Friendship Quotes in Tamil: நட்பு பற்றிய சத்குருவின் வாசகங்கள்!
நட்பு என்பது ஆதாயம் தரக்கூடிய பரிமாற்றமா? இல்லை கொடுக்கல் வாங்கலா? நட்பு எப்படி இருக்க வேண்டும்? சத்குருவின் குருவாசகங்களின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்!
ArticleAug 8, 2024
நட்பு சிறக்க சத்குருவின் வாசகங்கள்! (Friendship Quotes in Tamil)
என்னைப் பொறுத்தவரை, நட்பு என்பது அனுகூலமான பரிமாற்றமோ அல்லது கொடுத்தல் வாங்கலோ இல்லை, அது உயிர்கள் சந்திக்கும் இடம் - அது இன்னொரு உயிரை ஆழமாகத் தொடக்கூடிய ஓர் உறவு.
நட்பு என்பது துணைக்காகவும் ஆறுதலுக்காகவும் மட்டுமில்லை, அது நீங்கள் என்னவாகவெல்லாம் இருக்கிறீர்கள், என்னவாகவெல்லாம் இல்லை என்பதைக் காட்டும் ஒரு கண்ணாடி.
உங்கள் அகங்காரத்தின் மீது யாராவது மிதித்துவிட்டால், அவர் உங்கள் எதிரியாகிவிடுகிறார். ஆனால் குரு என்பவர், உங்கள் அகங்காரத்தைத் தொடர்ந்து மிதித்திடும் ஒரு நண்பராவார்.
உங்கள் பிள்ளைகள் மீது நீங்கள் அதிகாரம் செய்யும்போது, அவர்களுடனான நட்பை இழந்துவிடுகிறீர்கள்.
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உறவுகளிலிருந்து ஏதோவொன்றைப் பெறவேண்டும் என்ற தேவையை நீக்கி, இயல்பாகவே நீங்கள் ஆனந்தம் ததும்பும் நிலையில் இருந்தால், அனைத்துவித மனிதர்களுடனும் நீங்கள் அற்புதமான உறவுகளை உருவாக்கலாம்.
உண்மையான ஓர் உறவில், உங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற சிந்தனையே இல்லாமல், உங்களால் முடிந்ததையெல்லாம் நீங்கள் கொடுப்பீர்கள்.
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்களால் வேறெவரையும் மகிழ்விக்க முடியாது.
உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், அவர்கள் உங்களுடன் இருப்பதை ரசிக்கும் விதமாக உங்களை ஆக்கிக்கொள்ள வேண்டும்.
ஒருவருடன் எவ்வளவு அழகாக உங்களால் தொடர்புகொள்ள முடிகிறது என்பது, உங்கள் விருப்பம், வளைந்துகொடுக்கும் தன்மை, மற்றும் ஆனந்தத்தை சார்ந்தது.
நீங்கள் ஆனந்தத்தின் ஆதாரமாக மாறினால், உங்கள் உறவுகள் அற்புதமாக இருக்கும்.
நீங்கள் உண்மையிலேயே இனிமையாகவும் அற்புதமாகவும் உணர்கிறீர்கள் என்றால், உங்களுக்கு எவருடனும் எந்தப் பிரச்சனையும் இருக்காது.
உங்கள் உறவுகள் இன்னொருவரிடமிருந்து ஆனந்தத்தைப் பிழிந்தெடுப்பதாக இல்லாமல், உங்கள் ஆனந்தத்தை பகிர்ந்துகொள்வதாக மாறினால், யாராக இருந்தாலும் அவர்களுடன் நீங்கள் அற்புதமான உறவுகளை உருவாக்குவீர்கள்.
உங்கள் ஆனந்தமும் அன்பும் எவருக்கும் அடிமையாக இல்லாமல், உங்கள் இயல்பினாலேயே நீங்கள் ஆனந்தமாகவும் அன்பாகவும் இருந்தால், அப்போது எந்தவிதமான உறவாக இருந்தாலும் அது செழிக்கும்.