பொருளடக்கம்
1. ஆக்கிரமிப்பு
2. யானை வலசைப் பாதை
3. கட்டிட அனுமதி

1. ஆக்கிரமிப்பு

"வனப்பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றாதிருத்தல்" எனும் தலைப்பின்கீழ் ஈஷாவை குறிப்பிடும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கை கூறுவதாவது:

அரசாங்கத்தின் பதிலில் (நவம்பர் 2017), ஆக்கிரமிப்புகள் TBGP (தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டம்) அதிகாரத்திற்குள் வரவில்லை என்கிறது. பதில் நிரூபிக்கத்தக்கதாக இல்லை, ஏனென்றால் இத்திட்டம் GPS முறைப்படி எல்லைகளைக் குறித்துவைத்து ஆக்கிரமிப்புகளைக் கண்காணித்து, வளங்களின் பாதுகாப்பை உறுத்திப்படுத்துவதை உள்ளடக்கியது. இது கோவையின் பிரிவு மேலாண்மை அலகின் அங்கமான போலுவாம்பட்டி கிராமத்தில் செயல்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு வனத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் தெளிவாக இதை குறிப்பிட்டுள்ளது:

  • ஈஷா அறக்கட்டளை காப்புக்காடுகளை ஆக்கிரமிக்கவோ, காப்புக்காடு எல்லைக்குள் அத்துமீறவோ இல்லை.
  • மாண்புமிகு பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்பு சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், ஈஷா அறக்கட்டளை காப்புக்காடுகளை ஆக்கிரமிக்கவோ, காப்புக்காடு எல்லைக்குள் அத்துமீறவோ இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த வாக்குமூலங்கள் அனைத்தும் கோவை பகுதியின் பிராந்திய வனப்பாதுகாவலரின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டவை.

தனி மனிதர்களிடத்தில் இருந்து சட்டப்பூர்வமாக வாங்கப்பட்ட தனியார் பட்டா நிலங்களில் ஈஷா யோக மையம் நிறுவப்பட்டுள்ளது.

2. யானை வலசைப் பாதை

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை, "யானை காப்புக்காடுகளில் நகரமயமாக்கல்: யானை வலசைப் பாதை/ வசிப்பிடமாக அறியப்படும் பாதுகாக்கப்பட்ட போலுவாம்பட்டி காப்புக்காடு பகுதியில் கட்டிடங்கள் இருந்தன," என்று கூறுகிறது.

  • தமிழ்நாடு வனத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ஈஷா யானை வழித்தடத்தில்/ வலசைப் பாதையில் இருப்பதாக எங்கும் குறிப்பிடவில்லை.
  • மாண்புமிகு பசுமைத் தீர்ப்பாயத்தின் (தெற்கு மண்டலம், சென்னை) முன் சுற்றுச்சூழல், வனத்துறை & பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவிலும், ஈஷா யானை வழித்தடத்தில் இருப்பதாக குறிப்பிடவில்லை.
  • தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கோரப்பட்ட தகவலுக்கு, காடுகளின் முதன்மை தலைமை பாதுகாவலர் (PCCF) அளித்த பதிலில், ஈஷாவோ, ஈஷாவிற்கு அருகிலுள்ள எந்தவொரு பகுதியோ தமிழ்நாட்டிலுள்ள யானை வழித்தடங்கள் பட்டியலில் இருப்பதாக குறிப்பிடவில்லை.
  • சுற்றுச்சூழல், வனத்துறை & பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் யானை சிறப்புப் படையான கஜாவின் அறிக்கையும், யானை வழித்தடத்தில் ஈஷா இருக்கிறதென்று குறிப்பிடவில்லை.
  • இந்திய வனவிலங்குகள் அறக்கட்டளை (WTI) வெளியிட்டுள்ள "ரைட் ஆஃப் பேசேஜ் - இந்தியாவின் யானை வழித்தடங்கள்" பட்டியலிலும் ஈஷா இருக்கும் பகுதி யானை வழித்தடமாக குறிப்பிடப்படவில்லை.
  • யானை பாதுகாப்புத் துறையில் வேலை செய்துவரும் பிரசித்திபெற்ற விஞ்ஞானிகளும், ஈஷா அறக்கட்டளை எந்த யானை வழித்தடத்திற்கும் அருகில்கூட இல்லை என்று தெளிவாக கூறுகின்றனர்.

ஈஷா யானை காப்புக்காடுகளுக்கு அருகிலோ, யானை வழித்தடம் எதற்கும் அருகிலோ இல்லை.

தமிழ்நாடு வனத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில்கூட, இந்த குற்றச்சாட்டுகள் எழக் காரணம், ஈஷா அறக்கட்டளையின் அதிகாரிகளுடன் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டினால் தான் என்று குறிப்பிட்டுள்ளது.

3. கட்டிட அனுமதி

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் "... மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் (HACA) அனுமதி நிலுவையில் இருந்தது (ஜூலை 2017)," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 2017ல், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் (HACA) அனைத்து கட்டிடங்களுக்கும் ஒப்புதல் வழங்கியது. தமிழ்நாடு நகர் & ஊரமைப்புத் துறை, மே மாதத்தில் தொழில்நுட்ப அனுமதி வழங்கியது.

59th-haca-order-minutes-isha-foundation

CAG அறிக்கையில் இந்த உண்மைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.