குரு பாதுகா ஸ்தோத்திரம் – பாடல் வரிகள் (Guru Paduka Stotram Lyrics in Tamil) மற்றும் இலவச MP3 டவுன்லோடு
குரு பாதுகா ஸ்தோத்திரம் என்ற சக்திவாய்ந்த மந்திரம் ஒருவருள் குருவின் அருளைப் பெற்றுக்கொள்ளும் தன்மையை உருவாக்குகின்றது. இது ஒரு இலவச MP3 பதிவிறக்கமாகவும் கிடைக்கிறது.
குரு பாதுகா ஸ்தோத்திரம் என்பது "குருவின் காலணிகளை" மகிமைப்படுத்தும் மிக சக்திவாய்ந்த மந்திரமாகும், அவை "வாழ்க்கை என்னும் முடிவற்ற கடலைக் கடக்க உதவும் படகு" என்று அடையாளமாகக் குறிப்பிடப்படுகின்றன. இந்த மந்திரம் ஒருவருக்கு குருவின் அருளைப் பெற்றுக்கொள்ள உதவுகிறது. ஈஷா பிரம்மச்சாரிகள் பாடிய இந்த மந்திரம் வைராக்யா இசைத்தொகுப்பின் ஒரு பகுதியாக கிடைக்கிறது, இதை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இது சத்குரு செயலியின் ஒரு பகுதியாகவும் கிடைக்கிறது. இதன் சமஸ்கிருத பாடல் வரிகள் மற்றும் பொருள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அருள் இல்லையென்றால்…
சத்குரு: அருள் உங்களுக்கு கிடைக்கவில்லை அல்லது நீங்கள் அருளுக்கு கிடைக்கப் பெறவில்லை என்றால், உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும், எவ்வளவு செல்வம் இருந்தாலும், வேறு எதுவே உங்களிடம் இருந்தாலும், நீங்கள் ஒரு அழகான வாழ்க்கையை வாழமுடியாது. ஒரு குருவின் அருள் என்பது காற்றில் உங்கள் கற்பனையில் தோன்றும் ஒன்று அல்ல.. நீங்கள் உணரும் தென்றலைப் போலவே இது ஸ்தூலமானது. இது சூரிய ஒளியைப் போலவே ஸ்தூலமானது.குருவின் தன்மை:
குரு என்று நீங்கள் குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட சக்தி, ஒரு குறிப்பிட்ட சாத்தியம். அது ஒரு நபர் அல்ல. ஒரு குறிப்பிட்ட நபர் அந்த சக்தி மற்றும் அந்த வெளியின் பிரதிநிதி ஆகிவிட்டார். நீங்கள் பார்ப்பதற்கு, வெளிச்சம்தான் உங்களுக்கு தேவை, விளக்கு அல்ல. ஆனால் இப்போது அந்த ஒரு குறிப்பிட்ட விளக்கு வெளிச்சத்தின் மூலமாக இருக்கிறது. எனவே "விளக்கு இல்லாமல் என்னால் இருக்க முடியாது" என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஒரு நிலையில் அது உண்மைதான். ஆனால் குருவின் தன்மை நேரத்திற்கும் இடத்திற்கும் கட்டுப்பட்டதல்ல. அதனால் <விளக்கின் அருகில் உட்கார்ந்திருப்பதால் நீங்கள் அதிகபட்ச ஒளியைப் பெறுவீர்கள் என்பதல்ல. நீங்கள் ஆயிரம் மைல் தொலைவில் இருக்கக்கூடும், ஆனால் இப்போது அந்த நபரின் அருகில் அமர்ந்திருப்பவரை விட அதிக அருளைப் பெறக்கூடும்.<
வெற்றி தோல்வியும், அருளும்:
அருள் இல்லாமல் வெற்றி உங்களுக்கு வராது. எப்படியாவது, ஏதோ ஒரு வழியில் நீங்கள் அருளைப் பெற்றுக்கொள்ளும் தன்மையைக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் இருக்கும் மனநிலை உங்களுள் அதை உருவாக்கலாம், உங்கள் உடலை நீங்கள் வைத்திருக்கும் விதம் உங்களை அதை பெற வைக்கலாம், உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் வைத்திருக்கும் விதம் உங்களை பெற வைக்கலாம் அல்லது உங்களுக்கு மிகவும் கடினமான முறைகள் தெரியும், அது எவ்வாறு இயங்குகிறது என்பதற்கான இயந்திர நுட்பத்தைப் புரிந்துகொண்டு நீங்கள் அந்த தன்மையுடைவராக முடியும். ஆனால் அருள் இல்லாமல் வெற்றி இருக்காது. நீங்கள் புத்திசாலியாக இருக்கலாம், ஆனால் இன்னும் நீங்கள் வெற்றியை அறியாதவராக இருப்பீர்கள். நீங்கள் மிகவும் திறமையானவராக இருக்கலாம், ஆனால் நீங்கள் தோல்வியுற்றவராக இருப்பீர்கள்.
ஆனால் அருளினால், ஒரு க்ஷணத்தில், நீங்கள் திடீரென்று எல்லாம் வெற்றிகரமாக அமைவதைக் காண்பீர்கள். நீங்கள் அமைதியாக இருக்க, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் அதை உள்ளிருந்து உருவாக்கிக்கொள்ள முடியும். உங்கள் உடலையும் மனதையும் எவ்வாறு வைத்திருப்பது என்பது உங்களுக்கு தெரிந்தால், நீங்கள் இந்த விஷயங்களை உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால் <நீங்கள் செய்யும் செயலில் வெற்றிகரமாக இருப்பது என்பது அருள் இல்லாமல் நடக்காது. அருள் என்ற எண்ணெய் இல்லாமல் உங்கள் இயந்திரம் வெகுதூரம் செல்லாது. உங்கள் வாழ்க்கையில் அனைத்துமே மலையேற்றம் போல ஒரு கஷ்டமான செயலாகவே இருக்கும்.< பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே இதைச் செய்துகொள்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தான் என்னும் அகந்தையில் நிரம்பி உள்ளார்கள். அவர்கள் அருளைப் பெற வாய்ப்பில்லை. அவர்களின் வாழ்க்கையில் எல்லாமே கடின உழைப்பு - கல்வி கடின உழைப்பு, வேலைக்கு செல்வது கடின உழைப்பு, திருமணம் என்பது ஒரு மிகப் பெரிய கடின உழைப்பு. ஆனால் நீங்கள் அருளைப் பெற மிகவும் தயார்நிலையில் இருந்தால், உங்களுக்கு அனைத்துமே சிரமமின்றி இருப்பதைக் காண்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் இப்போது உராய்வற்றத் தன்மை கொண்ட மனிதராக இருக்கிறீர்கள்.
Subscribe
சத்குரு App - இலவச மொபைல் செயலி
வைராக்யா - mp3 பதிவிறக்கம்
குரு பாதுகா ஸ்தோத்திரம் – பாடல் வரிகள் மற்றும் பொருள் (Guru Paduka Stotram Lyrics in Tamil)
அனந்த சம்சார சமுத்ர தார,
நௌகாயிதாப்யாம் குரு பக்திதாப்யாம்,
வைராக்ய சாம்ராஜ்யத பூஜநாப்யாம்,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.
முடிவற்ற வாழ்க்கை எனும் கடலை கடக்க உதவும் படகு இது
என் குருவின் மேல் பக்தியை என்னுள் கொண்டுவருவது
இதை வணங்கி பற்றற்ற வாழ்வின் சாம்ராஜ்யத்தை அடைவேன்
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
கவித்வ வாராஷினி ஸாகராப்யாம்,
தௌர்பாக்ய தாவாம்புத மாலிகாப்யாம்,
தூரிக்ருதா நம்ர விபத்தி தாப்யாம்,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.
பரிபூரண பௌர்ணமி நிலா போன்றதும் அறிவுக்கடலுமாம் இது
துரதிருஷ்டத்தீயினை போக்கும் நீர் இந்த பாதுகை
சரணாகதி அடைந்தவர்களின் துயரங்களை அழிக்கவல்லது
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
நதா யயோ ஸ்ரீபதிதாம் ஸமீயு,
கதாச்சிதாப்யாஷு தரித்ர வர்யா,
மூக்காஷ்ச்ச வாச்சஸ் பதிதாம் ஹி தாப்யாம்,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.
தன்னை வணங்கி துதிப்பவர்களை,
அவர்கள் ஏழைகள் என்றாலும் கூட, செல்வந்தர்களாக்கும்
ஊமைகளைக்கூட சிறந்த சொற்பொழிவாளராக்கும்
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
நாலீக நீகாச பதா ஹ்ரி தாப்யாம்,
நானா விமோஹாதி நிவாரிகாப்யாம்,
நம ஜனா பீஷ்டததி பிரதாப்யாம்,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.
தாமரை போன்ற குருவின் பாதங்களை நோக்கி நம்மை அழைத்து செல்வதும்
வீண் ஆசைகளை அழித்து நம்மை தூய்மைப்படுத்துவதும்
துதிப்பவரின் எண்ணங்களை நிறைவேற்றும்
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
ந்ருபாலி மௌலீப்ரஜ ரத்ன காந்தி,
ஸரித்வி ராஜ ஜ்ஜஷ கன்யகாப்யாம்,
ந்ருபத்வதாப்யாம் நதலோக பங்க்தேஹே,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.
மன்னனின் மகுடத்தில் ஒளிரும் மாணிக்கக்கல் போன்றது
முதலைகள் சூழ்ந்த நதியில் பிரகாசிக்கும் பெண் போன்றது
தன் பக்தனை அரசனாகவே ஆக்கும் சக்தி கொண்டது
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
பாபாந்த காரார்க பரம்பராப்யாம்,
தாபத்ரயாஹீந்த்ர ககேஸ்வராப்யாம்,
ஜாட்யாப்தி சம்ஸோ ஷண வாடவாப்யாம்,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.
இருண்ட பாவங்களை போக்கும் ஒளிரும் சூரியன் போன்றதும்
துன்பமெனும் நாகத்தை அழிக்கும் கருட ராஜனைப் போன்றதும்
கடல் போன்ற அஞ்ஞானத்தை எரித்து போக்கவல்ல தீ போன்றதுமான
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
ஷமாதி ஷட்க ப்ரத வைபவாப்யாம்,
சமாதி தான வ்ரத தீக்ஷிதாப்யாம்,
ரமாதவாங்க்ரே ஸ்திர பக்திதாப்யாம்,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.
சமாதி போன்ற ஆறு உயர்ந்த தன்மைகளை வழங்கவல்லதும்
பேரானந்த நிலையை சீடர்களுக்குத் தரவல்லதும்
என்றும் இறைவனின் திருவடியை நிலையாக வணங்கும் பக்தியைத் தரவல்லதுமான
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
ஸ்வார்சா பரானா கிலேஷ்டதாப்யாம்,
ஸ்வாஹா சஹாயாக்ஷ துரந்தராப்யாம்,
ஸ்வாந்தாச்ச பாவ ப்ரத பூஜநாப்யாம்,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.
எப்பொழுதும் தம் பணியில் ஈடுபட்டு
தொண்டாற்றும் சீடர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதும்
நாடுபவர்களின் தன்னை உணர்தலுக்கு உதவி புரிவதுமான
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
காமாதி ஸர்ப்ப வ்ரஜ காருடாப்யாம்,
விவேக வைராக்ய நிதி பிரதாப்யாம்,
போத பிரதாப்யாம் த்ருத மோக்ஷதாப்யாம்,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.
மோகம் என்ற பாம்பினை விரட்டும் கருடனைப் போன்றதும்
விவேகம், பற்றற்ற தன்மை போன்ற செல்வங்களை ஒருவருக்கு வழங்கவல்லதும்
ஞான அறிவினை ஒருவருக்கு ஆசிர்வதிப்பதும்,
தன்னை நாடுபவர்களுக்கு விரைவாக முக்திநிலையை தருவதுமான
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
ஆசிரியரின் குறிப்பு: மந்திரங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி படிக்க, ஒரு மந்திரம் எப்படி மாற்றத்திற்கு வழிவகுக்கிறது? என்ற பதிவைப் பார்வையிடவும்.