கேள்வி: இப்போதெல்லாம், இல்லத்தரசிகள் சில தருணங்களில் அவமதிப்பை எதிர்கொள்கின்றனர். வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தாலும்கூட, இந்த மனோபாவம் அவர்களிடம் நீடிக்கிறது. இதை ஒருவர் எப்படி அணுகுவது?

சத்குரு: பொதுவாக, மக்கள் பொருளாதாரத் தேவைக்காக வேலைக்கு செல்கின்றனர். நீங்கள் என்ன செயல் செய்கிறீர்கள் என்ற ஆர்வத்தில் செயல்படுகிறீர்கள் என்றால், அது வேறு விஷயம். ஆனால், பெரும்பாலான மக்கள் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே வேலை செய்கின்றனர். ஆகவே, ஒரு குடும்பத்தில் பணத்திற்கான தேவை ஏற்பட்டால், பெண்கள் வெளியில் வேலைக்குச் செல்வதோ அல்லது வீட்டிலிருந்தபடியே சுயதொழிலில் ஈடுபட்டு சம்பாதிப்பதோ மிகவும் நல்லது. கேள்வி, நீங்கள் வேலை செய்ய வேண்டுமா, இல்லையா என்பது பற்றி அல்ல. அத்தகைய தேவை இருக்கிறதா, இல்லையா என்பதுதான் கேள்வி.

வேலைக்குச் செல்வது குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு என்பதைவிட, ஒரு சமூகத்தேவை என்ற நிலை ஏற்பட்டாலும் கூட, அனைத்து பெண்களும் வேலைக்குச் செல்லவேண்டும் என எனக்கு தோன்றவில்லை. நாம் இவ்வளவு தொழில்நுட்பங்களை உருவாக்குவதின் நோக்கம், என்றோ ஒரு நாள் நாம் அனைவரும் வேலை செய்வதற்கான தேவையே இல்லாத ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதால். வாழ்க்கையை விடுமுறையிலே கழிக்கலாம்! ஆனால் பலரும் செயலின் நிர்ப்பந்தத்தின் காரணமாக வேலைக்குச் செல்கின்றனர். அவர்களுக்கு வேறு என்ன செய்வது என்பது தெரியவில்லை. அது துரதிருஷ்டமான ஒரு வாழ்க்கை முறை.

 குறிப்பாகப் பெண்கள், ஒவ்வொருவரும் வேலைக்குச் செல்லவேண்டும் என்ற கருத்து கடந்த 40-50 வருடங்களில் தீவிரம் அடைந்துள்ளது. ஒருசில விதங்களில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு பொருளாதாரத் தேவைகளுக்கு ஆண்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய சூழல் வந்ததால், இந்த மனோபாவம் ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிர்வினையாக, வேலைக்குச் செல்வதே ஒரே வழி என்று பெண்கள் நினைத்தார்கள். ஆனால், சில குடும்பங்களில் மட்டுமே இத்தகைய அடிமைத்தனம் நடக்கிறது என்று நினைக்கிறேன். பல குடும்பங்களில் இது உண்மை இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் பணம் சம்பாதித்தால் மட்டுமே நீங்கள் ஒரு உண்மையான பெண் என்ற எண்ணம் ஆணின் மனதில் இருந்து கடன் பெறப்பட்டுள்ளது. பெண்களின் விடுதலை என்ற பெயரில், பெண்கள் ஆண்களின் மதிப்புகளைப் பெறுவது அடிமைத்தனம். அவள் சுதந்திரமாக மாற விரும்பினால், ஒரு பெண் ஆணின் மதிப்புகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. பிரபஞ்சத்தில் பூ போன்ற மணம் வீசும் பெண்ணாக எவ்வாறு மேம்படுவது என்பதை அவள் பார்க்க வேண்டும். இது அவளால் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று.

நல்வாழ்வு என்பதையும் தாண்டி வாழ்க்கையை அணுகுதல்

ஒரு குடும்பத்தில் பணத்திற்கான தேவை ஏற்பட்டால், பெண்கள் வெளியில் வேலைக்குச் செல்வதோ அல்லது வீட்டிலிருந்தபடியே சுயதொழிலில் ஈடுபட்டு சம்பாதிப்பதோ மிகவும் நல்லது.

எனது தனிப்பட்ட அனுபவத்தைப் பொறுத்தவரை, என் தாய் ஒருபோதும் வெளியில் வேலைக்குச் செல்லவில்லை, அவர் வேலை செய்ய வேண்டும் என்று என் தந்தை ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார். ஆனால், அவர் பயனற்ற நபரா? முற்றிலும் இல்லை. அவர் இல்லாமல், நாம் என்னவாக இருப்போம்? அவருடைய அர்ப்பணிப்பு, அவர் தன் பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் தன்னைத்தானே கொடுத்த விதம்தான் நாம் யார் என்பதை நமக்கு உணர்த்தியது.

உங்கள் சொந்த நல்வாழ்வுக்கு அப்பாற்பட்ட அக்கறை, கவனிப்பு மற்றும் வாழ்க்கையைப் பார்ப்பது போன்ற ஒரு ஆழமான உணர்வு அவரைப் பார்ப்பதன் மூலம் நம்மில் ஊற்றப்பட்ட ஒன்று. அவருடைய வாழ்க்கை தன்னைப் பற்றி ஒருபோதும் இல்லாததால், நீங்கள் அதை தவற விட வாய்ப்பில்லை. மிகுந்த மகிழ்ச்சியுடன் பகல், இரவு பார்க்காமல் அவர் தன் குடும்பத்திற்கு சேவை செய்தார். இது அடிமைத்தனம் அல்ல, இது முழுமையான அன்பினால் செய்யப்பட்டது. "நீ அடிமைப்படுத்தப்படுகிறாய்" என்று அவரிடம் நீங்கள் சொன்னால், அவள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார். ஏனென்றால், அவரைப் பொறுத்தவரை, அவர் என்ன செய்கிறாரோ அது அன்பின் வெளிப்பாடாக மட்டுமே இருந்தது.

உலகம் அழகாக காட்சியளிப்பதற்கு காரணம் நீங்கள் பணம் சம்பாதிப்பதனால் அல்ல. ஒரு தனிமனிதரின் வாழ்க்கையோ, ஒரு குடும்பமோ, சமூகமோ அல்லது உலகமோ அழகு பெறுவதற்கு, ஒரு சிலர் உண்மையிலேயே தங்கள் தனிப்பட்ட நலனுக்கு அப்பாற்பட்ட ஒன்றைச் செய்ய விரும்புகிறார்கள். அதுவே உலகை அழகாக ஆக்குகிறது.

ஒரு குடும்பம் என்பது உலக சமூகத்தின் மிகச்சிறிய பகுதி. இது ஒரு குடும்பத்தில் நடக்கவில்லை என்றால், அது உலகில் எங்கும் நடக்காது. குழந்தை பருவத்திலிருந்தே இந்த ஒரு அன்பையும் அர்ப்பணிப்பையும் ஒரு குழந்தை உணராவிட்டால், பின்னாளில் அது உணர்ந்திட வாய்ப்பே இல்லை.

மாற்றத்தை ஏற்படுத்துதல்

ஒரு பெண் வேலைக்குச் சென்றால் இதைச் செய்ய முடியாது என்று அர்த்தமல்ல. வேலை செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அவள் அதை செய்ய வேண்டும். மீண்டும், என் அம்மாவை ஒரு எடுத்துக்காட்டாக சொல்கிறேன். அவர் வேலைக்குச் செல்லவில்லை, ஆனால் வீட்டிலேயே என்ன செய்ய முடியுமோ அதை உறுதியாக செய்தார். அதனால் அதை வெளியில் பெற அவசியம் எங்களுக்கு ஏற்படவில்லை.

என் குழந்தை பருவத்தில், நான் என் குடும்ப சூழ்நிலையிலிருந்து வெளியேறும் வரை, ஒரு நாள்கூட பூ வேலைப்பாடு இல்லாத தலையணையில் படுத்து உறங்கியதே இல்லை. எப்போதும் அதில் சின்னஞ்சிறு கிளி அல்லது சிறிய பூ குறைந்தபட்சம் ஏதோ ஒரு வேலைப்பாடு இருப்பதில் எப்போதும் என் தாய் கவனமாக இருந்தார். அது இல்லாமல் போயிருந்தால், என் வாழ்க்கை இதைப்போல் இருந்திருக்காது. அவர் கடையிலிருந்து அதை வாங்கியிருக்கலாம். என் தந்தையால் அதை வாங்கிக் கொடுத்திருக்க முடியும். ஆனால், அந்த சிறிய செயலையும் தானே செய்து முடிப்பார். அதுவே அவரின் வழி. நீங்கள் பணம் சம்பாதித்தாலும் அல்லது பணத்தை மிச்சப்படுத்தினாலும், அது குடும்பத்திற்கு ஒரு பங்களிப்புதான்.

எனவே, ஒரு குறிப்பிட்ட பெண் எவ்வாறு செயல்படுகிறார் என்பது ஒரு தனிப்பட்ட அம்சமாகும். ஆனால், எல்லா பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது எல்லா பெண்களும் வேலைக்கு செல்லக்கூடாது என்ற தத்துவத்தை யாரும் வளர்க்கத் தேவையில்லை.