சத்குருவின் தன்னிகரற்ற சக்தியில்
புதிய பரிமாணங்களை உணர்ந்து பரவசத்தில் திளைத்திடுங்கள்
உங்களுக்குள் பொதிந்திருக்கும் அளப்பரிய ஆற்றலை அறிந்திடுங்கள்
அன்றாட வாழ்விலும் ஆன்மீகத்திலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தீயாக எரியும் கேள்விகளுக்கு விடையறியுங்கள்
சிறப்பம்சங்கள்
தடைகளை தகர்த்து புதியதொரு கோணத்தில் வாழ்வை அணுகுவதற்கான ஞானத்தைப் பெறுங்கள்
உங்களைச் சுற்றிலும் உங்களுக்குள்ளும் என்ன நிகழ்ந்தாலும் அது உங்களை பாதிக்காதிருக்க தியானம் பயிலுங்கள்
வற்றாத ஊற்றாக உயிரினில் பொங்கிடும் ஆனந்தம் உணருங்கள்
சத்குருவுடனான இந்த பயணம், அன்பும் ஆனந்தமும் நிறைந்த விழிப்புணர்வாக உலகை உருவாக்குவதாக அமைந்துள்ளது. சத்குருவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, நான் ஒவ்வொரு செயலையும் செய்யும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கவனித்தேன், படைப்பின் மூலம் எனக்குள் உள்ளது என்று உணர்ந்தேன். எனக்கு இதுவரை கிடைத்ததில் அவர்தான் மகத்தான வரமாக இருக்கிறார்!
சத்குருவின் முன்னால் அமர்ந்தது என் வாழ்வையே மாற்றிவிட்டது, காரணம் புரியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது. அது மாயாஜாலத்தைப் போல இருந்தது. காரண அறிவைக் கடந்ததாக இருந்தது. உயிருள்ள ஒரு குருவின் அருளில் திளைப்பதன் ஆழமான தாக்கத்தை உணர்ந்தேன். சத்குருவுடன் இருந்த அந்த சில மணித்துளிகளுக்குப் பிறகு, வாழ்க்கை ஒரு தெளிந்த ஓடையைப்போல முயற்சியின்றி நிகழ்கிறது. இதற்கு நான் சத்குருவிற்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
நான் முதன்முதலாக சத்குருவுடனான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, சில மணிநேரமாக இருந்தபோதிலும், அது நான் அனைத்தையும் பார்க்கும் விதத்தையும் அனுபவத்தில் உணரும் விதத்தையும் மாற்றிவிட்டது. எனக்குள் ஏதோவொன்று நிரந்தரமாக மாறிவிட்டது என்பதை உணர்ந்தேன்.
சத்குருவுடனான சத்சங்கத்தில் இருந்தது என் வாழ்வையே மாற்றும் அனுபவமாக இருந்தது. என் குருவை நான் பஞ்சபூதங்களின் உருவமாகக் கண்டேன். அவரிடம் சரணாகதி அடைய வேண்டும் என்ற தீவிரமான ஏக்கமானது, கண்ணீர் வெள்ளமாக வெளிப்பட்டது.
கோவிட் அலை முடிந்தவுடன் சத்குருவுடன் ஒரு சத்சங்கத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மாலைப்பொழுதில் சத்குரு சிறிதுநேரம் உரையாற்றியபிறகு ஒரு தியானத்திற்குள் எங்களை கொண்டுசென்றார். சில நிமிடங்களில் இனம் புரியாத ஓர் அனுபவத்தை உணர்ந்தேன், இதுவரை உணர்ந்திராத ஒரு இருப்பை உணர்ந்தேன். நிகழ்ச்சியின் நிறைவில் நாங்கள் அனைவரும் ஓருயிர் என்று உணர்ந்தேன், வாழ்வில் அதுவரை உணர்ந்திராத ஆனந்தத்தை உணர்ந்தேன். அது என் வாழ்வில் மறக்க முடியாத ஓர் அனுபவமாக இருந்தது.

நிகழ்ச்சி விவரம்
பதிவுசெய்ய
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஈஷா யோகா நிகழ்ச்சியில் ஷாம்பவி மஹாமுத்ரா எனும் பயிற்சிக்கு தீட்சை பெற்றிருப்பது அவசியம்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்
ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு நீங்கள் கார், மெட்ரோ ரயில் அல்லது பேருந்தில் வரமுடியும்.
கார்: ஓலா, ஊபர் போன்ற சேவைகளை பயன்படுத்தலாம்.
மெட்ரோ: நிகழ்ச்சி மைதானத்திற்கு அருகில் ஒருசில சென்னை மெட்ரோ ரயில் ஸ்டேஷன்கள் உள்ளன.
பேருந்து: 18R, 88KCT, A18, A51, AC-E18, S39 உட்பட பல பேருந்துகள் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு அருகில் செல்கின்றன.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்நிகழ்ச்சியில் பங்குபெற ஈஷா யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சை பெற்றிருக்க வேண்டும்.
ஆமாம், கலந்து கொள்ளலாம். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து பதிவு செய்பவர்கள், பதிவு செய்து ரசீது பெற்றுக்கொண்ட பின்னர் விமானம் மற்றும் ரயில் பயண ஏற்பாடுகளை செய்துகொள்வது நல்லது. முறையான பாஸ்போர்ட் & விசா வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.
பதிவு செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும் - chennai@isha.sadhguru.org
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈமெயிலில் எங்களைத் தொடர்பு கொள்ளவும் chennai@isha.sadhguru.org
தங்கள் குடும்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள விரும்புபவர்களுக்கு தனி தனியாக பதிவு செய்து கொள்ளலாம்.
இந்நிகழ்வு மாலை 5:30 மணிக்குத் தொடங்கி, தோராயமாக இரவு 9:00 மணிக்கு நிறைவடையும் . நிகழ்ச்சியில் 20000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். நிகழ்ச்சி தொடங்கும் நேரத்திற்கு குறைந்தது 2 மணிநேரம் முன்னதாக வருவது, செக்-இன் செய்வதற்கும், மற்ற செயல்முறைகளை செய்வதற்கும், நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் முன்னதாகவே அமர்வதற்கும் ஏதுவாக இருக்கும். நிகழ்ச்சியின் தொடக்க நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக அமர்ந்திருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் .
ரத்து செய்து பணம் திரும்பப் பெறுவதற்கான வழிகாட்டுதலை கீழே காணலாம்
a. ஜூலை 29, 2024 அன்று முன்பாக வரும் பதிவு ரத்து செய்வதற்கான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். அதற்கு பின் வருவன எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது.
b. ஜூலை 28, 2024 அன்று அல்லது அதற்கு முன் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பித்து, நீங்கள் 7 படிகளில் அதிசய மாற்றம் - சத்குருவுடன் ஈஷா யோகா நிகழ்ச்சியை ஆரம்பிக்கவில்லை என்றால், ரத்துசெய்தல்களுக்கு நிகழ்ச்சி கட்டணத்தில் 20% பிடித்தம் செய்யப்படும்.
c. ஜூலை 28, 2024 அன்று அல்லது அதற்கு முன் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பித்து, நீங்கள் 7 படிகளில் அதிசய மாற்றம் - சத்குருவுடன் ஈஷா யோகா நிகழ்ச்சி தொடங்கியிருந்தால், ஞானம் தியானம் ஆனந்தம் நிகழ்ச்சி கட்டணத்தில் 20% மற்றும் நீங்கள் 7 படிகளில் அதிசய மாற்றம் - சத்குருவுடன் ஈஷா யோகா நிகழ்ச்சியில் முழுக் கட்டணமும் பிடித்தம் செய்யப்படும்.
d. சென்னையில் சத்குரு மற்றும் 7 படிகளில் அதிசய மாற்றம் - சத்குருவுடன் ஈஷா யோகா நிகழ்ச்சி கட்டணங்களின் தொகுப்பு, ஈஷா யோகா ஆங்கிலம் (ரூ. 4,000/- )அல்லது ஈஷா யோகா தமிழ் அல்லது பிற இந்திய மொழிகளில் வழங்கப்படும் நிகழ்ச்சிக் கட்டணத்தை (ரூ. 2,000/-) உள்ளடக்கியதாகும்.
e. மேலும் தெளிவுபடுத்த, பணத்தைத் திரும்பப்பெறும் பட்சத்தில், 7 படிகளில் அதிசய மாற்றம் - சத்குருவுடன் ஈஷா யோகா நிகழ்ச்சிக் கட்டணத்தைக் கழித்த பின்னரே, சென்னையில் சத்குரு நிகழ்ச்சி கட்டணத்தில் 80% திரும்பப் பெறத் தகுதி பெறுவீர்கள். உதாரணமாக, மானசரோவர் பிரிவுக்கான நிகழ்ச்சி கட்டணம் ரூ. 10,500/- நீங்கள் திரும்பப் பெறத் தகுதியுடைய தொகை ரூ.6,800/- மட்டுமே.
f. நீங்கள் இந்நிகழ்ச்சிக்கு “உங்கள் விருப்பப்படி நன்கொடை
அளித்தல்” பிரிவில் வழங்கப்பட்ட பணத்தை திரும்ப பெற முடியாது.
g. மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் படி மாற்றப்படலாம். Refund process நேரம் 3-4 வாரங்கள் ஆகலாம்.
இந்நிகழ்ச்சிக்கு முன்பதிவு அவசியம். ஆகஸ்ட் 3ல் பதிவுகள் நிறைவடையும்.
கூடுதலாக, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஈஷா யோகா நிகழ்ச்சி முடித்திருக்க வேண்டும். சத்குருவுடன் ஞானம் தியானம் ஆனந்தம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஷாம்பவி மஹாமுத்ராவிற்கு தீட்சை பெற்றிருக்க வேண்டும்.
பிற பங்கேற்பாளர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக, நிகழ்ச்சிக்கு தாமதமாக வருபவர்கள் நிச்சயமாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்., நீங்கள் நிகழ்ச்சி துவங்கும் நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருவதற்குப் பரிந்துரைக்கிறோம். இதன்மூலம் செக்-இன் செய்து தங்களை உள்ளே அனுமதிப்பதற்கு சுலபமாக இருக்கும்.
நிகழ்ச்சி தமிழில் மட்டுமே நடைபெறும்.
தளர்வான உடைகள் அணிந்து வருவது சிறப்பு. திறந்தவெளியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், சீதோஷண நிலைக்கு ஏற்றவாறு உங்கள் உடைகள் இருப்பது நல்லது.
பதினைந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருமே இந்நிகழ்ச்சியில் கலந்து முடியும். சிறுவயது குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்கு வசதிகள் செய்யப்படவில்லை.
உடைமைகள் பாதுகாப்பு வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திலும் இதற்கான வசதிகள் ஏதும் இல்லை. சிறிய அளவில் தனிப்பட்ட பொருள் மட்டுமே நீங்கள் கொண்டு வரமுடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும், பாதுகாப்பு கருதி அரங்கத்தில் வேறு எந்த உடைமைகளும் அனுமதிக்கப்படாது.
நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தில் போட்டோ எடுப்பதற்கோ வீடியோக்கள் பதிவு செய்வதற்கோ அனுமதி இல்லை.
வளாகத்தில் இரவு தங்குவதற்கு வசதிகள் இல்லை. சுற்று வட்டாரங்களில், சிறந்த விடுதிகள், தங்கும் வசதியுடன் இருப்பிடங்கள் உள்ளன.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் சுற்றி எண்ணற்ற தங்கும் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள் உள்ளன.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் முழுவதும் குடிநீர் வசதிகள் இருக்கும். உங்களது தண்ணீர் பாட்டில்களை எடுத்து வரவும்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளன. நிகழ்ச்சிக்குப் பிறகு உணவு அருந்த நீங்கள் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
நிகழ்ச்சி YMCA மைதானத்தில் நடைபெறுவதால், பொது நகரப்பேருந்து, மெட்ரோ இரயில், வாடகைக் கார்கள் கிடைக்கும். நீங்கள் இவற்றை தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாடகைக் கார்கள்: Uber, OLA
கல்லூரிக்கு அருகிலேயே மெட்ரோ ரயில் நிறுத்தம் வசதி உள்ளது.
நகர பேருந்து நிறுத்தம், வசதியும் கல்லூரிக்கு அருகில் உள்ளது.
பேருந்து எண்கள்: 18R, 18K, A18, A51, AC-E18 மற்றும் S39
தேவையான அளவு பார்க்கிங் வசதி உள்ளது. இருப்பினும், 2 மணி நேரத்திற்கு முன்பே வருவது சிரமங்களைத் தவிர்க்க உதவும்.