யோகா - புதியது, பழமையானது
கோவிட்க்கு பின்னர் வரும் உலகில் ஆரோக்கியம் என்பது ஆடம்பரமான ஒன்றாக இருக்காது. அது பிழைப்புக்குத் அடிப்படையான ஒன்றாக இருக்கும். காலம் கடந்து நிற்கும் யோக விஞ்ஞானம் ஆர்வமுள்ள ஒரு சிறிய குழுவினருக்குள் மட்டுமல்லாமல் உலகம் முழுமைக்கும் ஒரு புதிய இயல்பாக மாறிவிட்டது. உடல் மற்றும் மன நலனுக்கான சிறந்த வழி இதைத் தவிர வேறொன்று உண்டா?
உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதித்துக் கொண்டிருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் இந்த காலத்தில், ஜூன் 21-ஆம் தேதி நிகழவிருக்கும் சர்வதேச யோகா தினம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.
கொரோனா வைரசுக்கு தடுப்பூசியோ, குணப்படுத்தும் மருந்துகளோ இல்லாத சூழ்நிலையில், ஆரோக்கியமான உடலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அந்த நோய்த்தொற்றை எதிர்ப்பதற்கான இறுதி நிலை பாதுகாப்பாக இருக்கிறது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் மற்றவர்களை காட்டிலும் ஆரோக்கியமான மனிதர்களுக்கு முழுமையாக குணமடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக மருத்துவ சமூகங்கள் தெளிவாக அங்கீகரிக்கின்றனர். இனி ஆரோக்கியமாக இருப்பது ஆடம்பரமான ஒன்று அல்ல, உயிர் பிழைப்பதற்கு உரிய அடிப்படைத் தேவை அது.
முற்றிலுமாக மாறிவிட்ட வாழ்க்கை
சில மாதங்களுக்குள்ளாகவே இந்த நோய்த்தொற்று நம் சமூக அமைப்பின் அடிப்படையையே மாற்றிவிட்டது - நம் வாழ்க்கை, வேலை, உணவு, விற்றல், வாங்கல், தொடர்பு கொள்ளல் என அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது வணிகமாக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும், அரசாங்கமாக இருந்தாலும் அல்லது தனிநபராக இருந்தாலும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபவர்கள்தான் வெற்றியடைய முடியும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
Subscribe
எனவே இந்த சவாலை எதிர்கொண்டு தெளிவில்லாத எதிர்காலத்தை நோக்கி எவ்வாறு சமநிலையோடு தெளிவோடு பயணம் செய்கின்றீர்கள் என்பதுதான் இப்போது உங்கள் முன்னால் இருக்கும் கேள்வி.
புதிய இயல்புக்கான மறுவடிவம்
ஒவ்வொரு நாளும் உங்கள் உடல், மனம், உணர்வு மற்றும் சக்தி நிலையை உங்களால் மேம்படுத்த முடிந்தால் எவ்வாறு இருக்கும்? வெளிச்சூழ்நிலை எவ்வாறு இருந்தாலும் உங்கள் உள்சூழ்நிலை நூறு சதவிகிதம் உங்கள் விருப்பப்படி நிகழ்ந்தால் எவ்வாறு இருக்கும்?
யோகா - புதிய இயல்பு?!
சர்வதேச யோகா தினம் நிகழும் இத்தருவாயில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கான உலகின் முதன்மையான விரிவான அமைப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் - அது யோகா!
சத்குருவால் வடிவமைக்கப்பட்ட ஈஷா யோகா என்பது யோக விஞ்ஞானத்தின் சாரத்தில் அமைந்த நல்வாழ்விற்கான தொழில்நுட்பம். இதனால் உங்கள் மனத்தெளிவு, உணர்வு சமநிலை மற்றும் செயல்திறன் மேம்படும். மேலும் மன அழுத்தம், பயம் மற்றும் கவலை ஆகியவற்றை அகற்றுவதற்கு இது உதவும்.
சக்தி வாய்ந்த கருவியைக் கொண்டு உங்களை மறுவடிவம் செய்துக்கொள்ளுங்கள்
உலகெங்கிலும் உள்ள 200 கோடிக்கும் மேலான மக்களால் பின்பற்றப்படும் யோகா நீண்ட காலம் நிலைத்து இருப்பதற்கான காரணம், அதன் செயல்திறன் மற்றும் அதனால் ஏற்படும் பயனே. எந்த ஒரு மதத்தையும், சாதியையும், நம்பிக்கையையும், தேசியத்தையும் சாராமல், காலத்தை கடந்து நிற்கும் யோக விஞ்ஞானம் எல்லா தரப்பு மக்களும் எளிதில் அணுகக் கூடியதாய் இருக்கிறது. தற்காலத்தில் யோகா எங்கும் பரவியிருப்பது அதன் உலகளாவிய தன்மைக்கு சான்றாக உள்ளது. சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பானது ஏழு சக்திவாய்ந்த அத்தியாயங்களைக் கொண்டது. அதில் சில:
- சிரமமின்றி வாழ்வதற்கான நடைமுறை கருவிகள்
- வாழ்வின் முக்கிய அம்சங்களை எதிர்கொள்ள உதவும் தியானமுறைகள்
- புத்துயிர் ஊட்டும் சமநிலை தரும் யோகப்பயிற்சிகள்
- விழிப்புணர்வுக்கான கருவிகள்
- தொடர்ந்து அளிக்கப்படும் உதவி
- சத்குரு கேள்வி-பதில்கள் காணொளிகளுக்கு வாழ்நாள் அனுமதி
மாற்றத்திற்கான யுகம் இது... மாறுவதற்கு தயாராக இருக்கிறீர்களா?
கோவிட்-19 நோய்த்தொற்று புதிய மாற்றத்திற்கான ஒரு யுகத்தை உருவாக்கியுள்ளது. மேலும் உடல் நலம் மற்றும் மன நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழலில் தற்போது நாம் வாழ்ந்து வருகிறோம். இந்த சர்வதேச யோகா தினம் நமக்கெல்லாம் இத்தகைய சமயத்துக்கு ஏற்றதொரு நினைவூட்டலை வழங்குகிறது - அது "யோகாதான் புதிய இயல்பு" என்பதாகும்.
இதனையொட்டி சர்வதேச யோகா தினத்தில் சத்குரு சிறப்பு தரிசனத்தை வழங்க உள்ளார். இந்த சிறப்பான தினத்தில் சத்குருவின் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தையும் உள்வாங்க இலவச நேரடி ஒளிபரப்பைப் பாருங்கள்.
ஆசிரியர் குறிப்பு: யோகாவின் உலகிற்குள் உங்களது முதல் அடியை எடுத்து வையுங்கள்! ஈஷா யோகா ஆன்லைன் நிகழ்ச்சி மூலமாக இப்போது...!