சத்குரு அவர்கள் சமீபத்தில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஒன்றை கடந்திருக்கிறார். தற்போது சிறப்பாக குணமடைந்து வருகிறார்.
சத்குரு அவர்கள் கடந்த நான்கு வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். வலியின் தீவிரம் இருந்தபோதிலும், அவர் தனது வழக்கமான தினசரி செயல்பாடுகளையும், மற்ற செயல்பாடுகளையும் தொடர்ந்தார். மேலும் மார்ச் 8, 2024 அன்று மஹாசிவராத்திரி விழாவையும் முழுமையாக நடத்தினார்.
மார்ச் 14 ஆம் தேதி மதியம் அவர் டெல்லிக்கு வந்தடைந்த போதிலிருந்து அவரது தலைவலி மோசமடைந்தது.
அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர், நரம்பியல் நிபுணர், டாக்டர் வினித் சூரியின் ஆலோசனைப்படி, அன்று 4:30 மணிக்கே, அவசர MRIஸ்கேன் எடுக்கப்பட்டது.
அது மண்டை ஓட்டிற்குள் அதிக அளவு இரத்த கசிவு இருப்பதாக காண்பித்தது. பரிசோதனை செய்து 24-48 மணிநேரத்திற்குள் புதிதாக இரத்த கசிவு நடந்திருப்பதோடு, 3-4 வாரங்களாக நீடித்த இரத்த கசிவுக்கான சான்றும் அதில் தெரிந்தது.
உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட அறிவுறுத்தப்பட்டாலும், "கடந்த 40 ஆண்டுகளில் நான் ஒப்புக்கொண்ட எந்த ஒரு சந்திப்பிலும் கலந்துகொள்ளாமல் விட்டதில்லை" என்று சத்குரு மருத்துவர்களிடம் குறிப்பிட்டார். கடுமையான அறிகுறிகள் இருந்தபோதிலும், வலிக்கான மருந்துகளை எடுத்து கொண்டு, மார்ச் 15 ஆம் தேதி மாலை 6 மணி சந்திப்பிலும், மார்ச் 16 ஆம் தேதி இந்தியா டுடே கான்க்ளேவிலும் பங்கேற்றார்.
மார்ச் 17 அன்று, சத்குருவின் நரம்புமண்டல நிலைமை விரைவாக குறையத் தொடங்கியது மற்றும் இடது காலில் பலவீனம், தலைவலி அதிகமாவது, தொடர்ச்சியான வாந்தி போன்றவைகள் நிகழ்ந்தது. அப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். CT ஸ்கேன் மூளையில் குறிப்பிடத்தக்க வீக்க அதிகரிப்பையும் மற்றும் உயிருக்கு ஆபத்தான அளவு மூளை அடுத்த பக்கம் நகர்ந்திருப்பதையும் காட்டியது.
சத்குருவை டாக்டர்கள் குழு (டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் தியாகி மற்றும் டாக்டர் எஸ் சட்டர்ஜி) கவனித்துக் கொண்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சில மணிநேரத்திலேயே மண்டை ஓட்டில் ஏற்பட்ட ரத்தக் கசிவை அகற்ற அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சத்குருவுக்கு வென்டிலேட்டர் அகற்றப்பட்டது.
சத்குரு தன் உடல்நலத்தில் நிலையான முன்னேற்றத்தைக் காட்டி வருகிறார். அவரது மூளை, உடல் மற்றும் அத்தியாவசிய அளவு கூறுகள் இயல்பான நிலைக்கு வந்துள்ளன. அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக நன்கு குணமடைந்து வருகிறார். வினித் சூரி கூறுகையில், “அப்பல்லோவில் உள்ள மருத்துவக் குழு வழங்கிய சிறந்த மருத்துவ சிகிச்சைக்கு அப்பாற்பட்டு, சத்குரு தானாகவே தன்னை குணப்படுத்திக் கொண்டு வருகிறார்,” என்று குறிப்பிட்டார்.