சத்குரு: நிறைவு என்பது ஏதோ ஒரு செயலின் மூலம் அடையக்கூடியதல்ல. நீங்கள் கவனித்துப் பார்த்தால், உங்கள் வாழ்க்கையின் பல கட்டங்களில், “இது மட்டும் நிகழ்ந்துவிட்டால் என் வாழ்க்கை முழுமையடைந்துவிடும்”, என்று நீங்கள் எண்ணியிருப்பீர்கள். நீங்கள் ஒரு குழந்தையாக இருந்தபோது, “இந்த பொம்மை எனக்குக் கிடைத்துவிட்டால், எனக்கு அது போதும்”, என்று நினைத்தீர்கள். உங்களுக்கு அது கிடைத்த பிறகு, சில வாரங்களில் அதன்மேல் உங்களுக்கு இருந்த கவனம் போய்விடும், வாழ்க்கையும் நிறைவடைந்து இருக்காது. நீங்கள் பள்ளிக்கூடத்தில் இருந்தபோது, தேர்வில் வெற்றியடைந்தால் வாழ்க்கை முழுமை பெற்றுவிடும் என்று நினைத்தீர்கள். அது நிகழ்ந்தது, ஆனால் வாழ்க்கை நிறைவடையவில்லை. அதன்பிறகு, உங்களது கல்வியை முடித்துவிட்டால் உங்கள் வாழ்க்கை முழுமையாகிவிடும் என்று நினைத்தீர்கள். அதுவும் நிகழ்ந்தது. பிறகு, உங்கள் சொந்தக் காலில் நிற்க முடியவில்லை என்றால், இந்தக் கல்வியினால் எல்லாம் என்ன பயன்? என்று நினைத்தீர்கள். அது நிகழ்ந்தது. மூன்று மாதங்கள் கழிந்தபிறகு, கழுதையைப்போல் வேலை பார்ப்பதால் என்ன பயன்? என்று நினைக்கத் துவங்கினீர்கள். பின் உங்கள் இதயத்திற்கு நெருக்கமான அந்த ஆணையோ அல்லது பெண்ணையோ மணம் புரிந்துகொண்டால் வாழ்க்கை முழுமை அடைந்துவிடும் என்று நினைத்தீர்கள். அதுவும் நிகழ்ந்தது, அதற்குப் பிறகு என்ன ஆனது என்பது உங்களுக்கே தெரியும்! 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உங்கள் உள் இயல்பு எல்லையற்றதாக இருந்தால், உங்கள் வாழ்க்கையும் எல்லையற்றதாக இருக்கும். இப்படி‌ எல்லையற்றவராக நீங்கள் இருந்தால், நீங்கள் கண்களை மூடியபடி அமர்ந்திருக்கலாம் அல்லது வெவ்வேறு செயல்களில் ஈடுபடலாம். எப்படி இருந்தாலும் உங்கள் வாழ்க்கை நிறைவானதாகவே இருக்கும்.‌

நீங்கள் எந்த செயலைச் செய்திருந்தாலும், வாழ்க்கை எந்த நிறைவையும் அடையவில்லை. நீங்கள் செய்யும் சில செயல்களால் அது நிறைவடையாது. உங்கள் உள் இயல்பு முழுமையடைந்தால் மட்டுமே, உங்கள் வாழ்க்கை நிறைவு பெறும். உங்கள் உள் இயல்பு எல்லையற்றதாக இருந்தால், உங்கள் வாழ்க்கையும் எல்லையற்றதாக இருக்கும். இப்படி‌ எல்லையற்றவராக நீங்கள் இருந்தால், நீங்கள் கண்களை மூடியபடி அமர்ந்திருக்கலாம் அல்லது வெவ்வேறு செயல்களில் ஈடுபடலாம். எப்படி இருந்தாலும் உங்கள் வாழ்க்கை நிறைவானதாகவே இருக்கும்.‌ ஒரு மனிதன் தன் வாழ்வில் எந்த செயலையும் செய்ய வேண்டிய அவசியமில்லை எனும் நிலையை தனக்குள் அடைந்தபிறகு, வெளி சூழ்நிலைக்கு என்ன தேவையோ, அந்த அளவுக்கு மட்டும் அவனது செயல்கள் இருக்குமேயானால், அந்த மனிதன் முழுமையடைந்தவனாகிறான்.  

தயவுசெய்து பாருங்கள், நீங்கள் ஏன் அடுத்தடுத்து செயல் செய்துகொண்டே இருக்கிறீர்கள்? வாழ்க்கை நிறைவை நோக்கி. சிலர் அதிகப்படியான செயலைச் செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என்று நீங்கள் அவர்களிடம் கேட்டால், அவர்கள், “என்ன செய்வது? உணவு, மனைவி, குழந்தைகள் - அவர்களை யார் கவனித்துக்கொள்வார்கள்? ”உண்மை என்னவென்றால், நீங்கள் அவருடைய எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தாலும், இந்த நபரால் ஒருநாள் கூட அமைதியாக உட்கார முடியாது. அவரால் மூன்று மணி நேரம் கூட உட்கார முடியாது! அவர் ஏதாவது செய்ய வேண்டும். ஏனென்றால், உங்கள் உள் இயல்பு நிறைவடையவில்லை, மேலும் இதை புற செயல்களின் மூலம் முழுமையாக்க முயற்சிக்கிறீர்கள். உங்கள் செயல்கள் உங்கள் உணவு அல்லது வசதிகளுக்காக செய்யப்படவில்லை; அவை அனைத்தும் நிறைவைத் தேடி செய்யப்பட்ட செயல்கள். இது விழிப்புணர்வுடனோ அல்லது விழிப்புணர்வு இல்லாமலோ நடந்திருந்தாலும், செயல்கள் வரம்பற்ற தேடலையே குறிக்கின்றன.

உங்களுக்குள், உங்களது உள்நிலை இயல்பானது நிறைவடைந்திருந்தால், செயலுக்கான தேவை இருக்காது. வெளிச்சூழ்நிலைக்கு ஏதேனும் செயல் தேவைப்பட்டால், நீங்கள் அதை ஆனந்தமாக செய்துகொள்ள முடியும். அது தேவைப்படவில்லை என்றால், கண்களை மூடி வெறுமனே உட்கார்ந்துகொள்ள முடியும்.

உங்களுக்குள், உங்களது உள்நிலை இயல்பானது நிறைவடைந்திருந்தால், செயலுக்கான தேவை இருக்காது. வெளிச்சூழ்நிலைக்கு ஏதேனும் செயல் தேவைப்பட்டால், நீங்கள் அதை ஆனந்தமாக செய்துகொள்ள முடியும். அது தேவைப்படவில்லை என்றால், கண்களை மூடி வெறுமனே உட்கார்ந்துகொள்ள முடியும். எந்த செயலும் செய்யத் தேவைப்படாத ஒரு நிலையை ஒரு நபர் அடைந்துவிடும்போது, அந்த நபர் எல்லையின்மையை அடைந்துவிட்டார் என்று நாம் கூறமுடியும். இந்த நபர் எந்த ஒரு வேலையும் செய்யத் தேவையில்லை என்பது அதற்கு அர்த்தமல்ல. வெளிச்சூழ்நிலைக்குத் தேவைப்பட்டால், அவர் இருபத்தி நான்கு மணி நேரமும் வேலை செய்யமுடியும். ஆனால் அவரது உள் நிலையின் தன்மைக்கு செயல் தேவைப்படுவதில்லை. செயலுக்குக் கட்டுப்பட்டு அவர் இருக்கவில்லை. செயல் இல்லாத நிலையிலும்கூட அவர் அதேபோல் இருக்கிறார்.