சத்குரு:

நம் கூட இருக்கிற மனிதரோடு நாம் எப்படி பேசவேண்டும்? ஏதோ ஒரு குறிப்பிட்ட விதமாக பேசவேண்டும் என்று தேவையில்லை. இந்த குறிப்பிட்ட விதமாக ஏதோ நல்ல முறையாக பேசவேண்டும் என்று நாம் முயற்சி செய்தால், ஏதோ ஒரு சூழ்நிலையில் அது வேலை செய்தாலும், கொஞ்ச நேரத்திற்கு பிறகு அதனால் நமக்குள்ளேயே ஒரு பாதிப்பு வரும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பேச்சு - உங்கள் தன்மையை வெளிப்படுத்துவதற்கு ஒரு கருவி

அடிப்படையாக ஒரு சூழ்நிலைக்கு எப்படி தேவையோ அப்படி பேசவேண்டும். நாம் என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நம் பேச்சு, நம் செயல் எல்லாமே, எப்போதுமே சூழ்நிலைக்கு ஒத்து வருவது போல இருக்க வேண்டும். உங்கள் பேச்சு என்பது இன்னொருவருக்காகத் தானே, உங்களுக்காக இல்லை.

உங்கள் பேச்சு என்பது உங்கள் தன்மையை வெளிப்படுத்துவதற்கு ஒரு கருவி. உங்கள் தன்மை எப்படி இருக்கிறது அதுபோல தான் பேச்சு தானாகவே வரும்.

 பேச்சு, How to Talk to Anyone in Tamil

உங்கள் பேச்சு என்பது உங்கள் தன்மையை வெளிப்படுத்துவதற்கு ஒரு கருவி. உங்கள் தன்மை எப்படி இருக்கிறது அதுபோல தான் பேச்சு தானாகவே வரும். அதனால் நம் பேச்சை சரிப்படுத்துவதற்கு முயற்சி செய்வதற்கு பதிலாக, நம் உள்தன்மை நாம் எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று நாம் கவனம் வைத்துக்கொண்டால், நம் உள்தன்மை மிகவும் அன்பாக, ஆனந்தமாக, அமைதியாக இருந்தால், நம் பேச்சு பற்றி நாம் கவலைப்படத் தேவையே இல்லை. நாம் எப்படி பேசினாலும் நன்றாகவே இருக்கும்.

கணக்குப் போட்டு பேச வேண்டுமா?

நல்லது பேசவேண்டும் என்று நாம் மிகவும் கவனமாக கணக்கு போட்டு பேச ஆரம்பித்துவிட்டால், இதனால் ஒன்றும் நன்மை வராது. உங்களுக்கும் ஒரு நன்மையும் வராது, இன்னொருவருக்கும் நன்மை வராது. அதற்கு பதிலாக நம் உள்நிலையை நாம் எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? நாம் ஒரு அமைதியான, ஆனந்தமான, அன்பான ஒரு மனிதனாக நம் உள்நிலையை நாம் மாற்றி வைத்துக்கொண்டால், நம் பேச்சு என்பது தானாகவே எப்படி தேவையோ ஒரு சூழ்நிலைக்கு அப்படி தானாகவே நடக்கும்.

உங்கள் பேச்சு என்பது உங்கள் தன்மை எப்படி இருக்குமோ அப்படித்தான் வெளிப்படும். ஒரு நடிப்பான பேச்சினால் உங்களுக்கும் நன்மை வராது, இன்னொருவருக்கும் நன்மை வராது. அதனால், நாம் எப்படி பேசவேண்டும் என்பதை நாம் கணக்கு போடாமல், நாம் எப்படி இருக்க வேண்டும் நமக்குள் என்று நாம் கொஞ்சம் ஆழமாக பார்த்தால், நம் பேச்சு பற்றி நாம் கவலை வைத்துக்கொள்ளத் தேவையில்லை.