சத்குரு:

போதிதர்மரின் வரலாறு (Bodhidharma History in Tamil)

இந்திய ஞானிக்காகக் காத்திருந்த சீன அரசர்

bodhidharma in tamil, போதிதர்மர், bodhidharma history in tamil, bodhidharma from tamil nadu

சீனாவில் 1500 வருடங்களுக்கு முன் வூ என்ற பெயரில் ஒரு அரசர் இருந்தார். அவர் புத்தமதத்தைத் தீவிரமாகப் பின்பற்றுபவரக இருந்தார், புத்தரின் செய்தியை பரப்புவதற்கு இந்தியாவிலிருந்து ஒரு மேதை வரவேண்டும் என்று எதிர்பார்த்திருந்தார். புத்தமதம் அவருடைய நாட்டிலிருந்த அனைவரையும் சென்றடைய விரிவான பணிகளை மேற்கொண்டார். இந்த சமயப்பணி பல ஆண்டுகள் நடந்தது, புத்தமதத்தைப் பரப்ப ஓர் ஆசிரியருக்காக அரசரும் காத்திருந்தார், ஆனால் எந்த ஆசிரியரும் அங்கு வரவில்லை.

போதிதர்மர் தென்னிந்தியாவைச் சேர்ந்த பல்லவ இராஜ்ஜியத்தில் பிறந்த இளவரசர். அவர் காஞ்சிபுரத்தின் அரசருக்குப் பிறந்தார். ஆனால் சிறுவயதிலேயே தன் இராஜ்ஜியத்தையும் இளவரசர் பதவியையும் விட்டுவிட்டு துறவறம் பூண்டார்.

ஒருநாள் அரசர் 60 வயதைக் கடந்திருந்த போது, இரண்டு முற்றிலும் ஞானோதயம் அடைந்த ஆசிரியர்கள் இமயமலையைக் கடந்து புத்தரின் செய்தியைப் பரப்ப சீனாவிற்கு வருவார்கள் என்ற செய்தி அவரை அடைந்தது. மக்கள் மத்தியில் உற்சாகம் பொங்க, அவர்கள் வருகையை முன்னிட்டு பலத்த கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார் அரசர். சிலமாதங்கள் காத்திருந்த பிறகு, இரண்டு பேர் சீன இராஜ்ஜியத்தின் எல்லையை அடைந்தார்கள். அவர்கள் போதிதர்மரும் அவருடைய சீடர் ஒருவரும்.

தமிழ்நாட்டில் பிறந்த ஞானி போதிதர்மர் (Bodhidharma from Tamil Nadu)

bodhidharma in tamil, போதிதர்மர், bodhidharma history in tamil, bodhidharma from tamil nadu

போதிதர்மர் தென்னிந்தியாவைச் சேர்ந்த பல்லவ இராஜ்ஜியத்தில் பிறந்த இளவரசர். அவர் காஞ்சிபுரத்தின் அரசருக்குப் பிறந்தார். ஆனால் சிறுவயதிலேயே தன் இராஜ்ஜியத்தையும் இளவரசர் பதவியையும் விட்டுவிட்டு துறவறம் பூண்டார். 22 வயதில் முழுவதுமாக ஞானோதயம் அடைந்தார், அப்போதுதான் அவர் சீனாவிற்கு தூதராக அனுப்பப்பட்டார். அவர் வருகை குறித்த செய்தி கிடைத்ததும், ஒரு பெரிய வரவேற்பிற்கு ஏற்பாடு செய்து, நாட்டின் எல்லைக்கு அரசர் வூ நேரில் வந்து வரவேற்கக் காத்திருந்தார்.

ஏமாற்றமடைந்த சீன மன்னர்

bodhidharma in tamil, போதிதர்மர், bodhidharma history in tamil, bodhidharma from tamil nadu

இவ்விரண்டு துறவிகள் நீண்ட பயணத்தினால் களைப்படைந்து வந்திருந்தார்கள், அதனால் அவர்கள் இருவரையும் பார்த்த அரசர் வூவிற்கு பெருத்த ஏமாற்றம். ஞானோதயமடைந்த மனிதர் வருவார் என்று சொன்னபோது அவர் சற்று எதிர்பார்ப்புடன் வந்திருந்தார், ஆனால் இவர்கள் இருவரும் 22 வயது இளைஞர்களாக இருந்தனர். சில மாதங்கள் மலைகளில் பயணம் செய்த களைப்பினால் போதிதர்மரின் தோற்றமும் கண்ணைக் கவரும் காட்சியாக அப்போது இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மன்னர் வூவிற்கு ஏமாற்றம், ஆனால் அதை வெளியே காட்டாமல் இரண்டு துறவிகளையும் வரவேற்றார். அவர் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று உட்கார இடமும் உண்ண உணவும் அளித்தார். பிறகு கிடைத்த முதல் வாய்ப்பில் மன்னர் வூ போதிதர்மரிடம், "நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?" என்று கேட்டார்.
"தாராளமாகக் கேளுங்கள்" என்றார் போதிதர்மர்.

சீன மன்னருக்குக் கோபமூட்டிய போதிதர்மரின் பதில்கள்

bodhidharma in tamil, போதிதர்மர், bodhidharma history in tamil, bodhidharma from tamil nadu

மாமன்னர் வூ, "படைப்பின் மூலம் என்ன?" என்று கேட்டார்.

போதிதர்மர் அவரைப் பார்த்து சிரித்துவிட்டு, "என்ன முட்டாள்தனமான கேள்வி இது! வேறு ஏதாவது கேளுங்கள்." என்றார்.

போதிதர்மர், தாய் அல்லது சாய் என்ற பெயர் கொண்ட மலையில் தங்கியிருந்தார். அங்கே தங்கியிருந்தபோது அத்துறவிகள் சில இலைகளைக் கண்டுபிடித்திருப்பார்கள். அவ்விலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்துக் குடிப்பது விழிப்பாக இருக்க உதவுகிறது என்பதை போதிதர்மர் கண்டறிந்தார்.

மன்னர் வூவிற்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. போதிதர்மரிடம் கேட்க அவரிடம் ஒரு கேள்விப் பட்டியலே இருந்தது, அவர் அந்தக் கேள்விகளை மிகவும் ஆழமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் கருதியிருந்தார். இந்த குறிப்பிட்ட கேள்வி குறித்து அவர் பல வாக்குவாதங்களும் விவாதங்களும் நடத்தியிருந்தார். இப்போது எங்கோ இருந்து வந்த இந்த இளைஞன் அதை முட்டாள்தனமான கேள்வி என்று ஒதுக்கிவிட்டார். அவருக்கு அவமானமாகவும் ஆத்திரமாகவும் இருந்தது, ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "சரி, இரண்டாவது கேள்வியைக் கேட்கிறேன், என் இருப்பின் ஆதாரம் என்ன?" என்று கேட்டார்.

அதற்கு போதிதர்மர் இன்னும் சத்தமாக சிரித்துவிட்டு, "இது மிகவும் முட்டாள்தனமான கேள்வி. வேறு ஏதாவது கேளுங்கள்" என்றார். இந்தியாவில் பருவங்கள் எப்படி இருந்தது என்று மாமன்னர் கேட்டிருந்தாலோ, போதிதர்மரின் ஆரோக்கியம் பற்றி கேட்டிருந்தாலோ, அவர் பதில் சொல்லியிருப்பார். ஆனால் அவர், "படைப்பின் மூலம் என்ன? நான் எங்கிருந்து தோன்றினேன்?" என்று கேட்டதால் இதற்கும் அவர் பதில்தர மறுத்துவிட்டார்.

இப்போது மாமன்னர் வூவிற்கு கடுங்கோபம் வந்துவிட்டது, ஆனால் கட்டுப்படுத்திக்கொண்டு மூன்றாவது கேள்வியைக் கேட்டார். அவர்தன் வாழ்வில் செய்த நல்ல காரியங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுச் சொல்லலானார், எவ்வளவு பேருக்கு உணவளித்துள்ளார், எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்துள்ளார், அவர்செய்த தான-தர்மங்கள், என்று எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டு, இறுதியில், "தர்மத்தைப் பரப்புவதற்காகவும் புத்தரின் செய்தியை பரப்புவதற்காகவும் நான் இவ்வளவு தியான மண்டபங்கள் கட்டியுள்ளேன், நூற்றுக்கணக்கான தோட்டங்கள் அமைத்து ஆயிரக்கணக்கான மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் நான் செய்துள்ளேன். எனக்கு முக்தி கிடைக்குமா?" என்று கேட்டார்.

அப்போது போதிதர்மரின் முகத்திலிருந்த புன்னகை மறைந்தது. அவர் எழுந்து நின்று அவருடைய பருத்த கண்களில் கோபம் கொப்பளிக்க மாமன்னர் வூவைப் பார்த்து, "என்னது, முக்தியா? நீயா? ஏழாவது நரகத்தில் நீ தீயில் எரிவாய்" என்றார்.

ஆனால் மாமன்னர் வூவிற்கு இது எதுவும் புரியவில்லை. கோபம் தலைக்கேறி போதிதர்மரை நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். போதிதர்மருக்கு நாட்டின் உள்ளே இருப்பதற்கும் வெளியே இருப்பதற்கும் இடையே எந்த வித்தியாசமும் தெரியவில்லை, அதனால் அவர்தன் பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால் மாமன்னர் வூ தன் வாழ்க்கையில் கிடைத்த ஒரே வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்.அவர் கூறியதன் அர்த்தம் என்னவென்றால், புத்தர் விளக்கும் வாழ்க்கை முறையில், மனதிற்கு ஏழு அடுக்குகள் உள்ளது. என்ன தேவையோ அதை செய்வதை விடுத்து, ஒரு மனிதர் ஏதோவொன்று செய்து அதனை கணக்கெடுத்துக்கொண்டு இருந்தால், "நான் பிறருக்கு எவ்வளவு நன்மை செய்துள்ளேன்" என்று கணக்குப் பார்த்தால், அவன் தன் மனதின் மிகவும் கீழ்த்தரமான அடுக்கில் இருக்கிறான், அதனால் வேதனையை தவிர்க்கமுடியாது. ஏனென்றால் அவன் செய்த செயல்களுக்குப் பலனாக பிறர் தன்னிடம் நல்லபடியாக நடந்துகொள்ள வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அவர்கள் நல்லவிதமாக நடந்துகொள்ளவில்லை என்றால், அவன் மனதளவில் பெருத்த கொடுமைக்கு உள்ளாவான், அது அவனுக்கு ஏழாவது நரகமாகிவிடும்.

போதிதர்மரே ஜென் மதத்தைச் சீனாவிற்குக் கொண்டுவந்தார். கௌதம புத்தர் தியான் அல்லது தியானத்தைக் கற்றுக்கொடுத்தார். நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பின்னர் போதிதர்மர் அதனை சீனநாட்டிற்குக் கொண்டு சென்றபோது, அது அங்கே சான் ஆகிவிட்டது. இந்த சான் அதற்குப் பிறகு இந்தொனேசியா, ஜப்பான், மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்று ஜென் ஆனது.

தேநீர் பிறந்த கதை

Tea leaf, தேநீர்

Tea leaf, தேநீர்

போதிதர்மர் மாமன்னர் வூவால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு மலைப்பகுதிகளுக்குச் சென்றார். அங்கு சில சீடர்களைச் சேர்த்தார், அவர்கள் மலை குகைகளில் தியானம் செய்தனர். தியானம் செய்யும் ஒருவருக்கு மிகப்பெரிய எதிரி தூக்கம்தான். போதிதர்மர் ஒருமுறை தியானம் செய்துகொண்டு இருந்தபோது தூங்கிவிட்டார். அதனால் ஆவேசமடைந்து தன் கண்ணிமைகளை வெட்டிவிட்டார் என்று கதைகள் உள்ளன. துண்டிக்கப்பட்ட அவருடைய கண்ணிமைகள் மண்ணில் விழுந்து முதல் தேனீர்ச் செடிகளாக மாறின என்று சொல்வார்கள். அதனால் அதற்குப்பிறகு துறவிகளைத் தூங்காமல் காத்திட தேனீர் வழங்கப்பட்டது.

இந்தக் கதை எங்கிருந்து வருகிறது? மாமன்னர் வூவை சந்தித்த அச்சம்பவத்திற்குப் பிறகு போதிதர்மர், தாய் அல்லது சாய் என்ற பெயர் கொண்ட மலையில் தங்கியிருந்தார். அங்கே தங்கியிருந்தபோது அத்துறவிகள் சில இலைகளைக் கண்டுபிடித்திருப்பார்கள். அவ்விலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்துக் குடிப்பது விழிப்பாக இருக்க உதவுகிறது என்பதை போதிதர்மர் கண்டறிந்தார். அதன்பிறகு அவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் தியானம் செய்திருப்பார்கள். இப்படித்தான் தேனீர் அல்லது சாய் கண்டுபிடிக்கப்பட்டது.