IYO-Blog-Mid-Banner

கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் நாம் என்ன செய்யமுடியும்?

சத்குரு: நாம் தற்போது சவாலான காலத்தில் வாழ்கிறோம். ஒரு தலைமுறை மக்களாகிய நாம் இதுபோன்ற ஒரு சூழ்நிலையைப் பார்த்ததில்லை. இது எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதைப் பொறுத்து, நமது இயல்பு வாழ்க்கைக்கு ஒரு அச்சுறுத்தலாக அமையும், இதை இப்போதே பொறுப்புடன் கையாளாவிட்டால் நம் வாழ்வின் பல அம்சங்கள் மீண்டும் ஒருபோதும் மாறாமல் போய்விடும். இதை நாம் மிகவும் பொறுப்புடனும் விவேகத்துடனும் நடத்தினால், இது நம் தலைமுறையில் ஒரு சிறிய தடுமாற்றமாக மட்டுமே கருதப்படும்; இல்லையெனில் இது ஒரு பெரிய பேரழிவாக மாறும். மனிதர்கள்தான் இப்போது நோய் தொற்றை பரப்புபவர்களாக உள்ளனர் என்பதால், வைரஸை நிறுத்துவது அல்லது அதை எல்லா இடங்களிலும் பரப்புவது நம் கையில் உள்ளது.

இதைப் போன்றதொரு நேரத்தில், நீங்கள் தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பது உங்களுக்கான மிக அடிப்படையான பொறுப்பாக இருக்கிறது. ஒருவேளை உங்களுக்கு தொற்று ஏற்பட்டுவிட்டால், நீங்கள் வேறொருவருக்கு அதைப் பரப்பாமல் இருப்பதில் உறுதியாக இருக்கவேண்டும். உங்களுடன் தொற்று நின்றுபோக வேண்டும். இந்த அளவுக்கு நாம் செய்தாலே, இந்தத் தொற்றை நாம் கட்டுப்படுத்திவிட முடியும். தற்போது, இத்தனை லாக்டவுன்கள் மற்றும் நமது இயல்பு வாழ்க்கையை முழுமையாகக் குறைத்துக்கொண்டதன் காரணத்தினால், ஓரளவுக்கு அது கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் நாம் வைரஸை வெற்றிகொள்ளவில்லை. அது இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதுடன், நீங்கள் சற்று தளர்த்தினால் அது மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்த முடியும். தயவுசெய்து ஆரோக்கியத்துடன் இருங்கள், சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள்.

ஈஷா அறக்கட்டளை என்ன செய்துகொண்டிருக்கிறது?

மருத்துவ அமைப்பு, காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளும் முன்னணியில் இருந்துகொண்டு, சமூக விலகலைக் கடைப்பிடிப்பதற்கும், மருத்துவமனைகளில் மக்களுக்கு சேவை செய்வதிலும் தங்களால் இயன்றவரை முயற்சி மேற்கொண்டுள்ளனர். தொற்றுக்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கும் இவர்களுக்கு நாம் இலவசமாக ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பை வழங்குகிறோம். ஈஷா அறக்கட்டளைக்கு இது ஏராளமான செலவினத்தை ஏற்படுத்தும் என்பதுடன் எவ்வளவு காலத்திற்கு நம்மால் அதைத் தாக்குப்பிடிக்க முடியும் என்பதும் கேள்விக்குரியது. இதனை நாம் மே, 31 வரை வழங்குகிறோம். மேலும், மக்கள் அனைவருக்கும் பாதி கட்டணத்தில் ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு வழங்கப்படும். ஏனென்றால், அனைவருடைய பொருளாதார நிலைமையும் பல வழிகளிலும் குறைந்துவிட்டது அல்லது குறைந்தபட்சம் வெகு விரைவில் அதற்கான சாத்தியக்கூறு இருக்குமென்று எதிர்பார்க்கின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
மக்கள் தங்களது உயிருக்கும் மேலாக மற்றவர்கள் நல்வாழ்வை உயர்த்தி பிடிக்கும்போது, அவர்கள் வணங்கத் தகுந்தவர்களாக மாறுவதாகவே நான் நினைக்கிறேன்.

குறைந்தபட்சமாக, உங்களால் அணுகக்கூடிய, ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் அல்லது ஒரு காவல் அதிகாரிக்காவது ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பை வழங்குவதற்கு ஈஷா தன்னார்வலர்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அவர்களை அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை; நீங்கள் அவர்களை தொலைபேசியில் அழைத்து, உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, இந்த வகுப்பு உங்களுக்குள் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்தக் காரணத்தினால்தான் நீங்கள் இதனை வழங்குவதாகவும் மற்றும் இது இலவசம் என்றும் எடுத்துக்கூறுங்கள். அதேநேரத்தில், குறைந்தபட்சம் இரண்டு பேரையாவது பாதி கட்டணத்தில் இந்த மாதத்தில் பதிவு செய்ய செய்தால், இந்த செயல்முறையை அதிக சிரமமில்லாமல் அறக்கட்டளையால் மேற்கொள்ள முடியும். ஏனென்றால் இப்போது, தமிழகத்தின் கிராமப்புறங்களில் நமது தன்னார்வலர்கள் அனேக பணிகளை செய்துகொண்டிருக்கிறார்கள், மேலும் பட்டினியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கையும் துரதிருஷ்டவசமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கான நிதிச்சுமையும் நமக்கு இருக்கிறது.

மக்கள் தங்களது உயிருக்கும் மேலாக மற்றவர்கள் நல்வாழ்வை உயர்த்தி பிடிக்கும்போது, அவர்கள் வணங்கத் தகுந்தவர்களாக மாறுவதாகவே நான் நினைக்கிறேன். இந்தத் தொற்றுக்கு தங்களையே பணயம் வைக்கும் மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் பலருக்கும் இது நமது அர்ப்பணம்.

ஈஷா யோகா ஆன்லைன் – உளவியல் மற்றும் உணர்ச்சிரீதியான நல்வாழ்வுக்கான ஒரு கருவி

ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு தொற்று ஏற்பட்டு, பிறகு குணமடைந்த பலருக்கும் சுவாசச் செயல்பாடு இன்னமும் சாதாரண நிலைக்குத் திரும்பாமல் இருப்பதை நாம் காண்கிறோம். தொற்றின் ஒரு குறிப்பிட்ட நிலைக்குச் செல்லும் மக்களுக்கு நுரையீரல் செயல்பாடு பாதிப்படைவதாக பல மருத்துவர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவு ஃபைப்ரோசிஸ் (இணைப்புத்தசை அலர்ஜி) நிகழ்ந்தால், அவர்களது வாழ்க்கையில் சுவாசம் பழைய நிலைக்குத் திரும்பாமல் போக சாத்தியம் இருக்கிறது.

நாம் எப்படிக் கையாள்வது என்பதே தெரியாத, கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரி இப்போது வெளியில் இருக்கிறது, ஆனால் குறைந்தபட்சம் நம்மை எப்படிக் கையாள்வது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். நமது சொந்த எண்ணம் மற்றும் உணர்ச்சியே ஒரு தடையாகவும், சவாலாகவும் இருக்கக்கூடாது. நாம் ஒவ்வொருவரும் தீர்வின் ஒரு பகுதியாக இருப்பது எப்படி என்று பார்க்கவேண்டும். தனிமனிதர்கள் சமநிலை மற்றும் புத்திசாலித்தனத்துடன், மேலும் துடிப்புடன், ஆனந்தத்துடன் போராடுவதற்கும், தங்கள் வாழ்க்கையைக் கையாள்வதற்கும் தயாராக வேண்டியது தீர்வின் மிக முக்கியமான பகுதியாக இருக்கிறது. ஈஷா யோகா ஆன்லைன் இதற்கான மகத்தான கருவியாக இருக்கமுடியும் என்பதுடன், இயன்ற அளவு அதிகமான மக்களுக்கு அது வழங்கப்படவேண்டும். இதை எவ்வளவு அதிகமான மக்களுக்கு வழங்குகிறோமோ, அது உலகத்துக்கு அவ்வளவு மேலானது. ஏனென்றால் இந்த நேரத்தில் மக்களுக்குள் ஒருவிதமான உளவியல் சமநிலையையும், உணர்ச்சியில் உறுதியும் கொண்டு வருவது அதி முக்கியமானது.

ஷாம்பவி மஹாமுத்ரா இல்லாமல் ஈஷா யோகா ஆன்லைன் எப்படி செயல்படும்?

ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பானது, நீங்கள் யார் என்பதன் உளவியல்ரீதியான மற்றும் உணர்ச்சிரீதியான பரிமாணத்தை உறுதிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி (ஷாம்பவி மஹாமுத்ரா) என்பது மனிதரின் உள்ளார்ந்த சக்தி நிலையையும், இரசாயனத் தன்மையையும் கையாள்கிறது. பயிற்சியை ஆன்லைன் மூலம் நாம் கற்றுக்கொடுக்க இயலாது, ஆனால் இந்தச் சூழல் கடந்து சென்றவுடன், பல்வேறு நகரங்களில் மக்களுக்குப் பயிற்சியை வழங்குவதில் நாம் உறுதியுடன் இருப்போம். ஆனால் தற்சமயம், ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பில் பங்கெடுப்பதால், இந்த சவாலான சூழலைக் கடந்து செல்லக்கூடிய வகையில் மக்கள் அவர்களது மனதில் ஒருவிதமான சமநிலையையும், உணர்ச்சியில் ஒருவித இனிமையையும் எளிதில் அடையமுடியும்.

ஈஷா யோகா ஆன்லைன் வகுப்புக்கும், சத்குருவின் மற்ற வீடியோக்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம்

ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு, உங்களைப் படிப்படியாக அழைத்துச் சென்று நீங்கள் இயல்பாகவே அமைதியாகவும், ஆனந்தமாகவும் திறந்த நிலையில் இருக்கக்கூடிய ஒரு புள்ளியில் கொண்டு நிறுத்துவதற்கான ஒரு கருவியாக இருக்கிறது. யூ டியூப் வீடியோக்கள் உங்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும், சில விஷயங்களைத் தெளிவுபடுத்த முயற்சிப்பதாகவும் உள்ளன, ஆனால் அவைகள் படிப்படியான ஒரு செயல்முறையாக இல்லை. யூ டியூபிலும் மற்றுமுள்ள தளங்களிலும் காணப்படும் வீடியோக்களை, ஈஷா யோகா ஆன்லைன் வகுப்புடன் நாம் ஒப்பிட்டு பார்க்கமுடியாது. வித்தியாசமான ஒரு நிலையில் செயல்படும் இது, மிகத் துல்லியமாக, செம்மையாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு சாதனம் அல்லது ஒரு கருவியாக உள்ளது.

நமது தலைமுறைக்கான ஒரு குறிக்கோள்

நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான் உங்களுடன் இருக்கிறேன். இந்தக் காலகட்டத்தினூடே நாம் ஒவ்வொருவரும் உயிரோட்டத்துடன் இருப்பதுடன், நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களும் உயிருடன் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக, எளிதில் பாதிப்படையக்கூடிய வயதுடையவர்களாக, உங்களது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகள் உங்களுடன் இருந்தால், தயவுசெய்து அவர்கள் உயிருடன் இருக்கவேண்டும் என்பதில் முழுமையான நோக்கம் கொள்ளுங்கள். இது இந்தத் தலைமுறையின் ஒரு நோக்கம், அதாவது நமது வாழ்வின் போக்கில் குறுக்கிட்ட ஒரு பெருந்தொற்றினை, நாம் பொறுப்புடனும் அறிவார்ந்த முறையிலும் கையாண்டதில், அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டெழுந்தோம் என்ற நிலையை உருவாக்குவது. ஆழமான பொறுப்புணர்வுடன் எண்ணற்ற மக்கள் நீங்கள் களத்தில் இருக்கும் நிலையில், இது உங்களுக்கும், நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் மற்றுமுள்ள சமூகங்களுக்கும் நிகழ்வதில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள் என்பதில் நான் நம்பிக்கை கொள்கிறேன். நீங்கள் அனைவரும் இதில் வெற்றியடைய வேண்டும் என்பதே என் விருப்பமும், என் ஆசியுமாக இருக்கிறது.

 

ஆசிரியர் குறிப்பு: ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு, கொரோனா பாதுகாப்பு வீரர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு 50% கட்டணத்திலும் வழங்கப்படுகிறது.

IYO-Blog-Mid-Banner