ஆன்மீகம் குறித்து சத்குருவின் 25 வாசகங்கள் (Spiritual Quotes in Tamil)

ஆன்மீகம் என்பது நீங்கள் வாழும் சூழ்நிலையை எந்த விதத்திலும் சாராதது, அது உங்களுக்குள் நீங்கள் உருவாக்கிக்கொள்ளும் சூழ்நிலையைப் பற்றியது.

Spiritual Quotes in Tamil, ஆன்மீகம் பற்றி சத்குருவின் வாசகங்கள்

ஆன்மீகம் என்றால் நல்ல, அமைதியான வாழ்க்கை வாழ்வது என எண்ண வேண்டாம் - அது தீயாய் எரிவது.

Spiritual Quotes in Tamil, ஆன்மீகம் பற்றி சத்குருவின் வாசகங்கள், அமைதி

ஆன்மீகம் என்றால் உங்கள் முட்டாள்தனத்திற்கெல்லாம் நீங்கள் விளக்கம் தேட முயற்சிப்பதில்லை - நீங்கள் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறீர்கள்.


Spiritual Quotes in Tamil, ஆன்மீகம் பற்றி சத்குருவின் வாசகங்கள்

ஆன்மீகம் என்பது வேற்றுகிரகம் சார்ந்த விஷயமல்ல - அதுதான் மனிதர்கள் இங்கு இருப்பதன் சாராம்சம்.

Spiritual Quotes in Tamil, ஆன்மீகம் பற்றி சத்குருவின் வாசகங்கள்

ஆன்மீகமாக மாற நீங்கள் அனைத்தையும் துறந்து மலைக்குகைக்கு போக வேண்டியதில்லை. நீங்கள் வாழ்க்கையில் எங்கு இருக்கிறீர்கள், அல்லது என்ன செய்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டில்லை. ஆன்மீக செயல்முறை என்பது எந்த விதத்திலும் வெளிசூழ்நிலையைச் சாராதது - அது உங்களுக்குள் நிகழும் ஒன்று.


 Spiritual Quotes in Tamil, ஆன்மீகம் பற்றி சத்குருவின் வாசகங்கள்

ஆன்மீகம் என்பது விசேஷமானவராய் மாறுவதைப் பற்றியல்ல - அது அனைத்துடனும் ஒன்றிவிடுவதைப் பற்றியது.

Spiritual Quotes in Tamil, ஆன்மீகம் பற்றி சத்குருவின் வாசகங்கள்

ஆன்மீகத்தின் பெயரில் சிலர் குறுக்குவழியைத் தேடுகிறார்கள் - இல்லாததை கற்பனையில் உருவாக்குகிறார்கள்.

Spiritual Quotes in Tamil, ஆன்மீகம் பற்றி சத்குருவின் வாசகங்கள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆன்மீகம் என்றால் உங்கள் உயிரை உச்சபட்ச தீவிரத்திற்கு உயர்த்துவது.

Spiritual Quotes in Tamil, ஆன்மீகம் பற்றி சத்குருவின் வாசகங்கள்

ஆன்மீக செயல்முறை என்பது என்றோ ஒருநாள் சொர்க்கத்திற்கு செல்வதைப் பற்றியதல்ல. அது வாழ்க்கையை அதன் முழு ஆழத்தில் உணர்வதற்கானது.

Spiritual Quotes in Tamil, ஆன்மீகம் பற்றி சத்குருவின் வாசகங்கள், சொர்க்கம்

ஆன்மீக செயல்முறை என்பது பின்னோக்கிய படியல்ல. பிறர் இன்னும் அடையாத இடங்களுக்கு தாவிக் குதிக்கச் செய்யும் முன்னோக்கிய படி.

Spiritual Quotes in Tamil, ஆன்மீகம் பற்றி சத்குருவின் வாசகங்கள்

ஆன்மீகம் என்பது பேராசையின் உச்சம். நீங்கள் படைப்பின் ஒரு சிறு பகுதியை மட்டுமின்றி, படைப்பின் மூலத்தையே விரும்புகிறீர்கள்.

ஒவ்வொரு மனிதரும் ஏதோவொரு விதத்தில் ஆன்மீகத்தில் இருக்கிறார். ஆனால் ஒரு சிலர் அதற்கு பொறுப்பேற்று அதனை நடத்துகின்றனர்.

ஆன்மீகம் என்பது உங்கள் உச்சபட்ச சாத்தியத்தை உணர்வதைப் பற்றியது.

ஆன்மீகம் என்பது மனோரீதியான செயல்முறையும் இல்லை, சமூகரீதியான செயல்முறையும் இல்லை - அது 100% இருத்தல் சார்ந்த செயல்முறை.

ஆன்மீகம் என்பது ஊனமல்ல - அது உயிரை மிகுந்த வல்லமையாக்குவது.

அதிகாரத்தின் பதவிகளில் இருக்கும் மனிதர்களுக்கு ஆன்மீகத்தின் அம்சம் அவசியம், ஏனென்றால் அவர்களது ஒவ்வொரு எண்ணமும் உணர்ச்சியும் செயலும் பல உயிர்களை பாதிக்கிறது.

ஆன்மீக செயல்முறை என்றால் உங்களுக்குள் உள்ள உயிர்த்தன்மை அனைத்துக்கும் அதிமுக்கியமானதாகிறது, உங்கள் எண்ணங்களும் உணர்ச்சிகளும் அல்ல.

ஆன்மீகமாக இருப்பதன் அதிமுக்கியமான அம்சம் என்னவென்றால், மனம், சமூகம் மற்றும் உடல்தன்மையில் இருந்து, இருத்தலின் நிலைக்கு நீங்கள் நகர்கிறீர்கள் என்பதுதான்.

ஆன்மீகப் பாதையில் இருப்பதென்றால், உங்கள் பிரச்சனைகளின் மூலமும் உங்கள் நல்வாழ்வின் மூலமும் உங்களுக்குள்தான் உள்ளது என்பதைப் புரிந்துகொள்வது.

இந்த பிரபஞ்சத்தில் ஆன்மீகமாக இல்லாதது எதுவுமில்லை. எல்லாம் ஆன்மீகமாகத்தான் இருக்கிறது, ஆனால் உணரப்படாமல் இருக்கிறது.

நீங்கள் விழிப்புணர்வாக இருந்தால் எல்லாம் ஆன்மீகமே. நீங்கள் விழிப்புணர்வின்றி இருந்தால் எல்லாமே லௌகீகமே.

நீங்கள் ஒருநாள் இறப்பீர்கள் என்பதை நீங்கள் உணரும்போதுதான் ஆன்மீக தாகம் உங்கள் இதயத்தினுள் நுழைகிறது.

ஆன்மீக விஞ்ஞானத்தின் நோக்கமே மனிதர்களை உடலளவில், மனதளவில், உணர்ச்சியளவில் மற்றும் ஆன்மீக அளவில் அவர்களின் உச்சபட்ச சாத்தியத்திற்கு விழித்தெழச்செய்வதே.

ஆன்மீக செயல்முறை என்றால் நெருப்பாய் எரிவது. அமைதி என்பது நீங்கள் அடக்கம் செய்யப்படும்போது தன்னால் வரும்.

ஆன்மீகம் என்பது நீதிநெறியல்ல. உங்கள் உயிர்த்தன்மையை மேம்படுத்துவதே ஆன்மீகம்.

குறிப்பு:

உங்கள் உள்தன்மை நீங்கள் விரும்புவதுபோல் நடப்பதில்லையா? ஈஷா யோகா ஆன்லைன் நிகழ்ச்சி மூலம் உங்கள் உள்தன்மையை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கான முதல் படியை எடுங்கள்.