கொல்லைப்புற இரகசியம்

“பாட்டி… நீங்க எங்க இருக்கீங்க?” நிலைவாசலில் இருந்து குரல் எழுப்பிய படியே வந்து உமையாள் பாட்டியை வீட்டிற்குள் தேடினேன்.

பாட்டி தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் அமைந்துள்ள காய்கறி பந்தலில் இருந்து காய்களைப் பறித்துக் கொண்டிருந்தாள்.

பாகற்காய், இரைப்பையில பூச்சிகளை கொல்லும், பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதோட பழம் மற்றும் இலைகள்லயும்கூட நிறைய மருத்துவ குணம் இருக்குப்பா.

“என்னப்பா மதிய உணவு வேளையில பாட்டி வீட்டுப்பக்கம் வந்திருக்க… உங்க வீட்ல சமையல் ஆகலயா இன்னும்?!” பக்குவமாய் காய்கறிகளைப் பறித்துக்கொண்டே கேட்டாள் பாட்டி.

பாகற்காய், Bitter Gourd in Tamil

 

“அட போங்க பாட்டி… அந்த சமையலாலதான் கடுப்பாகி கிளம்பி வந்துட்டேன்.”

“என்னப்பா இவ்வளவு அலுத்துக்கற, அப்படி என்னதான் சமையல்?” ஆர்வமாய் கேட்ட பாட்டியிடம்

“சாம்பார் வச்சு பாகற்காய பொறியல் பண்ணிருக்காங்க” என்று உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினேன்.

“இன்னைக்கு வெள்ளிக்கிழமைனால ஆம்லேட்டும் வீட்ல போடமுடியாது. எப்படி நான் சாப்பிடுறது?”

அறுசுவையில் ஒன்று பாகற்காய்… (Bitter Gourd in Tamil)

பாகற்காய், Bitter Gourd in Tamil

 

“ஓ… அதான் விஷயமா... சரி உனக்கு பிரச்சனை சாம்பாரா, இல்ல பாகற்காயா?” பாட்டி புலன் விசாரணை செய்வது போலக் கேட்க,

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“சாம்பார் ஓகேதான் பாட்டி, எங்கம்மா சாம்பார்ல பெரிய கெட்டிக்காரி. ஆனா பாகற்காய நெனச்சாலே எனக்கு கசக்குது பாட்டி” என்று உண்மையைச் சொன்னேன்.

“இதோ பாருப்பா அறுசுவையில ஒன்னுதான், இந்த கசப்பு. நாம ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த கசப்பு சுவைய கண்டிப்பா நம்ம உணவுல சேத்துக்கணும்.

நீ இந்த பாகற்காய்ல இருக்குற ஆரோக்கிய நன்மைகள தெரிஞ்சுகிட்டேனா அத இனிமே ஒதுக்கி வைக்கமாட்டேன்னு நினைக்குறேன்.” பாட்டி பறித்த காய்களை மடியில் ஏந்தியபடி வீட்டினுள் செல்ல நானும் பின்தொடர்ந்தேன்.

“ஓ… அவ்வளவு பெரிய அப்பாடக்கரா இந்த பாகற்காய். அப்போ சொல்லுங்க கேட்டு தெரிஞ்சுக்குறேன்.”

பாகற்காயின் பலன்கள் (Pagarkai Benefits in Tamil)

பாகற்காய், Bitter Gourd in Tamil

“பாகற்காய், இரைப்பையில பூச்சிகளை கொல்லும், பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதோட பழம் மற்றும் இலைகள்லயும்கூட நிறைய மருத்துவ குணம் இருக்குப்பா.”

பாகல்பழம் மற்றும் இலைகளின் பலன்கள்

பாகற்காய், Bitter Gourd in Tamil

பாகல்பழம் சாப்பிட்டா இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு நீங்கும். கை கால்கள்ல வர்ற எரிச்சலுக்கு பாகல் இலைகளை அரைச்சு உள்ளங்கை உள்ளங்கால்கள்ல தேய்ச்சா எரிச்சல் நீங்கும்.

பாகற்காய் விதைகள் கிருமிநாசினியா செயல்படுது. கல்லீரல் ஆரோக்கியத்துக்காக பாகல்பழங்கள சாப்பிட்டா நல்ல பலன் கிடைக்கும். காமாலை நோய்க்கு மருந்தா பாகல் இலைகளும் பழங்களும் வழங்கப்படுது.

பாகல் பழத்த பிழிஞ்சு சாறெடுத்து கொஞ்சம் சர்க்கரை சேத்து, புண்கள் மேல தடவினா நல்ல பலன் இருக்கும். இலைகள உலர்த்தி பொடியாக்கி பெருநோய் புண்கள் மேல தூவினா சீக்கிரம் குணமாகும். பாகற்காயின் பலன்களைச் சொல்லிக்கொண்டே வெள்ளிக்கிழமை சாம்பார் வைப்பதற்கான காய்கறிகளை வெட்டி முடித்திருந்தாள் உமையாள் பாட்டி.

“பாட்டி நான்கூட பாகற்காய் கசப்புன்னு இத்தனை நாளா ஒதுக்கி வச்சிருந்தேன், ஆனா இனிப்பான ஆரோக்கியத்துக்கு அது துணையா இருக்கும்கறதை இப்போ புரிஞ்சுகிட்டேன்.”

“போப்பா… போயி உங்க அம்மா சமையல இன்னைக்கு வீணாக்காம சாப்பிடு… நீ உங்க மாமியார் வீட்டுக்கு ஒருவேள போனா அங்க உனக்கு நிச்சயம் பாகற்காய் வைக்கமாட்டாங்க. மருமகனுக்கு கசப்பு குடுக்கக்கூடாதுன்னு நம்ம ஊர்ல ஐதீகம் இருக்கு” எனச் சொல்லி என்னை நக்கல் செய்த பாட்டியிடம், ஏற்கனவே கொல்லைப்புற தோட்டத்திலிருந்து பறித்து வைத்திருந்த பாகல்பழங்களில் சிறிதளவை வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.

பாகற்காய் சமையல் குறிப்புகள் (Bitter Gourd Recipes in Tamil)

பாகற்காய் தொக்கு

பாகற்காய் தொக்கு, Pagarkai Thokku, Bitter Gourd Recipes in Tamil

தேவையான பொருட்கள் :

பாகற்காய் - 250 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - சிறிதளவு
ரசப்பொடி - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

பாகற்காயை விதை நீக்கிவிட்டு, சன்னமாக நறுக்கவும். அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். அதை 20 நிமிடம் ஊறவிட வேண்டும். ஒரு வாணலியில் 2ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, பாகற்காயை சேர்த்து வதக்கவும். மெல்லிய தீயில் மூடி வைத்து வேகவைக்கவும். நன்றாக வெந்தவுடன் புளி கரைசல் ஊற்றவும். பின்னர் வெல்லம் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். பின்னர் ரசப்பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.

பாகற்காய் மசாலா கறி

தேவையான பொருட்கள்

பாகற்காய் - 1 கப்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
வெல்லம் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
தேங்காய் - கால் கப் (துருவியது)
இஞ்சி - சிறிய துண்டு
தனியாத் தூள் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
தக்காளி - 1
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

புளியை கரைத்து உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து பாகற்காயையும் சேர்த்து முக்கால் வேக்காடு பதத்தில் வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி, துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி அரைக்கவும். அரைத்த கலவையை வேகும் பாகற்காயில் சேர்க்கவும். அதில் உப்பு சேர்த்து கொதி வந்ததும் இறக்கவும். மல்லி இலை தூவவும்.

பாகற்காய் பொரியல் (Pagarkai Poriyal in Tamil)

பாகற்காய் பொரியல், Pagarkai Poriyal in Tamil, Bitter Gourd Recipes in Tamil  

தேவையான பொருட்கள்

பாகற்காய் - 250 கிராம்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
வெல்லம் - 100 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை

பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பிசைந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வெல்லம் சேர்ப்பதால் இனிப்பும், காரமும் சேர்ந்த சுவையில் இருக்கும். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவர்.

மருத்துவ குறிப்பு: டாக்டர். S.சுஜாதா MD (S)
ஆரோக்யா க்ளினிக், சேலம்.

பாகல்பழம் மற்றும் இலைகளின் பலன்கள்