50 ஜென் கதைகள் - எளிமையான விளக்கத்துடன்! (Zen Stories in Tamil)
ஜென் கதைகள் ஆழமான பொருள் கொண்டவை. மேலோட்டமாகப் பார்த்தால் புரியாதது போல் தோன்றும் ஜென் கதைகளை சத்குருவின் விளக்கம் எளிமையாகப் புரிய வைக்கிறது. 50 ஜென் கதைகளும், அவற்றின் விளக்கமும் இந்தப் பதிவில்...
ஜென் கதைகளும் சத்குருவின் விளக்கமும்!
1) ஜென் உருவான கதை
தியான் என்பது பாரதத்தில் இருந்து சீனாவுக்குப் போனது. அங்கே அது திரிந்து ‘ச்சான்’ என்று அழைக்கப்பட்டது. அங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் போனபோது, ஜப்பானில் ஜென் என்று மருவிவிட்டது. ஆக, ஜென் என்பது அடிப்படையில் தியான், தியான மடங்கள் ஜென் மடங்களாயின. ஜென் பாதை என்பது தியானப் பாதை. பொதுவாக, ஜென் கதைகள் நுட்பமான அர்த்தத்தை உள்ளடக்கியவை. மேலோட்டமாகப் படித்தால், அதன் உண்மையான உள் அர்த்தத்தைத் தவறவிட்டுவிடுவீர்கள். அப்படிப்பட்ட ஒரு ஜென் கதை இந்தப் பதிவில்...
2) மேல் அங்கி பெரிதா கொடிமரம் பெரிதா?
புத்தரின் ஞானோதயமடைந்த சீடரான காஸ்யபருக்கும் அவரின் எழுத்துக்களில் மட்டுமே ஊறியிருந்த ஆனந்தருக்கும் இடையே நடந்த ஒரு நிகழ்ச்சியை சத்குரு விளக்கியிருப்பதை படித்து மகிழுங்கள்.
3) துறந்தவரெல்லாம் துறவியல்ல
தான்சேன் எனும் ஞானோதயமடைந்த துறவி ஒருவர் தன் சீடரான இன்னொரு துறவியுடன் நடைபயணமாகச் சென்றுகொண்டு இருந்தபோது நடந்த இச்சம்பவத்தை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இக்கதையை விளக்கும் சத்குரு, மனதின் தன்மை குறித்த சூட்சுமம் ஒன்றைச் சொல்கிறார், தவறவிட்டுவிடாதீர்கள்!
4) சொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா?
சொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா? என்று ஜென் குருவிடம் கேள்வி எழுப்பப்பட, சத்குரு அளிக்கும் விரிவான விளக்கம் ஆழ்ந்த தெளிவினை ஏற்படுத்துகிறது...
5) சீடனை புகழ்ந்து பேசாத ஜென்குரு...
ஒரு குரு எப்போதும் தன் சீடனை புகழ்ந்து பேசுவதில்லை; மாறாக எப்போதும் குறைகளைச் சுட்டிக் காட்டிக்கொண்டே இருக்கிறார். சீடன் ஒருவேளை தலைமைத் தளபதியாக இருந்தால்...?! இந்த ஜென் கதை என்ன சொல்கிறது என தொடர்ந்து படித்தறியலாம்!
6) நரகத்திற்குப் போக விரும்பும் ஜென் குரு!
பொதுவாக ஜென் குருமார்கள் சொல்வது இயல்பை மீறிய விஷயம்போல் தோன்றினாலும், அவர்களின் வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் ஆழம் மிக்கதாய் இருக்கும். அந்த வகையில், இந்த ஜென்குரு தான் நரகத்தில் கழுதையாக இருக்கப்போவதாகச் சொல்வது ஏன் என அறிய தொடர்ந்து படியுங்கள்! குருவின் வார்த்தைகளில் உள்ள ஆழத்தை சத்குரு விவரிக்கிறார்!
7) ஜென்குருவின் வித்தியாசமான ஆசீர்வாதம்!
‘நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும்!’ என்று வாழ்த்துவதுதானே உலக வழக்கம்! அது என்ன ‘நீ இறப்பாய்’ என வாழ்த்துவது?! ஆசீர்வாதம் செய்வதுபோல அல்லாமல் அபசகுனமாக பேசுவதுபோல் உள்ள ஜென்குருவின் ஆசீர்வாதத்தில் மறைந்துள்ள ஆழம்மிக்க பேருண்மை என்ன என்பதை சத்குரு விளக்குகிறார்!
8) மூட்டை மூலம் சொல்லப்பட்ட ஜென் தத்துவம்?!
ஒரு ஜென்குருவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் தனது செய்கையால் பதில் தருகிறார். சாதாரணமாகப் பார்க்கும்போது புரிபடாத அவரது செய்கைக்கான அர்த்தம், சத்குருவின் பார்வையில் பொருள்படுகிறது! அர்த்தத்தைப் படித்தறியுங்கள்!
9) மரணப்படுக்கையில் ஜென்துறவிக்கு நேர்ந்த அற்புதம்!
ஜென்துறவிகள் என்றாலே ஆழமான புரிதல்கொண்டவர்களாகவும் சூட்சுமமான சொல்லாடல்களைப் பயன்படுத்துபவர்களாகவும் அறியப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு ஜென்துறவி மரணப்படுக்கையில் இருக்கும்போது, அவருக்கு நேர்ந்த ஒரு ஆன்மீக அனுபவம் என்ன என்பதை சத்குருவின் விளக்கத்துடன் இங்கே அறியலாம்!
10) நான்கு துறவிகளின் மௌனம் எப்படி கலைந்தது?
மௌன விரதம் இருப்பதை தன் வாழ்நாளில் பலரால் நினைத்துக்கூடப் பார்க்கமுடிவதில்லை! வாய்திறந்து பேசாவிட்டாலும் மனம் சதாசர்வ காலமும் எதையாவது உள்ளுக்குள் கதைத்தபடிதான் இருக்கிறது. இந்த ஜென் துறவிகள் மௌனவிரதம் இருந்த கதையும் அதுபோலத்தான்! தொடர்ந்து படித்து கதைக்கான சத்குருவின் விளக்கத்தையும் அறியுங்கள்!
11) உங்கள் கோப்பை நிரம்புகிறதா...? - ஒரு ஜென்கதை சொல்லும் செய்தி!
காலியான கோப்பையாக வந்தால், அதில் எதையாவது நிரப்ப முடியும். ஏற்கனவே பல குப்பைகளைச் சேர்த்து நிரம்பி வழியும் மூளைகளுக்கு எதைச் சொல்லித் தர முடியும்? ஜென் கதைக்கு சத்குருவின் விளக்கம் இங்கே...
12) ஞானமடைந்த துறவியை ஜென்குரு ஏன் தலையில் அடித்தார்?
ஞானோதயம் அடையாமல், தான் ஞானோதயம் அடைந்துவிட்டதாகச் சொன்னார் ஒரு ஜென் துறவி. அதனை அறிந்துகொண்ட ஜென் குரு, அவரைத் தலையில் அடித்துப் புரிய வைத்தார். ஜென் கதைக்கு சத்குருவின் விளக்கம் இங்கே...
13) செருப்பை மாற்றிப்போட்ட புத்தர்...! - ஒரு ஜென் கதை சொல்லும் செய்தி!
“நீ வீட்டுக்குத் திரும்பும்போது, தோளில் போர்வை போர்த்தி, காலணிகளை மாற்றிப் போட்டுக்கொண்டு ஒரு நபர் உன்னை எதிர்கொள்வார். அவரே புத்தர்” என்றார் குரு. அவர் ஏன் அப்படிச் சொன்னார்? சத்குருவின் விளக்கம் இங்கே...
14) இசைக்கு விளக்கம் கொடுத்த ஜென்குரு!
“குருவே, நீங்கள் வாசித்த இசைக்கு விளக்கம் என்ன?” என்று கேட்டான் சீடன். குரு ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. துவக்கத்தில் இருந்து அதே இசையை மறுபடி வாசித்துக் காட்டி, “இதுதான் விளக்கம்” என்றார். ஜென் கதைக்கு சத்குருவின் விளக்கம் இங்கே...
15) அர்த்தமற்ற சடங்குகளுக்கு உதாரணம் காட்டும் ஜென்கதை!
தன் கையில் விளக்கு இருந்தும், பார்வையற்ற ஒருவர் எதிரில் வந்தவருடன் மோதிக்கொண்டார். விளக்கு இருந்தும் என் மீது ஏன் மோதினீர்கள் எனக் கேட்ட போது, “சுடர் அணைந்திருக்கிறது நண்பா” என்று சொன்னார் மோதியவர். ஜென் கதைக்கு சத்குருவின் விளக்கம் இங்கே...
16) குருவுக்கு புரியாதது சீடனுக்கு புரிந்தது! - ஜென்கதை உணர்த்தும் கருத்து!
"தலைமுறை, தலைமுறையாக குரு தன் வாரிசாகக் கருதும் சீடனுக்கு வழங்கும் புனிதப் புத்தகத்தை குரு சீடனுக்கு வழங்கினார். குரு வற்புறுத்தியதால், சீடன் புத்தகத்தை அவரிடம் இருந்து வாங்கினான். நெருப்பில் எறிந்தான்." ஜென் கதைக்கு சத்குருவின் விளக்கம் இங்கே...
17) ஒரு பெண் சீடர் ஏன் அப்படி கேட்டார்? - ஜென்கதையின் பொருள்!
“அடுத்த பிறவியிலாவது ஆண் சீடராகும் வாய்ப்பு எனக்கு இருக்கிறதா?” எனக் கேட்ட பெண் சீடருக்கு குரு என்ன பதில் சொன்னார்? அறிந்துகொள்ள மேலும் படியுங்கள்!
18) தளபதியை பார்க்க ஜென்குரு ஏன் மறுத்தார்?
உடல், மனம், பதவி, சொத்து என எதைக் கொடுத்தாலும், அதனுடன் அடையாளப்படுத்திக்கொண்டு அவதிப்படும் மனிதர்களின் நிலையை இந்த ஜென் கதை விளக்குகிறது.
19) உலகம் பிறந்தது தவளைக்காக...! - ஜென்கதை சொல்லும் நீதி!
உண்பது, நடப்பது, சுவாசிப்பது போன்ற அடிப்படையான அம்சங்கள் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் மென்மையான உணர்வுகளைக் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்றால், வாழ்க்கையின் மிகப் பெரும் அம்சங்களையும் நீங்கள் நிச்சயம் தவறவிடுவீர்கள்.
இதனை விளக்கும் ஜென் கதை இங்கே…
20) முக்தி இங்கேயே...! - ஜென்குரு கூறியதன் அர்த்தம்?!
சீடன் குருவிடம் கேட்டான், “எல்லாப் பாதைகளும் புத்தரின் ராஜ்ஜியத்துக்குத்தான் போய்ச் சேரும். ஆனால், ஒரு குறிப்பிட்ட பாதை முக்தியின் வாசலுக்கே நேரடியாக அழைத்துச் செல்லும் என்று சொன்னீர்களே, அந்தப் பாதை எங்கே துவங்குகிறது?”
குரு, சீடன் நின்ற இடத்தைச் சுட்டிக்காட்டி, “இங்கே...” என்றார்.
ஜென் கதையின் விளக்கம் உள்ளே...
21) அதிகமாக யோசிக்க வைக்கும் ஜென்புதிர் - காரணமும் பின்னணியும்
கோன் என்பது ‘யோசி, யோசி, யோசி’ என்று யோசிக்க வைத்து, யோசனைகளே அற்றுப்போவதற்கு வழி செய்வதற்காகத் தயாரிக்கப்பட்டது. மனதில் காரண காரியங்கள் அற்றுப்போகும் வரை பதில் தேட வைப்பது. எந்த முடிவுக்கும் வர முடியாமல் மனம் திகைத்திருக்கும்போது, உள்ளே சடாரென்று ஒரு பிரகாசம் நிகழ வாய்ப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு ஜென்கோன் இந்தப் பதிவில்...
22) கண்ணாடி பொருளை உடைத்த தளபதி! - ஜென்கதையின் செய்தி என்ன?
அடையாளங்களுடன் சிக்கிப் போராடுகையில் வரும் தேவையற்ற பதைபதைப்பை விளக்கும் ஜென் கதை இந்தப் பதிவில்…
23) நெருப்பைத் தேடும் அக்னி தேவன் - இதற்கு ஜென்குருவின் விளக்கம்...?
பகல் வெளிச்சத்தில், உங்களுக்கு முன்னால் நிழல் நீண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை முந்திக்கொண்டு நீங்கள் செல்ல முயன்றால், என்ன ஆகும்? உயிரைக் கொடுத்து எத்தனை வேகம் கூட்டி நீங்கள் முயன்றாலும், அது நிறைவேறப்போவது இல்லை. தத்துவங்கள், போதனைகள் இவற்றில் சிக்கி ஆன்மீகத்தைப் புரிந்துகொள்ளப் பார்ப்பது இப்படித்தான்.
இதனை விளக்கும் ஜென் கதை இங்கே…
24) பாம்பின் வால் தலையை இழுத்துச் சென்றால்... - சிந்திக்க வைக்கும் ஜென்கதை!
ஒருநாள் திடீரென்று பாம்பின் வால், அதன் தலைப்பகுதியுடன் வாக்குவாதம் செய்தது. “நீ நகர்வதற்கே நான்தான் காரணம். அப்படியிருக்க, எப்போது பார்த்தாலும் உன்னை நான் பின்தொடர வேண்டுமா? இன்று முதல் நான்தான் வழிகாட்டுவேன்.” என்று சொன்னது. இதனால் ஏற்பட்ட விளைவு என்ன? ஜென் கதை சொல்லும் செய்தி என்ன? தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்!
25) மருத்துவரின் துக்கம் பார்த்து சிரித்த ஜென்குரு!
ஜென் குருவிடம் ஒருவர் வந்தார்.
“ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர் நான். போர்க்களத்துக்குச் சென்று, காயம் அடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பது என் வேலை. உயிருக்குப் போராடிய பல வீரர்களை என் மருத்துவம் காப்பாற்றி உள்ளது. ஆனால், அந்த வீரர்கள் மறுபடியும் போருக்குப் போவதும் அங்கே உயிரைவிடுவதும் என்னை மிகவும் துக்கம்கொள்ள வைக்கிறது. சாகத்தான் போகிறார்கள் என்றால், அவர்களை எதற்குப் போராடிக் காப்பாற்ற வேண்டும்?” என்று கேட்டார்.
Subscribe
ஜென் குரு தந்த பதில் என்ன? தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்!
26) மாட்டிக்கொண்ட திருடனை மன்னித்த ஜென்குரு!
எந்தச் சீடனும் என்னவாக மாறக்கூடிய உள்ளாற்றல் கொண்டவன் என்பதைக் கவனித்து, அதை வெளிக்கொணர குரு வேலை செய்வாரேயன்றி, இன்றைக்குப் போதிய திறன் அவனிடம் இல்லையே என்று உதாசீனம் செய்யமாட்டார்.
இதனை விளக்கும் ஜென் கதை இங்கே…
27) கடவுளை கைப்பற்ற முடியுமா?
“கடவுளை உன்னால் மட்டுமல்ல, யாராலும் கைப்பற்ற முடியாது!” என்று கூறிய ஜென் குரு சொல்லவரும் செய்தி என்ன? தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்!
28) ஞானம்... ஒரு கசாப்புக்கடை வாசலில் கிடைத்தது!
ஒரு சாது கடைத்தெரு வழியே நடந்துகொண்டு இருந்தார்.
இறைச்சி விற்கும் கடையில் நின்றிருந்த ஒரு வாடிக்கையாளரின் குரல் சாதுவின் காதில் விழுந்தது. “பன்றி இறைச்சி வேண்டும். இருப்பதிலேயே எது முதன்மையான பகுதியோ, அங்கே இருந்து வெட்டிக் கொடு!”
கடைக்காரன் குரல் சொன்னது: “இந்த இறைச்சியில் முதன்மையான பகுதி என்று எதுவும் இல்லை”
இதைக் கேட்டதும் சாது ஞானம் அடைந்தார்.
ஜென் கதையின் விளக்கம் இந்தப் பதிவில்...
29) திருடனுக்கு தன் அங்கியை வழங்கிய ஜென்துறவி...
ஜென் மடத்தில் திருட வந்த திருடன் எதுவும் கிடைக்காமல் மாட்டிக்கொண்டபோது, குரு தன் அங்கியைக் கழட்டி அவனுக்குக் கொடுத்தார். மேலும், "நிலவை மட்டும் என்னால் அவனுக்கு வழங்க முடிந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!” என்றார். குரு ஏன் அப்படிச் சொன்னார்? தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
30) ஏதும் இல்லாத ஜென் மடம்! - சீடன் போன காரணம்?
ஒரு நல்ல குருவிடம் போவது புதிதாக ஒன்றைப் பெறுவதற்காக அல்ல; உங்களிடமே இருந்தபோதிலும், நீங்கள் கவனிக்கத் தவறியதை அவர் உதவியுடன் உணர்ந்து கொள்வதற்குத்தான்.
இதனை விளக்கும் ஜென் கதை இந்தப் பதிவில்...
31) ஒரு குருவிற்கு ஏன் எழுத்தறிவு தேவையில்லை?
"எழுதப்படிக்கத் தெரியாத ஜென் குருவினால் எப்படி புத்தகத்தில் உள்ள நிர்வாணா குறித்த சூத்திரங்களுக்கு அர்த்தம் சொல்ல முடியும்? இதை அறியாமல், நீங்கள் சொல்வதைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து கூடுகிறார்களே!" என்று கேட்ட சீடருக்கு ஜென் குரு அளித்த பதில் என்ன? தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
32) அதிகமாக உழைப்பதால், ஒரு கலையை சீக்கிரம் கற்கமுடியுமா?
உங்களை வருத்திக்கொள்ள வருத்திக்கொள்ள, நீங்கள் நினைத்ததை அடைவதற்கு அதிக காலம் ஆகும். வாழ்க்கைக்கு மட்டுமல்ல, கலையின் எந்த வடிவத்துக்கும் இது பொருந்தும்.
இதனை விளக்கும் ஜென் கதை இந்தப் பதிவில்...
33) ஜென்குரு அற்பமாகப் பேசியதன் உள் அர்த்தம்...
ஆன்மீகம் என்பது உள்ளே நடக்கும் மலர்தல். இதற்கு குரு வழி காட்டலாமே தவிர, இந்த மலர்தலை நம்மைத் தவிர வேறு யாராலும் நமக்குள் நிகழ்த்த முடியாது.
இதனை விளக்கும் ஜென் கதை இந்தப் பதிவில்...
34) எத்தனை சுவாசத்தில் உங்கள் வாழ்க்கை உள்ளது?
ஜென் குரு தன் சீடர்களை நோக்கி, 'ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம்?' என்று கேட்டார்.
'எழுபது ஆண்டுகள்' என்றார் ஒரு சீடர். 'தவறு!' என்றார் குரு. 'அறுபது ஆண்டுகள்' என்றார் மற்றொரு சீடர். 'தவறு!' என்றார் குரு. 'ஐம்பது ஆண்டுகள்' என்றார் இன்னொரு சீடர், இறந்து போன சக துறவியின் வயதை நினைவில் கொண்டு!
“நீங்கள் சொன்ன பதில்கள் எல்லாமே தவறு... வாழ்க்கை என்பது ஒரு சுவாச அளவு தான்” என்றார், குரு.
ஜென் கதைக்கு சத்குருவின் விளக்கம் இந்தப் பதிவில்...
35) கும்பிடப் போன ஜென்குரு குறுக்கே வந்தால்...
நான்குவான் என்னும் ஜென் ஞானி ஒருவர் கையில் ஏந்தியிருந்த அரிவாளால் களைகளை அகற்றிக் கொண்டிருந்தார்.
அவரிடம் துறவி ஒருவர், "புகழ் பெற்ற குருவான நான்குவானின் மடாலயத்துக்கு எப்படிச் செல்வது?" என்று கேட்டார்.
"நான் இந்த அரிவாளை மூன்று வெள்ளிக் காசுகள் கொடுத்து வாங்கினேன்.." என்றார் நான்குவான்.
"ஐயா, நான் அரிவாளைப் பற்றிக் கேட்கவில்லை. புகழ் பெற்ற நான்குவான் குருவுடைய மடாலயத்துக்குப் போகும் வழி எது என்றுதான் கேட்டேன்..." என்றார் பயணி.
"அரிவாள் வெகு கூர்மையாக இருப்பதால் எவ்வளவு உபயோகமாக இருக்கிறது தெரியுமா?" என்று நான்குவான் பதில் அளித்தார்.
ஜென் கதைக்கு சத்குருவின் விளக்கம் இங்கே...
36) சந்தைக்கு செல்லும் வழியில் ஜென்துறவி வழங்கிய பாடம்!
முன்கூட்டியே செய்த தீர்மானங்களின்படி எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்வது சரியல்ல. ஏனென்றால், இது இப்படித்தான் இருக்கும் என்று நீங்கள் எத்தனை திட்டமிட்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை உண்மையில் எதிர்ப்படும்போது, அதில் நீங்கள் எதிர்பார்க்காத சில மாறுதல்கள் இருப்பது சாத்தியம்.
இதனை விளக்கும் ஜென் கதை இந்தப் பதிவில்...
37) பிரபஞ்சத்தை கடுகுக்குள் அடைக்கமுடியுமா? - ஜென்கதையின் விளக்கம்!
பத்தாயிரம் புத்தகங்களைப் படித்த ஒருவன் ஜென் குருவிடம், "குருவே, எனக்கு ஒரு சந்தேகம். விமல கீர்த்த நிர்த்தேச சூத்திரம் என்பதில் மேரு மலையைக்கூட ஒரு கடுகுக்குள் அடைத்துவிடலாம் என்று போட்டிருக்கிறதே! இது உளறல் இல்லையா..? இது எப்படி சாத்தியம்..?" என்று கேட்டான்.
குரு என்ன பதில் தந்தார்? அறிந்துகொள்ள மேலும் படியுங்கள்!
38) நாயைப் பார்த்து ஞானம் பெறமுடியுமா? - ஜென்கதையின் செய்தி!
ஒரு ஜென் குரு தனது சீடர்களுடன் நீராட நதிக்குச் சென்றார். நன்றாக நீராடி வெளியில் வந்ததும், சீடர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.
"குரு, தன்னிலை உணர நான் என்ன செய்ய வேண்டும்..?" என்று கேட்டான் சீடன்.
"அந்த நாயிடம் கற்றுக்கொள்.." என்று சொல்லிவிட்டு, குரு நடந்தார்.
ஜென் குரு ஏன் அப்படிச் சொன்னார்? தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்!
39) மூங்கில் மரத்தின் மூலம் வழங்கப்பட்ட ஞானம்!
நீங்கள் ஒரு யானையாக இருக்கும்போது, சிங்கம், சிறு மிருகமாகத் தெரியும். நீங்கள் எலியாக இருக்கும்போது, அதே சிங்கம் பெரிய மிருகமாகத் தோன்றும்.
இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது உண்மையாக உணர்வது ஆகாது. வாழ்க்கையை, உயிரை, அதன் உண்மையான பரிமாணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இது உயர்வு, இது தாழ்வு, இது உயரம், இது குள்ளம், இது அழகு, இது குரூரம், என்று ஒப்பிட்டு, தீர்மானங்களுக்கு வருவதை விட்டொழிக்க வேண்டும்.
இதனை விளக்கும் ஜென் கதை இந்தப் பதிவில்...
40) சோம்பேறி சீடனுக்கு ஜென்குரு தயாரித்த தேநீர்! - ஜென்கதை!
உங்கள் உயிரின் முழுவீச்சையும் நீங்கள் உணர வேண்டும் என்றால், முதலில் எதையும், 'இது என்னுடையது, இது என்னுடையதில்லை' என்று சுருக்கிக்கொள்ளாதீர்கள்.
இதனை விளக்கும் ஜென் கதை இந்தப் பதிவில்...
41) வாய்விட்டு சிரித்த ஜென்குரு, குழம்பிய சீடன்!
சிரிப்பைத் தொலைத்தார்கள் என்றால், அதற்கு ஒரே காரணம், அவர்கள் அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதுதான்.
இதனை விளக்கும் ஜென் கதை இந்தப் பதிவில்...
42) ஜென்குரு சொன்ன விசித்திர தேசம்... எங்கிருக்கிறது?
குருவும் சீடனும் வெளியில் சென்றிருந்தபோது திடீரென மழை பெய்தது. உடனே சீடன் அவசரமாக ஒரு பெரிய இலையை வாழை மரத்திலிருந்து பிரித்து அதைத் தலைக்கு மேலாகப் பிடித்துக்கொண்டு குருவிடம் கேட்டான்: "உலகின் எத்தனையோ பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கிறீர்களே, கோடை காலத்துக்கு உகந்த இடம் எது..? மழைக்காலத்துக்கு உகந்த தேசம் எது..? குளிர்காலத்துக்கு எங்கே சென்றால் நிம்மதியாக இருக்கும்..?"
குரு மழையில் நடந்தவாறு, "உண்மையிலேயே சுகமாக இருக்க வேண்டும் என்றால், கோடையோ, மழையோ, குளிரோ இல்லாத தேசத்துக்கு நீ செல்லலாமே..!" என்று சொன்னார்.
ஜென் கதையின் விளக்கம் இந்தப் பதிவில்...
43) ஜென்கதையில் உள்ள பிழை... கண்டறிய இயலாத சீடர்கள்!
உண்மையான கருணை என்பது பாரபட்சம் பார்க்காது. ‘இவனுக்குக் கருணை காட்டலாம், அவன் அதற்குத் தகுதியானவன் அல்ல’ என்று நினைத்த மாத்திரத்திலேயே கருணை என்ற அந்தஸ்தை அது இழக்கிறது. உதவி என்பதற்கு பாரபட்சம் இருக்கலாம். ஆனால், கருணைக்கு இருக்க முடியாது.
இதனை விளக்கும் ஜென் கதை இந்தப் பதிவில்...
44) ‘புத்தம்’ தேடி அலைந்த ஒரு ஜப்பானியரின் கதை!
வார்த்தைகள் தர்க்கரீதியாக உங்கள் புத்திக்கு உணர்த்துபவை. அன்றாட இருப்புக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் அவை தேவைப்படலாம். ஆனால், உண்மையை உணர்ந்துகொள்ள ஒருபோதும் வார்த்தைகள் உதவாது.
இதனை விளக்கும் ஜென் கதை இந்தப் பதிவில்...
45) புத்த தர்மம் அறிய நினைத்த சீடனுக்கு குரு வழங்கிய நூல்!
ஒரு துணியின் நூல் பிரியிலிருந்து, வெடித்துச் சிதறும் சூரியன் வரை, எதில் வேண்டுமானாலும் உண்மையை தரிசிக்கலாம். இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வோர் அணுவும் உங்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கும் ஒரு பாதைதான். கதவைத் திறக்க வேண்டியது மட்டுமே பாக்கி. அந்தப் பொறுப்பு உங்களுடையது.
இதனை விளக்கும் ஜென் கதை இந்தப் பதிவில்...
46) தள்ளாத வயதில் இளைஞனுக்கு உதவிய ஜென்குருவின் நோக்கம்?
தான் பூட்டிக்கொண்ட சிறைக்குள் அவன் உலகையே தேடத் தேட, மேலும் மேலும் அந்த சிறைக்குள்ளேயே அவனுடைய பற்று, சிக்கல்களாக மாறிப்போகிறது. ஒருபோதும் கதவைத் திறந்து வெளியே வர அவனுக்கு வழி தெரியாது. வெளியிலிருந்து கதவைத் திறந்துவிட, ஒருவர் தேவைப்படுகிறார். அந்த வெளியிலிருந்து தரும் உதவியைத் தருவதற்காகத்தான் குரு அங்கே போகிறார்.
இதனை விளக்கும் ஜென் கதை இந்தப் பதிவில்...
47) இறப்பும் இருப்பும் - குழப்பமான பதிலால் விளக்கிய ஜென்குரு!
உயிரை நீங்கள் முழுமையாக உணர்ந்து புரிந்து கொண்டால், மரணம் என்பதும் உயிரின் இன்னொரு பரிமாணம்தான் என்பதை உங்களால் உணர்ந்து புரிந்துகொள்ள முடியும். அதை விடுத்து மரணத்தை மட்டும் தனியாகப் புரிந்துகொள்ள முயன்றீர்கள் என்றால், சுவாரசியமான கதைகளில் தான் சிக்கிக்கொள்வீர்கள்.
இதனை விளக்கும் ஜென் கதை இந்தப் பதிவில்...
48) அமைதி தேடிவந்த அதிகாரிக்கு விதைகளைக் கொடுத்த ஜென்குரு...
மனதின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து பெரும்பாலான நேரங்களில் நீங்கள் மனரீதியாகவே வாழ்கிறீர்கள். உயிர்ரீதியாக வாழ்வதில்லை. உங்களை உயிர்ரீதியாக வாழ வைப்பதே ஆன்மீக சாதனை.
இதனை விளக்கும் ஜென் கதை இந்தப் பதிவில்...
49) ஞானமடைந்த சீடனுக்கு ஜென்மடத்தில் என்ன கிடைத்தது?
ஆறாவது ஜென் பிரிவைச் சேர்ந்த சீடன் ஒருவன் காக்ஸி என்னும் மடாலயத்தில் சேர்ந்து குருவின் வழிகாட்டலால் ஞானம் அடைந்தான்.
குரு அவனை உலகத்தைச் சுற்றி வரப் பணித்தார். அவனும் குருவின் கட்டளையை சிரமேற்கொண்டு பயணம் மேற்கொண்டான்.
ஓர் ஊரில் வேறொரு மடாலயத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் அவனைச் சந்தித்து, "எங்கேயிருந்து வருகிறாய்?" என்று கேட்டான். "ஆறாவது பிரிவைச் சேர்ந்த காக்ஸி மடாலயத்திலிருந்து வருகிறேன்.." என்றான் ஞானமடைந்த சீடன்.
"அந்த மடாலயத்தில் உனக்கு என்ன கிடைத்தது?"
"நான் காக்ஸியில் சேர்வதற்கு முன் என்னிடத்தில் இல்லாதது எதுவும் அங்கு இல்லை.." என்றான் சீடன்.
"அப்புறம் எதற்காக அங்கே போனாய்?" என்று கேட்டான் மாணவன்.
"அங்கே போகாவிட்டால், என்னிடம் இல்லாதது எதுவும் அங்கே இல்லை என்பதை எப்படி அறிந்திருப்பேன்?"
ஜென் கதையின் விளக்கம் இந்தப் பதிவில்...
50) ஜென் புதிரை விளக்கும் பாகுபலி கதை
உடல் முழுவதும் வந்துவிட்டாலும், வால் மட்டும் சிக்கிப் போவது இப்படித்தான்! அந்த வாலை, சரியான நேரம் பார்த்துக் கத்தரித்துவிட்டால், அவர்களுக்கு ஞானோதயம் ஏற்பட்டுவிடும்.
இதனை விளக்கும் ஜென் கதை இந்தப் பதிவில்...