பொருளடக்கம்
1. சுவாமி விவேகானந்தர் மற்றும் காளி
2. கடவுளின் ஆதாரம்
3. விவேகானந்தர் சாரதாவின் ஆசியைப் பெறுகிறார்
4. சுவாமி விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ணரின் செய்தி
5. பிரார்த்தனைப் பற்றி சுவாமி விவேகானந்தர்
6. பெண்கள் பற்றி சுவாமி விவேகானந்தர்
7. தொலைநோக்குப் பார்வை குறித்து சுவாமி விவேகானந்தர்

1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி கொல்கத்தாவில் விஸ்வநாத் தத்தா மற்றும் புவனேஸ்வரி தேவிக்கு மகனாக நரேந்திர நாத் தத்தாவாகப் பிறந்தார் சுவாமி விவேகானந்தர். ஜூலை 4, 1902 ல் அவர் பேலூர் மடத்தில் சென்றபோது, ​​அவர் ஒரு புரட்சியைத் தொடங்கினார், அது இன்னும் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இன்று, அவரது குருவின் செய்திக்கான வாகனமாக, அவர் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக இருந்து வருகிறார்.

இந்தக் கட்டுரையில், சத்குரு, சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையிலிருந்து சில சம்பவங்களைப் பகிர்ந்துகொள்கிறார், அது அவருடைய குருவுடனான அவரது உறவையும் அவர் எடுத்துச் சென்ற செய்தியையும் விளக்குகிறது.

1. சுவாமி விவேகானந்தர் மற்றும் காளி (Swami Vivekananda and Kali)

காளி, Goddess Kali

சத்குரு: அவர் ஞானோதயம் அடைந்த பிறகு, ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சுற்றி பல சீடர்கள் கூடினர். ராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவர் சுவாமி விவேகானந்தர். 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக மதங்களின் பாராளுமன்றத்திற்காக அமெரிக்கா சென்ற முதல் யோகி விவேகானந்தர், அதன் பிறகு ஆன்மீக அலையை ஏற்படுத்தினார். புதிதாக உள்ள எதையும் மக்கள் எதிர்க்கும்போது, அவர் வந்து ஓரளவு வாயில்களைத் திறந்தார்.

விவேகானந்தர் ராமகிருஷ்ணரிடம் வந்து கேட்டார், “நீங்கள் எப்போதும் கடவுள், கடவுள் என்று பேசுகிறீர்கள். ஆதாரம் எங்கே? ஆதாரத்தைக் காட்டுங்கள்!”

ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உலகிற்கு தன் செய்தியை எடுத்துச் செல்வதற்கான ஒரு வழியாகக் கருதியதால், அவர் மீது மிகவும் வித்தியாசமான பற்று இருந்தது. ராமகிருஷ்ணர் தன்னால் அதைச் செய்ய முடியாததால் விவேகானந்தரை ஒரு வாகனமாகப் பார்த்தார்.

ராமகிருஷ்ணருக்கு, விவேகானந்தர் மீது ஏன் இவ்வளவு பைத்தியம் என்று அவரைச் சுற்றியுள்ள மக்களுக்கு புரியவில்லை. விவேகானந்தர் ஒருநாள் அவரைப் பார்க்க வரவில்லை என்றாலும், ராமகிருஷ்ணர் அவரைத் தேடிச் செல்வார், ஏனென்றால் இந்த பையனுக்கு, அனைவரிடத்திலும் எளிதில் பகிர்ந்துகொள்ள தேவையான உணர்வு இருக்கிறது என்று அவருக்குத் தெரியும். ராமகிருஷ்ண பரமஹம்சர் மீதும் விவேகானந்தருக்கு அதே சமமான பைத்தியம் இருந்தது. அவர் எந்த வேலையையும் தேடவில்லை, அவர் தனது வயதுடையவர்கள் பொதுவாக செய்ய வேண்டிய எதையும் செய்யவில்லை. அவர் எப்போதும் ராமகிருஷ்ணரைப் பின்பற்றியே இருந்தார்.

விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு அற்புதமான சம்பவம் உண்டு. ஒருநாள், அவரது தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் இருந்தார். அப்போது திடீரென்று விவேகானந்தருக்கு தன் கைகளில் பணம் இல்லாததும், தாயாருக்குத் தேவையான மருந்தையோ உணவையோ வழங்க முடியவில்லை என்பதும் மனதில் தோன்றியது. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவரை கவனித்துக்கொள்ள முடியவில்லை என்பது அவருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. விவேகானந்தரைப் போன்ற ஒரு மனிதன் கோபப்பட்டால், அவன் உண்மையில் கோபத்தின் உச்சத்தில் உள்ளான் என்பதாகும். ராமகிருஷ்ணரிடம் போனான் – கோபம் வந்தாலும் போக வேறு எங்கும் இல்லை, அங்கேதான் போனான்.

அவர் ராமகிருஷ்ணரிடம் “இதெல்லாம் முட்டாள்தனம், இந்த ஆன்மீகம், இது என்னை எங்கே கொண்டு செல்கிறது? நான் வேலையில் இருந்திருந்தால், நான் செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்திருந்தால், இன்று என் அம்மாவை நான் கவனித்துக் கொண்டிருக்கலாம். நான் அவளுக்கு உணவு கொடுத்திருக்கலாம், மருந்து கொடுத்திருக்கலாம், அவளுக்கு ஆறுதல் கொடுத்திருக்கலாம். இந்த ஆன்மீகம் என்னை எங்கே கொண்டு சென்றது?"

ராமகிருஷ்ணர் காளியை வழிபடுபவர் என்பதால், அவரது வீட்டில் காளி சந்நிதி இருந்தது. அவர் “உன் அம்மாவுக்கு மருந்தும் உணவும் தேவையா? ஏன் அம்மாவிடம் போய் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கக்கூடாது?" விவேகானந்தருக்கு இது ஒரு நல்ல யோசனையாகத் தோன்றியது, அவர் சந்நிதிக்குள் சென்றார்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தார். ராமகிருஷ்ணர், "அம்மாவிடம் சாப்பாடு, பணம் மற்றும் உங்கள் அம்மாவுக்குத் தேவையானதைக் கேட்டாயா?" என்றார்.

அதற்கு விவேகானந்தர், "இல்லை, மறந்துவிட்டேன்" என்றார்.

“மீண்டும் உள்ளே சென்று கேள்” என்றார் ராமகிருஷ்ணர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விவேகானந்தர் மீண்டும் சந்நிதிக்குள் சென்று நான்கு மணி நேரம் கழித்து திரும்பி வந்தார். ராமகிருஷ்ணர் அவரிடம், "அம்மாவிடம் கேட்டாயா?"

அதற்கு விவேகானந்தர், "இல்லை, மறந்துவிட்டேன்" என்றார்.

ராமகிருஷ்ணர் மீண்டும் கூறினார். "மறுபடியும் உள்ளே போ இந்த முறை, மறக்காமல் கேள்."

விவேகானந்தர் உள்ளே சென்று எட்டு மணி நேரம் கழித்து வெளியே வந்தார். ராமகிருஷ்ணர் மீண்டும் அவரிடம், "அம்மாவிடம் கேட்டாயா?"

விவேகானந்தர், “இல்லை, நான் கேட்கமாட்டேன். நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை."

அதற்கு ராமகிருஷ்ணர், “நல்லது. நீ இன்று சந்நிதியில் ஏதாவது கேட்டிருந்தால், இதுவே உனக்கும் எனக்கும் இடையிலான கடைசி நாளாக இருந்திருக்கும். நான் உன் முகத்தை மீண்டும் பார்த்திருக்க மாட்டேன், ஏனென்றால் கேட்கும் முட்டாளுக்கு வாழ்க்கை என்னவென்று தெரியாது. கேட்கும் முட்டாளுக்கு வாழ்க்கையின் அடிப்படைகள் புரிவதில்லை."

பிரார்த்தனை என்பது ஒரு குறிப்பிட்ட குணம். நீங்கள் பக்தி செய்தால், நீங்கள் வணங்கும் நிலைக்கு உயர்ந்தால், அது ஒரு அற்புதமான வழி. ஆனால் உங்களுக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நீங்கள் பிரார்த்தனை செய்தால், அது உங்களுக்கு வேலை செய்யப் போவதில்லை.

2. கடவுளின் ஆதாரம் (The Proof of God)

அவருக்கு 19 வயதாக இருந்தபோது, விவேகானந்தர் மிகவும் தர்க்கரீதியான, அறிவார்ந்த சிறுவனாக, அனைத்திலும் தீயாய் இருந்தார். எல்லாவற்றிற்கும் சரியான பதில்களை அவர் விரும்பினார். அவர் ராமகிருஷ்ணரிடம் வந்து கேட்டார், “நீங்கள் எப்போதும் கடவுள், கடவுள் என்று பேசுகிறீர்கள். ஆதாரம் எங்கே? ஆதாரத்தைக் காட்டுங்கள்!” ராமகிருஷ்ணர் மிகவும் எளிமையானவர். அவர் படித்தவர் அல்ல. அவர் ஒரு ஆன்மீகவாதி, அறிஞர் அல்ல. அதனால், "நான்தான் ஆதாரம்" என்றார்.

"கடவுள் இருக்கிறார் என்பதற்கு நானே ஆதாரம்" என்றார் ராமகிருஷ்ணர்.

விவேகானந்தருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஏனென்றால் இது முற்றிலும் அபத்தம். அவர் ஒரு சிறந்த அறிவார்ந்த விளக்கத்தை எதிர்பார்த்தார் - "கடவுளின் ஆதாரம் விதை முளைப்பது மற்றும் கிரகம் சுழல்வது." ஆனால் ராமகிருஷ்ணர், “கடவுள் இருக்கிறார் என்பதற்கு நானே ஆதாரம்” என்றார். “நான் இருக்கும் விதம்தான் ஆதாரம்” என்று ராமகிருஷ்ணர் சொல்லிக்கொண்டிருந்தார். விவேகானந்தருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் திரும்பி வந்து, "சரி, நீங்கள் எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா?" என்றார். “பார்க்கும் தைரியம் உனக்கு இருக்கிறதா?” என்று ராமகிருஷ்ணர் கேட்டார். துணிச்சலான சிறுவன், "ஆம்" என்று சொன்னான், ஏனெனில் இது அவனை வேதனைப்படுத்தியது. எனவே ராமகிருஷ்ணர் விவேகானந்தரின் மார்பில் தனது கால்களை வைத்தார், விவேகானந்தர் ஒரு குறிப்பிட்ட சமாதிநிலைக்கு சென்றார், அங்கு அவர் மனதின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டு இருந்தார். ஏறக்குறைய 12 மணிநேரம் அவர் அதிலிருந்து வெளியே வரவில்லை. அதற்குப் பிறகு அவர் வாழ்க்கையில் வேறொரு கேள்வியைக் கேட்டதில்லை.

3. விவேகானந்தர் சாரதாவின் ஆசியைப் பெறுகிறார் (Vivekananda Gets Sharada’s Blessings)

காளி, Sarada Devi

நீங்கள் ஒரு பக்தராக இல்லாதவரை, வாழ்க்கை உங்களுக்காக திறக்கக்கூடாது, ஏனென்றால் அது உங்களுக்காக திறந்தால், உங்களுக்கும் மற்ற அனைவருக்கும் சேதம் மட்டுமே ஏற்படும். இந்தியாவில், பக்தி இல்லாத ஒருவரிடம் ஞானம் ஒருபோதும் ஒப்படைக்கப்படவில்லை.

விவேகானந்தரின் வாழ்க்கையில் ஒரு அழகான சம்பவம் உண்டு. ராமகிருஷ்ண பரமஹம்சர் மறைந்த பிறகு, விவேகானந்தர் இளைஞர்களைக் கூட்டி, இந்தியா முழுவதும் பயணம் செய்து, தேசத்தைக் கட்டமைக்கவும், நாட்டின் முகத்தை மாற்றவும் முயன்றார். அப்போது அவரிடம் ஒருவர், அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் மதங்களின் பாராளுமன்றம் நடப்பதாக கூறினார். இங்கு யாரும் அவரைக் கேட்காததால் அங்கு செல்லுமாறு பரிந்துரைத்தனர். யாருமே இல்லை! ஒரு இளைஞன் இடம் விட்டு இடம் ஓடி, வேதத்தில் எழுதப்படாத பெரிய விஷயங்களைப் பற்றி பேச முயல்கிறான் - யார் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்? அவர்கள், “நீ போய் அவர்களை அங்கே அசை. நீங்கள் அவர்களை அங்கே அசைத்தால், இங்குள்ள அனைவரும் உங்களைக் கவனிப்பார்கள்.

அவர் மேற்கத்திய நாடுகளுக்கு செல்லவிருந்தபோது - ராமகிருஷ்ணரின் செய்தியை எடுத்துச் செல்ல முதன்முறையாக அமெரிக்காவிற்கு செல்கிறார் - அப்போது அவர் ராமகிருஷ்ணரின் மனைவி சாரதாவிடம் ஆசி பெறச் சென்றார்.

அவர் வரும்போது அம்மையார் சமையல் செய்துகொண்டிருந்தார்கள். சாரதா ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். இந்தியப் பெண்கள், குறிப்பாக அவர்கள் சமைக்கும்போது, பாடுவது மிகவும் பொதுவானது. பலர் இப்போது ‘ஐ-பேட்’ ல் (iPad) விளையாடுவதால் அது இனி இல்லை, ஆனால் இதற்கு முன்பு, நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய காரியங்களில் ஒன்று, மிகுந்த அன்புடன் நன்றாக சமைத்து மக்களுக்கு பரிமாறுவதுதான். ஒருவர் நன்றாக சாப்பிடுவதைப் பக்கத்தில் இருந்து பார்ப்பது அவர்களுக்கு மிகப் பெரிய திருப்தியாக இருந்தது. சமையல் மிகவும் மகிழ்ச்சியான, விரிவான செயல்முறையாக இருந்தது. 20-30 நிமிட உணவுக்காக, அவர்கள் குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு மணிநேரம் செலவழிப்பார்கள், அவர்கள் எப்போதும் பாடிக்கொண்டே இருப்பார்கள். குறைந்தபட்சம் என் அம்மா எல்லா நேரத்திலும் பாடிக்கொண்டிருந்தார்.

அவர் வந்து, “எனது குருவின் செய்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல நான் அமெரிக்கா செல்ல விரும்புகிறேன்” என்று சொன்னபோது அவள் பதிலளிக்கவில்லை. உடனே அவள், “நரேன், அந்தக் கத்தியை என்னிடம் கொடு” என்றாள். விவேகானந்தர் அவரிடம் கத்தியை கொடுக்கும்போது, ஒரு குறிப்பிட்ட வழியில் கொடுத்தார். அப்போது சாரதா, “நீ போகலாம், உனக்கு என்னுடைய எல்லா ஆசீர்வாதங்களும் உண்டு” என்றாள். அப்போது அவர், “ஏன் இவ்வளவு நேரம் காத்திருந்தீர்கள், முதலில் கத்தியை ஏன் கேட்டீர்கள்? நீங்கள் தான் காய்கறிகளை வெட்டி முடித்துவிட்டீர்களே" என்று கேட்டார். அவள் சொன்னாள், “சுவாமி போன பிறகு நீ என்னவாக இருக்கிறாய் என்று பார்க்க விரும்பினேன். இப்போது, நீ எனக்கு கத்தியைக் கொடுத்த விதம், நீ செல்லத் தகுதியானவன், சுவாமியின் செய்தியை எடுத்துச் செல்ல நீ தகுதியானவன் என்பதைக் காட்டுகிறது.

4. சுவாமி விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ணரின் செய்தி (Swami Vivekananda and Ramakrishna’s Message)

சுவாமி விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர், Swami Vivekananda and Ramakrishna Paramahamsa

பெரும்பாலான குருமார்கள் தாங்களாகவே பிரபலமடைய முடியாது என்பதை நீங்கள் எப்போதும் காணலாம். செய்தியை எடுத்துச் செல்ல அவர்களுக்கு ஒரு நல்ல சீடர் தேவை, ஏனெனில் குருவே உலகின் பல வழிகளிலும் மிகவும் வல்லவராக இருக்க முடியாது. இன்று அனைவரும் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றி பேசுகிறார்கள். ராமகிருஷ்ணர் மிகவும் கூர்மையான உணர்வுடன் இருந்தார். ஒரு அதிசய மனிதர். ஆனால் அதே நேரத்தில், உலக அளவில், அவர் முற்றிலும் படிக்காதவர். விவேகானந்தர் வராமல் இருந்திருந்தால், அவர் தொலைந்துபோன, மறந்த மலராக இருந்திருப்பார். எத்தனையோ பூக்கள் பூக்கின்றன, ஆனால் அவற்றில் எத்தனை அங்கீகரிக்கப்படுகின்றன?

5. பிரார்த்தனைப் பற்றி சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda on Prayer)

கால்பந்து விளையாட்டு, Football Game

சுவாமி விவேகானந்தர் ஒருமுறை கூறினார், "எந்தவொரு பிரார்த்தனையையும் விட கால்பந்தை உதைப்பது உங்களை தெய்வீகத்திற்கு நெருக்கமாக அழைத்துச் செல்லும்". இது உண்மைதான், ஏனென்றால் நீங்கள் முழுமையாக ஈடுபடாதவரை நீங்கள் கால்பந்து விளையாட முடியாது. இதில் தனிப்பட்ட நோக்கம் எதுவும் இல்லை, ஈடுபாடு மட்டுமே. உங்களால் என்ன செய்ய முடியும் மற்றும் செய்ய முடியாது என்பது ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், நீங்கள் பல ஆண்டுகளாக பயிற்சி பெற்றுள்ளீர்கள். இப்போது இது ஈடுபாடு பற்றிய ஒரு கேள்வி மட்டுமே, எந்த நோக்கமும் இல்லை.

சுவாமி விவேகானந்தர் ஒருமுறை கூறினார், "எந்தவொரு பிரார்த்தனையையும் விட கால்பந்தை உதைப்பது உங்களை தெய்வீகத்திற்கு நெருக்கமாக அழைத்துச் செல்லும்."

பிரார்த்தனையில், சிறிது நேரம் கழித்து, நீங்கள் பல காரியங்களைச் செய்யும்போதே நீங்கள் பிரார்த்தனை செய்யலாம் - நீங்கள் விரும்பியதைச் செய்யலாம். இந்தியாவில், அவர்கள் பிரார்த்தனைகளை மிகவும் சிக்கலானதாக ஆக்கினர் - வெறும் வாய்மொழியாக அல்ல, நீங்கள் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும், ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த "பிரார்த்தனையைச் சொல்லும்" வணிகத்தை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். மக்கள் என்ன செய்வார்கள் என்பது அவர்களுக்கு தெரியும், அதனால் அவர்கள் பிரார்த்தனையை மிகவும் சிக்கலானதாக ஆக்கினர், நீங்கள் நினைவில் வைத்து சரியாக செயல்பட வேண்டும், இல்லையெனில் அது அவச்செயல். அந்த அளவு சிக்கலானதாக இருக்கும்போது, நீங்கள் பிரார்த்தனையின் போது வேறு ஏதாவது செய்ய முடியாது. எனவே அந்த வகையில் ஒரு கால்பந்து விளையாட்டு உங்களை ஈடுபாட்டின் நிலைக்கு அழைத்துச் செல்கிறது, அங்கு நீங்கள் வேறு எதையும் செய்ய முடியாது. வேறு எதையாவது செய்வது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது, ஏனென்றால் உங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது, இதில் அதிக ஈடுபாடு உள்ளது. ஒரு கால்பந்து விளையாட்டில், உங்கள் கால்களை ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் ‘ஸ்கால்பெல்’ (ஒருவிதமான கத்தி) போல பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட அளவிலான ஈடுபாட்டைக் கோரும் விளையாட்டாகும், ஏனெனில் நீங்கள் பந்தைக் கையாளும் கைகளும், முழு வேகத்தில் உங்களைக் கொண்டு செல்லும் கால்களும் ஒரே மாதிரியானவை, மேலும் நீங்கள் விளையாடும்போது, நீங்கள் செய்யும் அனைத்து முயற்சியையும் தடுக்க, தங்களால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்யும் அந்த பத்து நபர்களைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் மக்களை ஏமாற்ற வேண்டும், நீங்கள் பந்தை எடுக்க வேண்டும், நீங்கள் முழு வேகத்தில் ஓட வேண்டும்; உங்கள் கால்கள் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் ஸ்கால்பெல் போல் திறமையானதாக இருக்க வேண்டும், ஏனெனில் அந்த வேகத்தில், அந்தச் செயலில், பந்தை இயக்குவதற்கு அபாரமான திறன் தேவைப்படுகிறது. இது நீங்கள் ஏறக்குறைய மனதளவைக் கடந்து இருக்கும் நிலையில் உள்ள, ஒரு குறிப்பிட்ட அளவிலான ஈடுபாட்டைக் குறிக்கும்.

முழு ஈடுபாட்டுடன் நீங்கள் எதையாவது செய்தால், அங்கே செயல் மட்டுமே இருக்கும் என்பதை நீங்கள் பார்க்கலாம் - மனம் வேறு எங்கோ உள்ளது. எனவே ஒரு கால்பந்து விளையாட்டில், வீரர்கள் அந்த வகையான நிலையை அடிக்கடி அடைகிறார்கள், ஏனெனில் அது ஒரே ஒரு விஷயத்தில் உள்ளது. தீவிரமாக ஒரு விஷயம் விளையாடப்படும் போது, பாதி உலகையே ஆட்கொண்டதற்கு அதுவே காரணம். ஒரு குறிப்பிட்ட வகையான ஆழ்நிலை உள்ளது - அது உண்மையில் ஆன்மீகம் கடந்து செல்லுதல் அல்ல, ஆனால் ஒருவருடைய வரம்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு குறிப்பிட்ட போக்கு மற்ற அனைவருக்கும் தீயாய் பரவுகிறது.

6. பெண்கள் பற்றி சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda on Women)

பெண்கள், Women

ஒருமுறை, ஒரு குறிப்பிட்ட சமூக சீர்திருத்தவாதி விவேகானந்தரிடம் சென்று, “நீங்களும் பெண்களை ஆதரிப்பது பெரிய விஷயம், நான் என்ன செய்வது? நான் அவர்களைச் சீர்திருத்த விரும்புகிறேன்" என்று கேட்டார். இதை ஆதரிக்க விரும்புகிறேன். அப்போது விவேகானந்தர், “விட்டுவிடுங்கள், அவர்களைப் பற்றி நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை; அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள். அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்வார்கள்" என்றார். இதுதான் தேவை. ஒரு ஆண், பெண்ணைச் சீர்திருத்த வேண்டும் என்பதல்ல. இடம் கொடுத்தால், அவளே தேவையானதைச் செய்வாள்.

7. தொலைநோக்குப் பார்வை குறித்து சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda’s Vision)

விவேகானந்தர், Vivekananda in Tamil

எனக்குப் பன்னிரெண்டு அல்லது பதினைந்து வயது இருக்கும்போது, சுவாமி விவேகானந்தர், "உண்மையான அர்ப்பணிப்புள்ள நூறு பேரை எனக்குக் கொடுங்கள், நான் இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றுவேன்" என்று சில இலக்கியங்களில் சொன்னதைப் பார்க்க நேர்ந்தது. அந்த நேரத்தில் இந்த நாட்டில் இருபத்திமூன்று கோடி மக்கள் இருந்ததாகத் தெரிகிறது, ஆனால் உண்மையிலேயே அர்ப்பணிப்புள்ள நூறு பேரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் அப்போது நினைத்தேன், “என்ன ஒரு சோகம்! விவேகானந்தர் போன்ற ஒரு மனிதர் ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. அவர் போன்ற மனிதர் தினமும் தோன்றுவதில்லை. அவர் வரும்போது, இந்தப் பரந்த நாட்டில் நூறு பேரைக்கூட கொடுக்க முடியவில்லை". இந்தக் கலாச்சாரத்திற்கும் இந்த நாட்டிற்கும் இது ஒரு பெரிய சோகமாக எனக்குத் தோன்றியது.

ஒருவருக்கு அபாரமான தொலைநோக்குப் பார்வை இருந்தது, மேலும் அதனால் பல விஷயங்கள் நடந்துள்ளன. இன்றும் அவர் பெயரில், மனித நல்வாழ்வுக்காக நிறைய நடக்கிறது. அவருடைய தொலைநோக்குப் பார்வையால் நிறைய நடந்திருக்கிறது. அந்தக் காலத்தில் அவருடன் வாழ்ந்த மற்றவர்கள், எங்கே? ஆனால் அவரது தொலைநோக்குப் பார்வை இன்னும் ஏதோ ஒரு வகையில் செயல்படுகிறது. அதனால் நிறைய நல்வாழ்வு கிடைத்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் இதே தொலைநோக்குப் பார்வை கொண்டு சென்றிருந்தால், இன்னும் சிறப்பாக நடந்திருக்கும். ஒரு கௌதம புத்தருக்கோ அல்லது ஒரு விவேகானந்தருக்கோ மட்டும் தொலைநோக்குப் பார்வை இருந்தால் போதாது. மக்கள்தொகையில் ஒரு பெரிய பிரிவினருக்கு இப்படியொரு தீர்க்கமான பார்வை இருந்தால் மட்டுமே, சமூகத்தில் உண்மையில் அழகான விஷயங்கள் நடக்கும்.

ஆசிரியரின் குறிப்பு:  பொதுவாக மனிதனாகக் கருதப்படும் வரம்புகளை உடைத்த மூன்று மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளைப் பின்பற்றவும். புரூஸ்லீ, சுவாமி விவேகானந்தர் மற்றும் அவரது யோகா ஆசிரியரைப் பற்றி சத்குரு பேசுவதைப் பாருங்கள். சத்குரு எக்ஸ்க்ளூசிவ்-ல் மட்டுமே! இப்போது சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.