பிச்சை பாத்திரம் ஏந்திய ஒரு நிர்வாகியின் கைகள்!
நான் உணர்ந்தவை நம்புவதற்கு கடினமானது. இந்த புனிதம் மிக்க கலாச்சாரத்தின் மீது நான் கொண்டிருந்த பார்வையை இந்த அனுபவம் தகர்த்துவிட்டது. நான் அந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
திரு. டெனிஷ் மக்வனா:
(தொழில் வளர்ச்சி மேலாளர், நைஸ் டயமண்ட்ஸ் பி-லிட், குர்கான், மும்பை)
ஒரு வருடம் முன்பு நான் ஜத்தினிடம் பகடி செய்வதுபோல் இப்படிக் கேட்டேன், “என்னப்பா பண்ற? இந்த காலத்திலயும் நீ பாக்குறதுக்கு ரொம்ப ஆனந்தமாவும் உற்சாகமாகவும் இருக்கிறயே!” கூடவே அதுகுறித்து எனக்கு அறிந்துகொள்ளும் ஆர்வமும் அதிகமாக இருந்தது. அப்போதுதான் சிவாங்கா சாதனா பற்றி முதன்முதலில் அறிந்தேன். ஜத்தின் தனது பிச்சை பாத்திர அனுபவம் குறித்து என்னுடன் பகிர்ந்துகொண்டார். ‘சாதனாவிற்காக ஒரு வங்கி மேலாளர் இவ்வாறு பிச்சை கேட்டு கையேந்துவது எவ்வளவு சிறுபிள்ளைத் தனமானது!’ என்பதுதான் முதலில் எனது எதிர்வினையாக இருந்தது. பெரும்பாலும் துறவிகள் கூட இப்படி செய்யமாட்டார்கள். பிச்சை எடுப்பதென்பது தரம்தாழ்ந்த ஒன்று, இல்லையா?
ஜத்தின் எனது தோள்களை மென்மையாக பற்றியபடி சொன்னார், ‘நீங்கள் இந்த சாதனாவை மேற்கொண்டு இதனை நீங்களே உணர்ந்து பாருங்கள்!’ என்றார். அவர் சொன்னதும் நான் சிரித்தேன்; ஆனாலும் ஜத்தின் தன்மை அந்த நாளில் எனக்குள் ஒருவித இனிமையை விதைத்தது. அந்த ஈரம் நிறைந்த கண்களையும் ஆனந்தம் பொங்கிய முகத்தையும் வெகுகாலத்திற்கு என்னால் மறப்பதற்கு இயலாது.
அதனால் இவ்வருடம் நான் சிவாங்கா சாதனாவிற்கு பதிவு செய்தேன். நான் உண்மையில் தயாராக இல்லை, என்றாலும் இப்போது நான் பிச்சை கேட்டு கையேந்துவதற்கு எல்லாம் தயார். மூன்று நாட்களுக்குப் பின்னர் நான் பிச்சை கேட்டு சென்றேன். நான் உணர்ந்தவை நம்புவதற்கு கடினமானது. இந்த புனிதம் மிக்க கலாச்சாரத்தின் மீது நான் கொண்டிருந்த பார்வையை இந்த அனுபவம் தகர்த்துவிட்டது. நான் அந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
ஒரு சில்லென்ற மாலை வேளையில் மும்பை பாயந்தெர் உத்தான் முக்கிய சாலையிலுள்ள பிரம்மதேவர் கோயிலின் முன்னால் நான் நின்றிருந்தேன். ஏற்கனவே கோயில் பூசாரியிடம் அதற்கு அனுமதி வாங்கியிருந்தேன். சூரிய அஸ்தமன வேளையின் கதிர்கள் சற்று கதகதப்பை ஏற்ற நான் மேல்சட்டை அணியாமல் பிச்சை பாத்திரத்தை மட்டும் ஏந்தியபடி, தலையை குனிந்தவாறு கைகளை வெளியே நீட்டியபடி ஒரு பரபரப்பு எனக்குள் தொற்றிக்கொள்ள நான் அங்கு நின்றுகொண்டிருந்தேன்.
Subscribe
முதலில் அங்கு ஏதும் நிகழவில்லை. நான் நின்றேன். நான் பிச்சை கேட்டேன். நான் காத்திருந்தேன். ஒருவழியாக முப்பது நிமிடங்கள் கழித்து தளர்ந்த கை-கால்களுடன் பிச்சையை நான் ஏற்றேன்... ஆனால், ஏற்கனவே என்னிடம் ஏதோ கரையத் துவங்கிவிட்டது. விரைவிலேயே இன்னும் நிறைய நிகழத் துவங்கியது.
நான் பிச்சை கேட்டுக்கொண்டிருப்பதை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த ஒரு மனிதர் தயங்கியபடியே என்னிடம் வந்து என்னுடைய சாதனாவின் நோக்கத்தை கேட்டறிந்தார். அதைக் கேட்டுவிட்டு அவருடைய நண்பர்களை என்னிடம் அனுப்பி வைத்தார். அவர்கள் அனைவரும் என் பாத்திரத்தில் ஓரளவு பிச்சை இட்டனர். எனக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், முதலில் வந்த நபர் என் பாதங்களைத் தொட்டுவிட்டு சொன்னார்: ‘நீங்கள் சாமானிய நபரைப் போல தெரியவில்லை. தயவுசெய்து உங்கள் ஆசிகளை வழங்குங்கள்!’ எனது கண்களில் கண்ணீர் வழியத் துவங்கியது. ‘சத்குருவின் ஆசிகள் உங்களுடன் இருக்கும்!’ என்றபடியாக நான் கூறினேன். பின்னர் அவர் கைகளை குவித்தபடி கூறினார், ‘நீங்கள் இன்று 21 பேரிடம் பிச்சை பெறுவீர்கள்; உங்கள் குரு உங்களுடன் வருவார்.’
9:30 மணியளவில் அந்த பூசாரி கோயிலை மூடிவிட்டு, அவரும் எனது பிச்சை பாத்திரத்தில் சிறிது வழங்கினார். இதோடு நான் ஒரு 6 வயது குழந்தை உட்பட மொத்தம் 16 பேரிடமிருந்து பிச்சை பெற்றிருந்தேன். ஆனால், திடீரென அங்கு ஒரு பெண்கள் குழுவிவர் விரைந்து வந்து எனக்கு பிச்சை இட்டனர். அவர்கள் வரிசையில் வந்து எனக்கு பிச்சை வழங்கியதைக் கண்டு நான் நெகிழ்ந்துபோனேன். அவர்களிடம் இருந்தவற்றை மிகவும் பக்தியுணர்வுடன் தலை வணங்கி எனக்கு பிச்சையளித்தனர். அந்த வரிசையில் வந்த கடைசி பெண்மணி கேட்டார், “நான் உங்களை கடந்த இரண்டு மணிநேரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் சாமானிய மனிதராக தெரியவில்லை! இந்த வேளையில் இங்கே நீங்கள் பிச்சை எடுப்பதன் நோக்கத்தை நான் அறிந்துகொள்ளலாமா?’ நான் அந்த பெண்மணியிடம் சாதனா குறித்து சொல்லிவிட்டு, என் மேல்சட்டை மாட்டிக்கொண்டு வீட்டிற்குச் செல்ல தயாரானேன். ஆனால், அந்த பெண்மணி மிகவும் உணர்ச்சி வயப்பட்டவராய், என்னை காத்திருக்கும்படி கூறிவிட்டுச் சென்றார். நான் மீண்டும் என் சட்டையைக் கழற்றிவிட்டு காத்திருந்தேன். ஒரு நிமிடம் கழித்து, அவர் தனது சுற்றத்தார் ஐந்து பேருடன் வந்தார்; அவர்களும் எனக்கு பிச்சை இட்டனர்.
இவையனைத்தையும் அந்த பூசாரி நின்று கவனித்துக்கொண்டிருந்தார். நான் புறப்படும்போது அவர், ‘நீங்கள் தினமும் இங்கே பிச்சை கேட்க தயவுசெய்து வாருங்கள்!’ என்று சொன்னார்.
என் பெயரைக் கூட அறிந்துகொள்ளாமல், எனக்கு பிறர் ஏதோ ஒன்றை மிகவும் கனிவுடன் வழங்கிய அனுபவம் இதுவே முதல்முறையாகும். போரிவலி எனும் இடத்திலுள்ள கோயிலுக்கு அருகில், தெரு பிச்சைக்காரர்கள் சிலருக்கு அடுத்ததாக இருந்தபடி எனது இரண்டாவது பிச்சை கேட்கும் செயல்முறையை மேற்கொண்டேன். சுமார் ஐந்து மணிநேரமாக அங்கு நின்று காத்திருந்ததற்குப் பிறகு மூன்று பேர் மட்டுமே எனக்கு அன்று பிச்சை வழங்கினர். நிறைய பேர் எங்களைத் தவிர்த்து சென்றாலும், அந்த அனுபவம் இன்னும் ஆழமானாதாய் இருந்தது.
சிலமணி நேரங்களுக்காவது தன்முனைப்பு இல்லாமல் இருப்பதால் வரும் இலகுத்தன்மை, எதுவுமே இல்லை என்ற நிதர்சன நிலை ஆகியவை என்னைச் சுற்றியுள்ள உயிர்களிடத்தில் மென்மேலும் கூடுதலான பரந்தமனப்பான்மையையும், விழிப்பையும் கொண்டிருக்கச் செய்துள்ளது. என்னிடம் தாராளமாக நடந்துகொண்டவராலும் மற்றும் என்னை நிராகரித்தவராலும் நான் முழுவதும் ஆதரவற்ற நிலையில் இருந்ததோடு, முழுவதும் அனுசரணை பெற்றவனாகவும் இருந்தேன்.
குறிப்பு:
சிவாங்கா சாதனா பற்றி மேலும் அறிய:
இணையதளம்: http://shivanga.org/
தொலைபேசி: 83000 15111