ராமனின் வாழ்க்கை - சுதந்திரத்திற்கான பாடம்
ராமநவமி அன்று சத்குரு, ராமன் ஒருமுறை கூட நேர்மை தவறியதில்லை, அவருக்கென அமைத்துக்கொண்ட வாழ்க்கை அடிப்படைகளிலிருந்து பிறழவில்லை. ஒருவர் வெளிப்புற சூழ்நிலைகளை பொருட்படுத்தாமல் தன் வாழ்க்கையை சமநிலையாக நடத்திச் செல்வதற்கு ராமன் ஒரு எடுத்துக்காட்டு என்கிறார்.
ரக்குல் ப்ரீத் சிங் : உங்களிடம் பேசுபவர்கள், உங்கள் பேச்சை தினமும் கேட்பவர்கள், உங்களைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் வாழ்க்கை எளிமையானதாகவும், அழகானதாகவும், அன்பு நிறைந்ததாகவும் இருப்பதாக உணர்வார்கள். நம்மை சுற்றி உள்ள அனைத்தும் அன்பை வெளிப்படுத்துவதாகவே உள்ளன. இருந்தும், மக்களுக்கு வாழ்க்கை இவ்வளவு எளிமையானது என்று புரிந்துகொள்வது கடினமாகத்தான் உள்ளது. இந்த சிறிய வாழ்க்கையை மக்கள், திருமணம், உறவுகள், காதல், வேலை போன்ற விஷயங்களில் பல பிரச்சனைகளை உருவாக்கி கொள்கிறார்கள். வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமோ அப்படி அவர்கள் வாழ்வதில்லை. சத்குரு, வாழ்க்கை அழகானது என்று மக்கள் உணர ஆரம்பிக்க அனைவரும் செய்ய வேண்டிய முதல் படி என்று எதை கூறுவீர்கள்?
சத்குரு : வாழ்க்கை அழகாகவும் இல்லை, அழகற்றதாகவும் இல்லை, அது அன்பாகவும் இல்லை அன்பில்லாமலும் இல்லை. "நீங்கள் உங்களுக்குள் அன்புள்ளவர்களாகவும் அன்பற்றவராகவும் இருக்கலாம்." எங்கும் அன்பு மழை பொழிகிறது என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அது உங்களை கனவு உலகத்திற்கு எடுத்து சென்றுவிடும்.ரக்குல் ப்ரீத் சிங் : இல்லை, நான் அப்படி சொல்லவில்லை. இங்கு இருப்பவர்கள் அனைவரும் அன்பானவர்களாக உள்ளார்கள்; எனக்கு இவர்கள் யாருடனும் பிரச்சனையில்லை. ஆனால் அனைவரும் அப்படி பார்ப்பதில்லை தானே!
சத்குரு : இப்படி ஒரு முறை நடந்தது, ஒரு தாய் தன் ஏழு வயது மகனுடன் ஒரு கல்லறைக்கு சென்றார். அவர் மகன் அப்போதுதான் கொஞ்சம் எழுத்து கூட்டி படிக்க, எழுத ஆரம்பித்துள்ளவன். அவனுடைய தாய் அங்கே அமர்ந்து இருக்கும்பொழுது இந்த சிறுவன் அங்குள்ள அனைத்து சமாதிக்கும் சென்று அந்த கல்வெட்டில் எழுதி வைத்திருந்த வாக்கியங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக படித்தான். ஒரு அரை மணி நேரம் கழித்து அவன் அம்மாவிடம் வந்து, "அம்மா பயங்கரமான மனிதர்களை எல்லாம் எங்கே புதைத்து உள்ளனர்" என்று கேட்டான்.
Subscribe
எல்லோரும் அழகானவர்கள் என்பது உண்மை இல்லை - சிலர் அசிங்கமானவர்களாகவும் இருக்கலாம். நீங்கள் அழகானவராக இருந்தால், அவர்களின் அசிங்கமானத் தன்மையை ஒரு அளவுக்கு நீங்கள் மாற்றலாம். அனைவரும் உங்கள் வழியில் வருவார்களா? இல்லை, அவர்கள் உங்களின் வழிக்கு வரவில்லை என்றால் உடனே நீங்கள் அசிங்கமானவராக ஆகிவிடுவீர்களா? இல்லை. இது முக்கியமான விஷயம்.
நீங்கள் நினைக்காத வண்ணம் செயல்கள் நடைபெறும் போதும் கூட நீங்கள் உங்கள் தன்மையில் இருந்து மாறாமல் இருக்கும் தகுதி உங்களிடம் உள்ளதா? இதை உங்களுக்குள் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் மற்றவைகள் எல்லாம் சரியாகிவிடும். எதுவும் உங்கள் வழியில் வராமல் போனாலும், அப்பொழுதும் நீங்கள் அழகான மனிதராக இருப்பீர்களாக? இந்த பண்பைதான் நம் கலாச்சாரம் எப்போதும் வழிபாடு செய்து வந்துள்ளது.
இந்திய மக்கள்தொகையின் பெரும்பான்மைப் பகுதி ராமனை போற்றி வணங்குகிறது. ஆனால் அவர் வாழ்க்கை சூழ்நிலைகளை நீங்கள் பார்த்தால், வாழ்க்கை அவருக்கு நிகழ்ந்த விதத்தைப் பார்த்தால், தொடர்ந்து அவருக்கு பேரிழப்புகள் நிகழ்ந்துகொண்டே இருந்தது. ஆனால் ஒருமுறைகூட அவருக்கென அமைத்துக்கொண்ட வாழ்க்கை அடிப்படைகளிலிருந்து பிறழவில்லை. அவர் செய்யவேண்டியது மட்டுமே நோக்கமாக இருந்து, தன் வாழ்க்கையை சமநிலையாக நடத்திச் சென்றார். பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மக்கள் "ராமா ராஜ்ஜியம்" என்று அழைக்கக் காரணம், அவர் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நாட்டின் நிர்வாகத்தையும், தன்னுடைய செயல்களையும் சமநிலையுடனும் திறனுடனும் செய்து வந்தார். அவர் வாழ்க்கையில் நடந்த பேரிழப்புகளில் ஒன்றாவது யார் ஒருவருடைய வாழ்க்கையில் நடந்தாலும், பெரும்பாலானவர்கள் உடைந்துவிடுவார்கள்.
அவரை சுற்றி நடக்கும் நாடகங்களிலிருந்து, ஒரு முழு சுதந்திரத்துடன் வாழ்ந்தார், அதுதான் முக்தி. உயிருடன் இருக்கும்போது சுதந்திரத்துடன் இருந்தார், அதுதான் ஜீவமுக்தி. இந்த தன்மையினால் ராமரை நாம் வணங்குகிறோம். அவர் அரசர், கடவுளின் அவதாரம் என்பதால் அல்ல.