கேள்வி:

நமஸ்காரம் சத்குரு. நான் சிறு வயதிலிருந்தே ஹனுமானை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் விரும்பியபோதெல்லாம் அசுர வடிவங்கள் எடுத்ததாகவும் பறந்ததாகவும், தன் உடலை சிறிய அளவில் குறுக்கிக் கொண்டதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதெல்லாம் உண்மையா அல்லது கதையா அல்லது ஏதாவது குறியீடா? நன்றி.

சத்குரு:

ஷாமனிசம் என்னும் பாரம்பரியம்

ஒருவர் அளவில் சிறியதாவதோ பெரியதாவதோ அல்லது பறப்பதோ அல்லது வேறு ஏதாவது செய்வதோ சாத்தியமா? மிகவும் சாத்தியம் தான். மிகவும் நிதர்சனம் தான். அது இந்நாட்டில், இந்த கலாச்சாரத்தில் அதிகமாக இருந்தது, ஆனால் அது இழிவாக கருதப்பட்டது. ஆனால் மற்ற இடங்களில் அது பெரிதாக பார்க்கப்பட்டது, குறிப்பாக அமெரிக்க பழங்குடியினரின் கலாச்சாரங்களில். ஷாமனிசம் என்னும் முழு பாரம்பரியமே இருக்கிறது. அதில் எப்படி ஒரு ஷாமன் ஒரு கழுகாகிறார், ஒரு ஈ ஆகிறார், ஒரு நரியாகிறார், தன்னை வேறு வடிவமாக மாற்றியமைத்துக் கொள்கிறார் என்பது பற்றி எல்லாம் இன்றும் அதிகம் பேசப்படுகிறது. அதனால், இவை எல்லாம் வெறும் கதைகள் அல்ல, ஒருவர் விரும்பினால் அவருடைய வடிவத்தை மாற்றியமைத்துக் கொள்வது என்பது மிகவும் சாத்தியமே. தியானலிங்கத்தில் உள்ள ஒரு பேனலில் ஒருவர் வேறொருவருக்கு தொடர்புடைய ஒரு வடிவெடுத்தது இருக்கிறது. நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? உங்களுக்கு தெரியாதா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கொஞ்சம் வாலையும் முக அம்சங்களையும் தவிர, மீதம் எல்லாம் சூப்பர்மேன். அவர் ஒரு சூப்பரான சூப்பர்மேன்.

அதனால், மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப, தேவையான வடிவெடுப்பது என்பது புதிதோ கேள்விப்படாததோ அல்ல. உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருக்கிறது. குறிப்பாக இப்போதெல்லாம், வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க ஷாமன்கள், கழுகாவதும், ஓநாயாவதும் பெரிய விதத்தில் விளம்பரப்படுத்தப்படுகிறது. அவர்களிடையே இந்த இரண்டு வடிவங்களும் மிகவும் வழக்கமானதாக உள்ளது.

ஆன்மீகம் அல்ல, அமானுஷ்யம்

அது இங்கேயும் கேள்விப்படாத ஒன்றல்ல. ஆனால் இந்த கலாச்சாரத்தில் அது இழிவாக கருதப்பட்டது. அங்கே இதைப் பெரிதாக நினைத்தார்கள், ஏனென்றால் இது ஆன்மீகம் அல்ல, அமானுஷ்யம். இங்கே நம் அமானுஷ்ய விஞ்ஞானிகள், நான் அவர்களை விஞ்ஞானிகள் என்று அழைக்கிறேன், ஏனென்றால் அவர்கள் அந்த வகை தான். அவர்கள் ஒரு பறவையாகவோ ஒரு விலங்காகவோ தங்களை மாற்றிக்கொள்வதில்லை, ஏனென்றால் அதில் ஆபத்து இருக்கிறது. ஒரு அழகான கதை உள்ளது… அந்த முனிவரின் பெயர், விழுங்குவாரே அவரின் பெயர் என்ன? உங்களுக்குத் தெரிகிறதா நான் யாரை பற்றி பேசுகிறேன் என்று? அஷ்வினி குமாரர்கள் அவரிடம் கற்க சென்றார்கள்… ஷுக்லாசார்யா. ஆம், அவர் ஒரு குதிரையின் வடிவெடுத்தார் இல்லையா? அஷ்வினி குமாரர்கள் குதிரையின் வடிவெடுத்தனர், அவர் எதை விழுங்கினார்? ஷுக்லாசார்யார் என்று நினைக்கிறேன்.

அதனால், ஒரு பெரிய கதையே இருக்கிறது, அது மகாபாரதத்தின் கிளைக்கதையாக இருக்கலாம், இது பெரும்பாலும் கிருஷ்ணாவதாரம் மாதிரியானது. இதுபோன்ற பல சரித்திர நிகழ்வுகள் உள்ளன… ஆனால் அது முரட்டுத்தனமான வழியாக கருதப்பட்டது. ஏனென்றால் நீங்கள் வேறு ஒரு வடிவெடுக்கும்போது இந்த உடம்பு பாதுகாக்கப்பட வேண்டும். அது எப்போதும் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

அதனால் யாரோ ஒருவர் அவருடைய உடம்பை பாதுகாப்பில் விட்டுச் சென்று ஒரு கழுகாக மாறிப் பறக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் கழுகு திரும்பி வந்தபோது உடம்பு காணாமல் போனது. இப்போது என்ன செய்வது… கழுகு என்ன செய்யும்? ஒரு கழுகு இங்கு வந்து உட்கார்ந்து "நான் ஒரு யோகி" என்று சொல்கிறதென்றால் பரிதாபமான நிலை இல்லையா? ஏனென்றால் உங்களால் பறக்க முடியாததால் கழுகாக இருப்பது பெரிது என்று நினைக்கிறீர்கள். கழுகாக இருப்பது பெரிதல்ல, அது உயரப் பறந்தாலும், எப்போதும் கீழே தான் பார்த்துக்கொண்டு இருக்கிறது. மேலே சென்று கீழே பார்ப்பதை விட இங்கு உட்கார்ந்து மேலே பார்ப்பது சிறந்தது, உண்மையாகவே சிறந்தது.

ரிமோட் கன்ட்ரோல்டு கோழி

அதனால், இங்கே அமானுஷ்ய விஞ்ஞானிகள் பிற வகையான முறைகளை வளர்த்தனர். அவர்கள் அவர்களாகவே பிற வடிவங்களை எடுக்கமாட்டார்கள். பிற வடிவங்களை தேர்வு செய்து அவற்றை ஒரு குறிப்பிட்ட வகையில் செயல்பட வைத்தனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட விலங்கை தேர்வு செய்வார்கள், பொதுவாக அதிகம் உபயோகப்படுத்தப்பட்டது கோழி. ஓ நீங்கள் அதை வீண் என்று நினைக்கிறீர்களா? கோழி இளமையானதாகவும் உயிரோட்டமானதாகவும் சமைக்கப்படாததாகவும் இருக்கவேண்டும்.

கோழியின் உயிரை விடுவித்து அந்த உயிர் வடிவத்தை உங்களுக்காக சில விஷயங்களை செய்யப் பயன்படுத்துவது. நீங்கள் அந்த கோழியின் உடம்பை எடுப்பதற்கு பதிலாக நீங்கள் அந்த கோழியை கட்டுப்படுத்தி சில விஷயங்களை செய்வது. ரிமோட் கன்ட்ரோல்டு கோழி, அப்படித்தானே? நீங்கள் கோழியாக ஆவதை விட ரிமோட் கன்ட்ரோல்டு கோழி சிறந்தது, இல்லையா? நீங்கள் கோழியாக ஆவதில் ஆபத்து இருக்கிறது. நீங்கள் உங்கள் உடம்பை விட்டுச் சென்று, கோழியாக வெளியே சென்று ஏதோ செய்ய முயற்சிக்கிறீர்கள், நீங்கள் யாருக்கோ தந்தூரியாகிவிடுவீர்கள். அதனால் இதே விஷயங்களைக் கையாள, அவர்கள் சிறந்த நூதனமான முறைகளை உருவாக்கினர்.

ஆஞ்சநேயர் ஒரு சூப்பர்மேன்

ஹனுமான் அளவில் சிறியதாவதும், பெரியதாவதும் சாத்தியமா? மிகவும் சாத்தியமே. இன்றும் கூட, இது பலரால், குறிப்பாக ஹனுமான் பக்தர்களால் நேரில் காணப்பட்ட ஒரு நிகழ்வாகவே உள்ளது. வடிவத்தை மாற்றிக்கொள்வது என்பது இன்றும் கூட ஹனுமான் பக்தர்களிடையே மிகவும் சாதாரணமான ஒன்றாக உள்ளது, ஏனெனில் அது அவர் ஏற்படுத்திய ஒரு போக்கு. ஹனுமான் ஒரு சூப்பர்மேன்.

கொஞ்சம் வாலையும் முக அம்சங்களையும் தவிர, மீதம் எல்லாம் சூப்பர்மேன். அவர் ஒரு சூப்பரான சூப்பர்மேன். அவருடைய பலம் அவரது பக்தி. அவருடைய இதயத்தில் இருந்த பக்தி அவ்வளவு பலமானது, அதனால் அவர் தனித்து விளங்கினார். அவருடைய அசாத்திய பக்தியால் தான். அதனால் நீங்கள் ஒரு குரங்காக இருக்க நேர்ந்தாலும், ஒரு பக்தராக இருந்தால், உங்கள் குரங்குத்தன்மையைத் தாண்டி அபாரமான ஒன்றாக மாறலாம். அதுதான் ஹனுமானின் கதை. நீங்கள் கழுதையாக இருந்தாலும் அது வேலை செய்யும். ஆம் அமானுஷ்ய அறிவியலில் பல அம்சங்கள் உள்ளன. இதற்கென்றே ஒரு வேதம் இருக்கிறது - அதர்வண வேதம் முழுவதும் இதைப் பற்றியதே.