கேள்வி: சத்குரு, மனித உடல் என்பது கற்பனை செய்யமுடியாத எண்ணிக்கையில்
அணுக்கள், துகள்கள் மற்றும் மூலக்கூறுகளால் ஆனது மற்றும் மனம் கூட மிகவும்
சிக்கலானது. இந்த இரண்டு சிக்கலான கருவிகள் மூலம், ஒருவர் எப்படி எளிமையான வாழ்க்கை வாழவேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்?

எளிமையான வாழ்க்கை என்றால் என்ன? (Simplicity in Tamil)

சத்குரு: எளிய வாழ்க்கை என்பது நீங்கள் எப்படி புரிந்துகொண்டீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளது. எளியவனாக இருப்பது தான் எளிமையான வாழ்க்கை என்று நீங்கள் நினைத்தால், நான் அதை பரிந்துரைக்கவில்லை. ஆனால் எளிமையான வாழ்க்கை என்பதன் அர்த்தம், பொதுவாக உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் செய்யும் செயல்களே எளிமையானவை. அதனால் அது உங்களை சிக்க வைக்காது, உதவியாக மட்டுமே இருக்கும். பொதுவாக, நம் வாழ்வில் நாம் செய்யும் அனைத்து ஏற்பாடுகளும் நம் வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்கவேண்டும், இல்லையா?  

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
எளிமையான வாழ்க்கை என்றால் நீங்கள் ஒரு எளியவர் என்று அர்த்தமல்ல. நீங்கள் எப்படியிருக்க வேண்டுமென்றால், நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ, அங்கு நீங்கள் செல்லலாம், எதைச் செய்ய வேண்டுமோ அதை நீங்கள் செய்யலாம்.

நீங்கள் ஏன் கல்வி கற்கிறீர்கள்? ஏனென்றால், அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஏன் சிலர் திருமணம் செய்து கொள்கிறார்கள்? ஏனென்றால், அது அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மக்கள் ஏன் குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள்? ஏனென்றால், அது அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் ஏன் வியாபாரம் செய்கிறார்கள்? ஏனென்றால், அது அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், மக்களின் முகத்தைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் படிக்கும் முன், திருமணம் ஆவதற்கு முன், குழந்தைகளைப் பெறுவதற்கு முன், அவர்கள் எப்படி இருந்தார்கள், இன்று எப்படி ஆகிவிட்டார்கள் என்று பார்த்தால் - அவர்கள் மேம்பட்டது போல் தெரிகிறதா? அவர்கள் இப்படி ஆகிவிட்டார்கள் (சைகையில் காட்டுகிறார்). அப்படியென்றால், அவர்கள் தங்களால் கையாளமுடியாத பலவற்றை செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

மற்றவர்களைப் பார்த்து வாழ்க்கை நடத்தும்போது…

அவர்கள் உண்மையில் தங்களால் கையாளக்கூடியதை விட அதிகமானவற்றை செய்தார்கள், இல்லையா? "எனக்கு என்ன தேவை?" என்று பார்த்து விழிப்புணர்வுடன் அவர்கள் வாழ்க்கையை நடத்தவில்லை. அவர்களின் பிரச்சனை என்னவென்றால், “அவள் தினமும் ஷாப்பிங் செல்கிறாள், அதனால் நானும் கடைக்கு செல்ல விரும்புகிறேன். என்ன வாங்குவது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் ஏதாவது வாங்கி வருவேன், ஏனென்றால் என் பக்கத்து வீட்டில் இருப்பவள் ஷாப்பிங் செய்கிறாள்". இந்த நிலையில் அவர்கள் இருப்பதால், வாழ்க்கையின் முடிவில் சரக்கு பெட்டக சேவை இல்லை என்றாலும், பெரும்பாலான வீடுகள் கிடங்குகளாக மாறிவிட்டன.

வீட்டில் உள்ள பயன்படுத்தாத பொருட்கள், House with Unused Things.

பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் ஓரிரு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தாத பொருட்களை வைத்திருக்கிறார்கள். அவர்களால் அதை யாருக்கும் கொடுக்கவும் முடியாது. ஆனால், அது அவர்களின் வாழ்க்கையை இப்படி சீர்குலைப்பதால் அவர்கள் வீட்டினுள் நடக்கும்போதே தட்டுத் தடுமாறி தான் நடக்க முடிகின்றது. ஏனென்றால், அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக இந்த வீட்டைக் கட்டவில்லை, இந்த பொருட்களை வாங்கவில்லை, இந்த உறவுகளை அவர்கள் உருவாக்கவில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை சிக்கவைக்க எல்லாவற்றையும் பயன்படுத்துகிறார்கள். எனவே எளிமையான வாழ்க்கை என்றால், நீங்கள் சிக்கவில்லை என்று அர்த்தம், இது மிகவும் முக்கியமானது.

நீங்கள் மேம்படுத்தப்பட்டீர்கள், ஆனால் நீங்கள் சிக்கவில்லை. நீங்கள் எந்த விதமான செயல்களைச் செய்தாலும், உங்களால் கையாளக்கூடிய விதமானவற்றை மட்டுமே நீங்கள் செய்கிறீர்கள். மற்றவர்களைப் பார்த்து, எப்படி கையாள்வது என்று உங்களுக்குத் தெரியாத ஒன்றை செய்ய நீங்கள் முயற்சிக்கவில்லை.

சிக்க வைப்பது எது…?

ஏன் தேவையில்லாத ஒன்றை செய்கிறீர்கள்? தேவையில்லாத ஒன்றை செய்தால் அதுவே சிக்கவைப்பதாகிவிடும். அதனால் எந்தவிதமான ஏற்பாடு உங்களுக்கு சிறந்தது என்று பார்த்து, அதை நீங்கள் செய்யுங்கள் - இது ஒரு எளிய வாழ்க்கை. எளிமையான வாழ்க்கை என்றால் நீங்கள் ஒரு எளியவர் என்று அர்த்தமல்ல. நீங்கள் எப்படியிருக்க வேண்டுமென்றால், நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ, அங்கு நீங்கள் செல்லலாம், எதைச் செய்ய வேண்டுமோ அதை நீங்கள் செய்யலாம்.

ஒரு சிலந்தி மற்றவற்றைப் பிடிக்க வலையைப் பின்னுகிறது. ஆனால் நீங்கள் எப்படிப்பட்ட சிலந்தி என்றால், நீங்கள் உருவாக்கிய வலையில் நீங்களே பிடிபட்டீர்கள். அப்படியென்றால், நீங்கள் ஒரு முட்டாள் சிலந்தி, இல்லையா? மேலும் பெரும்பாலான மனிதர்கள் அந்த நிலையில்தான் இருக்கிறார்கள். எனவே எளிமை என்பது உங்களை சிக்கவைக்காத ஒரு விவேகமான ஏற்பாடு. நீங்கள் அப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்யவேண்டும். நீங்கள் அந்த வழியில் சென்றுகொண்டிருக்கலாம், ஆனால் உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஒன்று, மற்றொரு வழியில் நடந்தால் வழியினை மாற்றி அதன்படி செல்லலாம். உங்களது ஏற்பாடுகள் உங்களை சிக்கவைக்காது, அதுதான் எளிமையான வாழ்க்கை. இது ஒரு அறிவார்ந்த வாழ்க்கை.