சீனாவிற்குத் தேவை உண்மையான யோகா
சீனாவின் ஆன்மீக அன்பர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த சத்குரு, யோகாவை அதன் உண்மையான சாரத்தில் சீனா ஏற்றுக்கொள்வதற்கான தருணம் வந்துவிட்டது என்பது பற்றிப் பேசுகிறார்.
... இப்போது, யோகா!
சத்குரு : பல தருணங்களில் மக்கள் தங்கள் செல்வத்தை இழக்கும் நேரத்தில் அவர்கள் தங்கள் வாழ்க்கையையே இழந்துவிட்டதாக நினைத்து தங்களை மாய்த்துக்கொள்ள விரும்புகிறார்கள் அல்லவா?! அது அல்ல. நீங்கள் செல்வத்தை இழந்துள்ளீர்கள் என்றால், இது யோகாவுக்கான தருணம்!Subscribe
வாழ்வு குறித்த அற்புதமான ஆவணமாக இருக்கின்ற யோக சூத்திரங்களை, இதனால்தான் பதஞ்சலி ஒரு அரை வாக்கியத்துடன் ஆரம்பித்தார். திருமணம் செய்துகொள்வதால் அல்லது திருமணம் செய்யாமல் இருப்பதால் உங்கள் வாழ்க்கை முழுமையடையும் என்று நீங்கள் இன்னமும் நம்பினால் - யோகத்துக்கான தருணம் வரவில்லை; உங்களுக்குத் தேவையான பணம் மற்றும் செல்வம் கிடைத்துவிட்டால், உங்கள் வாழ்க்கை நிலைபெற்றுவிடுகிறது என்று நீங்கள் நம்பினால் - யோகத்துக்கான தருணம் வரவில்லை; புதிய வீடு ஒன்றைக் கட்டிவிட்டால் அல்லது ஒரு புதிய கார் வாங்கிவிட்டால் வாழ்க்கை நிறைவு பெற்றுவிடும் என்று நீங்கள் நம்பினால் - யோகத்துக்கான தருணம் வரவில்லை; இவை அனைத்தும் வாழ்க்கைக்கான வசதிகளைச் செய்துகொள்ளும் சில விஷயங்கள். ஆனால், எந்த விதத்திலும் இவைகள் நம்மை உண்மையாக மாற்றமடையச் செய்வதல்ல என்பதை நீங்கள் அறிந்தால் – இந்த ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொண்டால் – “மேலும் இப்போது யோகா.”
எனவே, சீனாவுக்கு அதற்கான நேரம் வந்துள்ளது - “மேலும் இப்போது, யோகா." சொல்லக்கூடியவை மற்றும் செய்யக்கூடியவை அனைத்தும் பூர்த்தியாகிவிட்ட காரணத்தால், இரண்டு தலைமுறைக் காலங்களிலேயே - வெறும் ஐம்பது வருட காலங்களில், ஒரு நூறு கோடி மக்களை மிக மோசமான, பரிதாபகரமான வறுமை நிலையில் இருந்து போதியஅளவிலான நல்வாழ்விற்கு வழிநடத்திச் சென்றுள்ள ஒரே சமூகமாக சீனா விளங்குகிறது. வேறெங்கும் இத்தகைய நிகழ்வு எப்போதும் நிகழ்ந்ததில்லை. தற்பொழுது இந்தியா அத்தகையதொரு நிலையின் தலைவாயிலில் நின்று கொண்டிருக்கிறது. இரும்புக்கரம் கொண்டு சீனதேசம் செய்த இந்த நிகழ்வை, மக்களாட்சி முறையில் இந்தியாவால் செய்ய முடியும் – ஆனால், நாம் இன்னமும் ஆரம்ப நிலையிலேயே நின்றுகொண்டு இருக்கிறோம்; நாம் இன்னமும் அதற்கான தூரத்தை கடக்கவேண்டியுள்ளது.
நாம் பல விஷயங்களைக் குறித்த கருத்துக்களைக் கூறமுடியும் - பேச்சுக்கான சுதந்திரம் பற்றி, யோகாவுக்கான சுதந்திரம் பற்றி, ஒரு தனிமனிதருக்குரிய குறிக்கோளை அடைவதற்கான சுதந்திரம் பற்றி, மேலும் பலவற்றையும் - ஆனால், சீன மக்களின் தற்போதைய நல்வாழ்வு யாரோ ஒரு மனிதரின் வலுக்கட்டாயமான தீர்மானத்தின் விளைவாக நிகழ்ந்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அந்த வாழ்க்கைமுறையை இப்பொழுது பின்பற்றலாமா? வறுமையின் நம்பிக்கையிழந்த நிலைகளில் அவர்கள் வாழ்ந்திருந்தபோது, முன்னோக்கித் தள்ளுவதற்கான வழியாக அது இருந்தது – நல்லதோ, கெட்டதோ, அதுதான் தீர்வாக அமைந்தது. அது வெற்றிகரமாக நிகழ்ந்துள்ள காரணத்தால், நாம் அதனைப் பாராட்ட வேண்டும். ஏனென்றால், அதிகாரத்தினால் சில விஷயங்களைச் செய்வதைக் காட்டிலும், ஒட்டுமொத்தமாக ஒரு தலைமுறை மக்களை கொடுமையான வறுமையில் உழலவிடுவது மிக மோசமான குற்றமாகும். அதிகாரத்தின் வலிமைகொண்டு செய்யும் செயல்கள் கொடூரமானவை; வலியைத் தருபவை; சிலசமயம் மக்களின் உயிரையும் எடுக்கிறது. ஆனால், முழுமையாக ஒரு தலைமுறை மக்களை மோசமான வறுமையில் உழலவிடுவது மிகப்பெரிய குற்றம். ஏனெனில், மனிதரின் சாத்தியக்கூறுகளை அபகரித்துவிட்டு, அவர்களை எப்படியாவது வாழச்செய்வது உண்மையில் ஒரு தீர்வு அல்ல.
யோகா மக்களின் அபின்(போதை) அல்ல
சீன தேசத்திற்கு யோகாவுக்கான தருணம் வந்துவிட்டது. அங்கே இப்போது பிரபலமாகிவரும் உடம்பை வளைத்தும் முறுக்கியும் செய்யும் யோகமுறைக்கு அல்ல - உண்மையான யோகாவுக்கான தருணம்! யோகா என்றால் உங்களின் தனிமனித எல்லைகளை அழிப்பதற்கானது. சீனாவைப் போன்ற ஒரு தேசம் "இதைத்தான் நான் செய்வேன்" - என்கிற வலுவான ஒரு உணர்வின் காரணமாக வளர்ந்துள்ளது - இது ஒரு தேசத்திற்கான உறுதியான அணுகுமுறை. இப்பொழுது அந்த இலக்குகள் சாதிக்கப்பட்டுவிட்ட நிலையில், அவர்களுக்குள் மெதுவாக தளர்வு நிலை ஏற்படவேண்டும் - அதை அவர்கள் செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். எனினும், அது இந்தத் தலைமுறைக்குப் பயன்படும் வகையில் போதுமான வேகத்தில் நிகழாமல் இருக்கக்கூடும். அது நிகழத் தேவைப்படுகிறது. ஆனால், எதிர்ப்பினாலோ அல்லது அவர்கள் தங்கள் தேசத்திற்காக உருவாக்கியுள்ள ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் விதத்திலோ நிகழக்கூடாது. ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவதால் நீங்கள் எந்த இடத்தையும் அடையப் போவதில்லை.
கடந்தகாலத்தின் மதங்கள் அபின் போன்ற போதையாக விவரிக்கப்பட்டன – ஏனெனில், மதங்கள் போதையாகத்தான் இருந்தன. மதங்கள் மக்களைத் தூக்கத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தன. ஆன்மீக வழிமுறைகளின் தேடலாகிய யோகா, முந்தைய காலத்தின் அபின் போல மக்களை போதையில் ஆழ்த்தும் வகையில் செயல்படாது. மாறாக, அது உற்சாகமூட்டும் சக்தியாக செயல்படும் - அந்த நாட்டை நிர்வகிப்பவர்களுக்கு இந்தப் புரிதல் கொண்டுவரப்பட வேண்டும். அதுதான் யோகாவை முன்னெடுத்துச் செல்வதற்கான வழி.
ஆசிரியர் குறிப்பு : உங்கள் ஊரிலும், அருகாமையிலும் மட்டுமல்லாது உலகெங்கும் நடைபெறும் ஈஷா யோகா வகுப்புகள் பற்றிய விபரங்களைப் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.