உக்கிரமான பாட்டியம்மா
113 வயதுவரை வாழ்ந்த தனது கொள்ளூ பாட்டியம்மாவை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை நம்மிடையே சத்குரு பகிர்கிறார்!
சத்குரு: நான் சிறுவனாக இருந்தபோது, எனக்கு மிகவும் பிடித்த ஒரு நபர் எனது கொள்ளுப்பாட்டி. அவர் 113 வயது வரை வாழ்ந்தார். பலருக்கும் அவர் பேய் என்றோ பிசாசு என்றோ அரியபட்டார். அது... அவர் மற்றவர்களுக்கு கெடுதல் செய்தார் என்பதற்கல்ல, அவரின் சிரிப்பு பிறருக்கு அச்சுறுத்தலாய் இருந்ததால் அவள் 'பேய் போல்' சிரிக்கிறாள் என்று சொன்னார்கள்.
அவர் 113 வயது வரை வாழ்ந்தார். பலருக்கும் அவர் பேய் என்றோ பிசாசு என்றோ அரியபட்டார். அது... அவர் மற்றவர்களுக்கு கெடுதல் செய்தார் என்பதற்கல்ல, அவரின் சிரிப்பு பிறருக்கு அச்சுறுத்தலாய் இருந்ததால் அவள் 'பேய் போல்' சிரிக்கிறாள் என்று சொன்னார்கள்.
அவர் சிரித்தால் தெருவே அதிரும். அந்தத் தலைமுறையில் பெண்கள் அதுபோல் சிரிக்க அனுமதியில்லை. பெண்கள் என்றால் அடக்கமாக இருக்கவேண்டும், சப்தமில்லாமல் சிரிக்கவேண்டும் என்றெல்லாம் நியதி இருந்தது. ஆனால் இவரோ மிகச் சப்தமாக ஊரே அதிரும் வகையில் சிரிப்பார். எவ்வித கட்டுப்பாட்டிற்குள்ளும் அடங்காமல், அவர் ஒரு ஆணைப் போல் உரக்கச் சிரித்ததால், அவர் அரக்கியாகத்தான் இருக்கவேண்டும் என்று நம்பினர். அதுமட்டுமல்ல, அவரின் பல செயல்கள் வினோதமாய் இருந்ததால், அவர் குடும்பத்திற்கு ஒவ்வாதவராகவே கருதப்பட்டார். வெகுநாட்கள் கழித்துத்தான் அவரின் செயல்களுக்கு அர்த்தமும், அதன் ஆழமும் எனக்குப் புரிந்தது. ஆனாலும் அந்த வயதில் அவர் செய்த விஷயங்கள் எனக்குப் பிடித்ததோடு, என்னை வசீகரிக்கவும் செய்தது.
நான் சிறுவனாக இருந்தபோது, என் கொள்ளுப்பாட்டியை வெவ்வேறு பரிமாணங்களில் நான் பார்த்திருக்கிறேன். "உங்களுக்குள் என்ன நடக்கிறது?" என்று கேட்பேன். உரக்கச் சிரித்துக் கொண்டே சொல்வார், "ஒரு நாள் உனக்கு நிச்சயம் இது புரியும்" என்று.