கேள்வி: ஒரு மரத்திற்கு நாற்பத்தி இரண்டு ரூபாய் (Rs.42) என்ற கணக்கை "காவேரி கூக்குரல்" இயக்கத்திற்காய் எவ்வாறு தீர்மானித்தீர்கள் என்பதை விளக்கமுடியுமா?

சத்குரு: இந்தியாவில், பல கொள்கைகளுக்கு யாரும் கடைசி மைல் தூரம் வரை நடக்க தயாராக இல்லை. சிலர் "மேலே" அமர்ந்து கொண்டு திட்டங்களை வகுக்கிறார்கள். சிலர் அதற்கான நிதியை ஒதுக்குகிறார்கள். இதுபோல பல்வேறு செயல்கள் நிகழும். ஆனால் யாரும் அந்த கடைக்கோடி மனிதனை வந்து அவர் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் சொல்வதில்லை. கடைசி மனிதன் சரியானதைச் செய்யாவிட்டால், இதற்கு தீர்வு இல்லை. பின் இது பாட புத்தகங்களிலே தங்கி விடும், நாம் அதைப் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்போம். கடைசி மனிதனைத் தொடும்போதுதான் தீர்வுகள் நடக்கும். நாங்கள் வகுக்கும் திட்டங்களில் இது ஒரு அம்சமாகும்.

பல்வேறு வகையான நிலங்களில், பல்வேறு வகையான நிலப்பரப்புகளில், பல்வேறு வகையான சமூக சூழ்நிலைகளில் உள்ள நில யதார்த்தங்கள் கொண்டு இந்த நாற்பத்தி இரண்டு ரூபாயை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைக் குறிக்கும். சில இடங்களில், இருபத்தைந்து ரூபாய்க்கு ஒரு மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய முடியும். மற்றொரு இடத்தில், அது நூறு ரூபாயாக இருக்கலாம். இதையெல்லாம் கணக்கிட்டு சராசரியாக இந்த நாற்பத்தி இரண்டு ரூபாயை நிர்ணயித்துள்ளோம்.

களத்தில் நதிவீரர்கள்

nadiveeras-group-picture-at-the-tamil-nadu-university-after-their-training-session

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நாங்கள் நதிகளுக்கான பேரணியை நடத்தியபோது, இந்த தேசத்தின் இளைஞர்களுக்கு நான் ஒரு அழைப்பு விடுத்தேன், உங்களால் மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவின் நதிகளுக்காக உங்கள் வாழ்க்கையை செலுத்த முடிந்தால், நாம் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். அவர்களில் பலர் என்னிடம், “சத்குரு, எங்களுக்கு நதிகளைப் பற்றி எதுவும் தெரியாது, சூழலியல் பற்றியும் அதை எவ்வாறு சரிசெய்வது என்பது பற்றியும் எங்களுக்குத் தெரியாது.” என்றனர். நான் அவர்களிடம், “அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இதற்காக நான்கு மாத பயிற்சி திட்டத்தை நடத்துவோம். உங்களுக்கு இதில் சேர ஒரே ஒரு தகுதி மட்டுமே தேவை: உங்கள் தலையில் ஒரு எண்ணத்தை நீங்கள் தக்க வைக்க வேண்டும், அது - ‘எனக்கு இதில் என்ன கிடைக்கும்?’ இதை ஒரு மூன்று வருடங்களுக்கு நீங்கள் ஒத்திவைத்தால் போதும், நாங்கள் உங்களை ஒரு நதி வீரராக மாற்றி விடுவோம் உறுதி செய்வோம்.”

இந்த அழைப்பை ஏற்று நூற்றுக்கணக்கானவர்கள் முன் வந்தனர். அதில் பலர் நல்ல ஊதியம் தரும் வேலைகளை ராஜினாமா செய்தனர், சிலர் தங்கள் பிஎச்டி படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டு, எங்களுடன் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் இன்று களப்பணியில் உள்ளனர். உதாரணமாக, மகாராஷ்டிராவின் யவத்மாலில் வகாரி நதியை புதுப்பிக்க ஒரு திட்டத்தை கையிலெடுத்துள்ளோம். துரதிர்ஷ்டவசமாக இந்தப் பகுதி இந்தியாவின் "விவசாயிகள் தற்கொலை"யின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இந்த நிலைமையை மாற்ற நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகிறோம். அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளையும் சந்திக்க நதி வீரர்கள் கிராம் கிராமமாக செல்கின்றனர். நாம் பெரும் அளவிலான விவசாயிகளை வேளாண்காடு வளர்ப்புக்கு மாறும் வகையில் அறிவுறுத்தி வருகிறோம்.

தற்பொழுது நாம் "காவேரி கூக்குரல்" என்ற இயக்கத்தை துவக்கியுள்ளோம். இது வகாரி நதியை விட பல மடங்கு பெரிய நிலப்பரப்பில் ஐம்பது லட்சத்துக்கும் மேலான விவசாயிகளை உள்ளடக்கியது. அங்குள்ள ஒவ்வொரு விவசாயியையும் நேரடியாக நாம் சந்திக்க இயலாது. ஆனால் நல்ல காலமாக பல்வேறு ஊடகங்கள் வழியாக நாம் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு தற்பொழுது உள்ளது. எனவே அந்த ஐம்பது லட்சம் விவசாயிகளையும் நாம் நேரடியாக சந்திக்கத் தேவையில்லை. இது அனைத்திற்கும் செலவாகும். ஆனால் இது ஒன்றும் பெரிய செலவு அல்ல.

முக்கிய செலவு

"காவேரி கூக்குரல்" மூலம், விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடவு செய்வதற்கு ஆதரவளிப்போம். இந்த மரங்களை விவசாயிகளுக்கு நாம் வழங்க வேண்டும், இதற்காக எங்களுக்கு மிகப் பெரிய நர்சரிகள் தேவை. இந்த நர்சரிகளுக்கு பெரிய நிலங்களை குத்தகைக்கு எடுப்பது ஒரு பெரிய செலவாகும். மற்றொரு அம்சம் என்னவென்றால், சிலர் நமக்கு நிலம் கொடுக்க முன்வந்தாலும் பெரும்பாலான இடங்களில், மண் பொருத்தமானதாக இல்லை, எனவே நாம் மண்ணை வேறு இடத்திலிருந்து கொண்டு செல்ல வேண்டியிருக்கும். இதற்கு போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு தேவை. இதையெல்லாம் நாங்கள் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட அளவில் தமிழகத்தில் செய்து வருகிறோம், ஆனால் பெரிய அளவில் ஒரு உந்துதல் தேவை. எனவே நாங்கள் பொதுமக்களின் உதவியை நாடி அவர்களிடம் - ஒரு மரக்கன்றுக்கு நாற்பத்தி இரண்டு ரூபாய் கேட்கிறோம்.

நிதியை நிர்வகிக்க ஒரு சிறந்த வாரியம்

இந்த நாற்பத்தி இரண்டு ரூபாயை நிர்வகிக்க, எங்களிடம் மிகவும் பொறுப்பான மக்கள் குழு உள்ளது. குழுவின் உறுப்பினர்களில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, இந்தியாவில் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, பயோகான் தலைவர், இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு) முன்னாள் தலைவர், நாட்டின் சிறந்த நீர் நிபுணர், மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பு இயக்கத்தைத் தொடங்கிய நபர் - அவர் FPO களின் தந்தையாகக் கருதப்படுபவர் ஆகியோர் உள்ளனர். இந்த வாரியத்தின் கீழ் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தணிக்கை நிறுவனத்தால் இந்த நிதி நிர்வகிக்கப்பட உள்ளது.

 

அடிப்படை வேளாண்காடுகள் வளர்ப்பில் பதினைந்து வெவ்வேறு வகையான மரங்களை உள்ளடக்கியது மற்றும் பெரிய திட்டத்தில் எண்பது வெவ்வேறு வகையான மரங்களை உள்ளடக்கியது. வெறும் ஐந்து ரூபாய் செலவில் உற்பத்தி செய்யக்கூடிய சில வகையான மரங்கள் உள்ளன. ஒவ்வொரு வார இறுதியில், எங்களின் ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் ஒன்று கூடி தங்கள் சொந்த செலவில் இதை தயாரிக்கிறார்கள். வேறு சில மர வகைகள் உள்ளன அவற்றை உற்பத்தி செய்ய இருநூறு ரூபாய் தேவைப்படும்.

 

பல்வேறு வகையான நிலங்களில், பல்வேறு வகையான நிலப்பரப்புகளில், பல்வேறு வகையான சமூக சூழ்நிலைகளில் உள்ள நில யதார்த்தங்கள் கொண்டு இந்த நாற்பத்தி இரண்டு ரூபாயை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைக் குறிக்கும். சில இடங்களில், இருபத்தைந்து ரூபாய்க்கு ஒரு மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய முடியும். மற்றொரு இடத்தில், அது நூறு ரூபாயாக இருக்கலாம். இதையெல்லாம் கணக்கிட்டு சராசரியாக இந்த நாற்பத்தி இரண்டு ரூபாயை நிர்ணயித்துள்ளோம்.

Kaveri-lookural