Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
இறுதியில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதுதான் இந்த உலகத்தில் வெளிப்படும்.
தங்களைத் தாங்களே நரகமாக்கிக் கொண்டவர்கள் சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறார்கள். தங்களை சொர்க்கமாக்கிக் கொண்டவர்கள் எப்படிப்பட்ட நரகத்திற்குச் சென்றாலும் நலமாகவே இருப்பார்கள்.
உங்கள் மனதின் அசைவின்மையில் தான் பொருள்தன்மைக்கு அப்பாற்பட்ட உணர்திறனும் புத்திசாலித்தனமும் இருக்கிறது.
ஒவ்வொரு மனிதரும் உயிரோடு இருக்கும்போதே அமைதியை உணர்வதற்குத் தகுதியானவர், இறந்தபிறகு தான் சாந்தியடைய வேண்டும் என்று இல்லை. நாம் இதனை நிகழச்செய்வோம்.
வாழ்க்கை என்பது பயன்பாட்டைப் பற்றியது இல்லை. அது உள்ளபடியே பிரம்மாண்டமாக உள்ளது.
நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பது உங்கள் வசதியை மட்டுமே நிர்ணயிக்கும், உங்கள் வாழ்வின் தரத்தை ஒருபோதும் நிர்ணயிக்காது.
உங்கள் வாழ்க்கையை எதிர்செயல் செய்வதிலிருந்து விழிப்புணர்வான பதில்செயலுக்கு நீங்கள் நகர்த்தினால், உங்கள் வாழ்வின் தரத்தையும் அனுபவத்தையும் நீங்களே முற்றிலுமாக நிர்ணயிப்பீர்கள். இதுதான் ஞானோதயம்.
நிதர்சனம் என்பது தன்னளவில் எளிமையானது. அறியாமை தான் அதை சிக்கலாக்குகிறது.
சலிப்பு என்பது உயிரெனும் இந்த அண்டத்து நிகழ்வுடன் ஈடுபடாமல் இருப்பதிலிருந்து வருகிறது.
படைப்பின் மூலமே உங்களுக்குள் உள்ளது. அதனுடன் உரிய தொடர்பை உருவாக்குவதற்கு மட்டுமே நீங்கள் உழைக்க வேண்டும்.
உண்மை என்பது சேருமிடமும் அல்ல, முடிவும் அல்ல. உண்மை என்பது வாழும் அனுபவம்.