய மகான்களுக்கு நாம் மதிப்பு கொடுத்தால் போதும், அவர்களை பிரிக்கக்கூடாது. சரி, அசோகர் உங்களுக்கு சொந்தம், ராஜராஜ சோழன் எங்களுக்குச் சொந்தம், என்ன இது?
அசோகரும், அசோகருடைய தந்தை பிம்பிசாரரும் தெற்கு பகுதியை ஆள விரும்பினார்கள், ஆனால் சோழர்கள் அவர்களை பின்னுக்கு தள்ளினார்கள். கிபி ஆண்டுகளில் இது பதியப்பட்டு இருக்கிறது. கிபி 290க்கும் 270க்கும் இடையில் அவர்கள் தெற்கு நோக்கி படையெடுத்தபோது, சோழர்கள் அவர்களை பின்வாங்க வைத்தார்கள். இது பதியப்பட்டிருக்கிற வரலாறு.
இந்த நாட்டில் எல்லைக் கோடுகள் எப்போதும் மாறிக்கொண்டே இருந்தது.
தனித்தனி ராஜ்ஜியங்கள் எப்போதும் மாறிக்கொண்டே இருந்தது. பல சமயம் சோழ ராஜ்ஜியம் ஒரிசா வரை நீண்டது, மறுபடியும் சிறிய ராஜ்ஜியமாக சுருங்கியது, மறுபடியும் விரிந்தது. ஒரு குறிப்பிட்ட அரசரையும், அவருடைய திறமைகளையும் சார்ந்து சுருங்கி விரிந்தது. திறமை என்றால் அடிப்படையாக அவருடைய போர் திறமை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். போரில் வெற்றி அடைவதற்கு அவரது திறமை தான் எல்லைகளை நிர்ணயித்தது. அவர்கள் வடக்கும் இல்லை தெற்கும் இல்லை. தெற்கு எப்போதும் வடக்கிற்கு போகப் பார்த்தது, வடக்கு எப்போதும் தெற்கிற்கு வரப் பார்த்தது. ஏனென்றால், அவர்கள் பாரத் வருஷம் அல்லது ஜம்பூத்வீபா என்று அப்போது அழைக்கப்பட்ட பகுதி முழுவதையும் ஆள விரும்பினார்கள்.
முக்கியத்துவம் கொடுக்கப்படாத தென்னக வரலாறு
பத்மஜா: ஆனால் நீங்கள் அவர்களை மதித்து, ராஜராஜ சோழன் போன்றவர்களை அரசியலாக்கக்கூடாது என்று சொன்னீர்கள். அது நடந்திருக்கிறதாக நினைக்கிறீர்களா? ஏனென்றால் நிறையபேர் என்ன நினைக்கிறார்கள் என்றால், நம் வரலாற்றில் வட இந்தியர்களுக்கு அல்லது முகலாயர்களுக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டிருக்கிறது, சோழர்களுக்கு உரிய கவனம் கொடுக்கப்படவில்லை. அது நியாயமான விமர்சனமா?
சத்குரு: நான் அப்படித்தான் நினைக்கிறேன். இது வெறும் சோழர்களைப் பற்றியது இல்லை. எல்லா நிலைகளிலும் தெற்கிற்கு 1947ல் இருந்து கிடைத்திருக்க வேண்டிய கவனம் கிடைக்கவில்லை. 1985ல் இருந்துதான் தெற்கிற்கு இன்னும் கொஞ்சம் கவனம் கொடுக்கப்படுவதாக நினைக்கிறேன். மற்றபடி உள்கட்டமைப்புகள், ரயில் வசதி, விமான நிலையங்களைப் பொருத்தவரைக்கும் பல காரணங்களால் நமக்கு அதே கவனம் கிடைக்கவில்லை. அதை பாரபட்சம் என்று சொல்லமாட்டேன். அது பொருளாதார காரணங்களை அதிகம் சார்ந்தது. இயல்பாகவே தேசத்தில் மற்ற பகுதிகளை விட டெல்லி அதிகமாக முன்னேறியது. உதாரணத்திற்கு தேசத்துடைய வடகிழக்கு பகுதி உள்கட்டமைப்புகள் இல்லாமல் இருந்திருக்கிறது. இப்போதுதான், 75 வருடங்களுக்கு பிறகு, உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நாம் வேலை செய்கிறோம், ஆனால் என்னவென்றால், பொருளாதார காரணங்களும், சில அரசியல் காரணங்களும் இருக்கலாம்.
ஆனால் அடிப்படையாக இது பொருளாதார காரணங்கள் என்று நான் சொல்வேன். சில பகுதிகள் மட்டும் முன்னேறியது. கவனம் முழுக்க அதை சுற்றி இருந்தது. சும்மா திரும்பிப் பாருங்கள். தோராயமாக 71, 72ல் இருந்து நான் செய்தித்தாள் வாசிக்க ஆரம்பித்தேன். ஆர்வமாக வாசிப்பேன். உள்ளூர் பற்றி செய்தித்தாளில் எதுவுமே இருக்காது. எல்லாம் டெல்லியைச் சுற்றி நடந்தது பற்றித்தான். இப்போதுதான் எல்லாமே செய்தியில் வருகிறது. எல்லாப்பக்கமும் உள்கட்டமைப்புகள் இருக்கிறது. 80கள் வரைக்கும் தெற்கில் எந்த ஒரு செய்தி ஊடகத்திற்கும் பெரிய உள்கட்டமைப்பு இல்லை என்று நினைக்கிறேன்.
அதனால் இயல்பாகவே தெற்கு குறைவாகத்தான் பேசப்பட்டது. நாம் அதற்கு வருத்தப்படவில்லை. நம்மை அதிகம் தொந்தரவு செய்யவில்லை என்று சந்தோஷப்பட்டோம்.
நமஸ்காரம்,
ஆனால் உங்களது பெயரை மாற்றிவிடாதீர்கள், மிக நல்ல பெயர் (பத்மஜா).