ஈஷா தாய்மை நிகழ்ச்சி கர்ப்பிணி பெண்களுக்கும், பிறக்கப்போகும் குழந்தைகாகவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களின் உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலை பிறக்கப்போகும் குழந்தையை பாதிக்கும் என்பதால், நம் பாரத கலாச்சாரத்தில் கர்ப்பிணி பெண்களின் நலம் பேண விரிவான செயல்முறைகள் உருவாக்கப்பட்டன. இந்த கலாச்சார ஞானத்திலிருந்து கர்ப்பிணி பெண்கள், அவர்களின் உடல் மனம் மற்றும் உணர்ச்சி நிலையை ஆரோக்கியமாகவும், விழிப்புணர்வாகவும் வைத்துக்கொள்ள ஈஷா தாய்மை நிகழ்ச்சி உதவுகிறது. இந்த நிகழ்ச்சி தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தையும், ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு முறைகளையும் பற்றி தெரிந்து கொள்ள வழிகாட்டுகின்றது.
Sadhguru on Pregnancy & Motherhood
இந்த ஆன்லைன் நிகழ்ச்சி 5 ஆன்லைன் அமர்வுகளாகவும், நேரடி நிகழ்ச்சி 8 அமர்வுகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு அமர்வும் 1.5 - 2 மணி நேரம் வரை இருக்கும்
ஈஷாவின் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது.
வீடியோக்கள் மூலம் கர்ப்ப காலத்தின் பல நிலைகள் பற்றிய விழிப்புணர்வு, பிரசவம் மற்றும் பச்சிளம் குழந்தையின் பாதுகாப்பு , தாய்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம் ஆகியவை எளிய முறையில், சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உரையாடல்கள், செயல்முறை விளக்கங்கள், குழுக்களாக பிரிந்து செய்யும் செயல்கள்
எளிதான ஆனால் சக்திவாய்ந்த யோக பயிற்சிகள், மூச்சு பயிற்சி (ப்ராணாயாமம்) கற்றுத் தரப்படுகின்றன.
மகிழ்ச்சியான ஆரோக்கியமான பிரசவ காலம்.
கீழ்பாகத்தையும் வயிற்றுத் தசைகளையும் உறுதிப்படுத்தும். இதனால் எவ்வித சிக்கலும் இன்றி பிரசவம் சுலபமாக நடக்கும் சூழ்நிலை உருவாகும். அதோடு இப்பயிற்சிகளைத் தொடர்ந்து தினமும் செய்துவந்தால், பிரசவ நேரத்தில் ஏற்படும் மனஅழுத்தம் மற்றும் மனஉளைச்சல் குறையும்.
வயிற்றில் இருக்கும் குழந்தையின் உடல்-மன வளர்ச்சியை பெருமளவு மேம்படுத்தும்.
குழந்தை பிறந்தவுடன், பிரசவத்திற்கும் முன் இருந்த உடல்நிலைக்கு சீக்கிரம் திரும்பிவிட முடியும்.
நற்சான்றிதழ்கள்
திருமணத்திற்கு 3 வருடம் முன்பிருந்தே நான் யோகப் பயிற்சிகள் செய்துவந்தேன். நான் கர்ப்பம் தரித்தவுடன் ஈஷா யோக மையத்தைத் தொடர்பு கொண்டு என் பயிற்சிகளில் தேவையான மாற்றங்கள் செய்தேன். கடந்த 9 மாதங்களாக நான் கடைபிடித்துவந்த யோகப் பயிற்சிகள் பிரசவத்தின் போது எனக்குத் துணையாக இருந்தது.
முதல் பிரசவம் மறுபிறப்பு என்பதற்கு எதிர்மறையாக, எவ்வித சிக்கலும் இல்லாத பிரசவகாலம், மிக சுலபமாக, இயல்பாக நடந்த பிரசவம் என எனக்கு எல்லாம் சாதாரணமாக நிகழ்ந்தது. பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட மற்ற பெண்களைப்போல் நான் வலியில் துடித்துக் கத்தவில்லை. பிரசவம் நேரம் முழுவதும் விழிப்புணர்வோடு, நடப்பதை உணரும் தெளிவோடு இருந்தேன். இப்படியொரு மகத்தான அனுபவத்தை வழங்கிய அந்தப் புது உயிரை நான் ஆராதிக்கிறேன். இப்போது என் மகன் ஆழமான புரிதலோடு அனைத்தையும் ஏற்கும் மனப்பக்குவத்தோடு வளர்ந்து வருகிறான்.