கிறிஸ்துவும் கிறிஸ்தவமும் கிட்டத்தட்ட ஒரே பொருளுடையவை. ஆனால் "தேவனுடைய குமாரன்" என்ற பெயரில், இயேசு போதித்த தனித்துவம் மிக்க மனிதகுலத்தின் சாரத்தை நாம் இழந்துவிட்டோமா? கிறிஸ்துமஸ் பண்டிகையன்று, இயேசுவின் உணர்வை நம் இருதயத்திற்குள் கொண்டுவருவதன் அர்த்தம் என்ன என்பதை சத்குரு நமக்கு நினைவூட்டுகிறார்.

“இயேசு” என்று நாம் கூறும்போது, 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதனைக் குறிப்பிடவில்லை, ஆனால் ஒவ்வொரு மனிதனுக்குமான ஒரு குறிப்பிட்ட சாத்தியத்தை இங்கே குறிப்பிடுகிறோம். ஒவ்வொரு மனிதனும் இந்த சாத்தியத்தை தனக்குள் பூக்க அனுமதிப்பது அவசியம். ஏனென்றால், இன்று மதத்தின் பெயரில், மக்கள் ஒருவருக்கொருவர் உயிரை எடுக்கத் தயாராக உள்ளனர். தெய்வீகத்திற்கான உங்கள் விருப்பங்களில், நம் மனிதநேயத்தை இழக்கிறோம்.

இயேசுவின் போதனையின் மிக முக்கியமான அம்சம், யார் உங்களுக்கு சொந்தம், யார் சொந்தம் அல்ல என்று பாகுபாடு பார்க்காமல் வாழ்வது. அப்போதுதான் ஒருவர் தேவனுடைய ராஜ்ஜியத்தை அறிவார். அவர் தெளிவாகக் கூறினார், "தேவனுடைய ராஜ்ஜியம் எங்கோ மேல் உலகத்தில் இல்லை, அது உங்களுக்குள் இருக்கிறது." ஆரம்ப "சத்சங்கங்களில்" மட்டுமே உங்களை தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு அழைத்துச் செல்வது பற்றி இயேசு பேசினார். போதுமான மக்கள் அவரை வந்தடைந்த பின்னர், அவர், “தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுக்குள் இருக்கிறது” என்று கூறினார். அதுவே அவருடைய போதனையின் முக்கிய அம்சமாகும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

துரதிர்ஷ்டவசமாக, 99% மக்கள் தங்களுக்குள் இருக்கும் அருமையான ஒன்றைக் காண தவறிவிடுகிறார்கள். அது எங்கோ தொலைவில் இருந்தால், அவ்வளவு தூரம் நீங்கள் பயணம் செய்ய விரும்பமாட்டீர்கள். ஆனால் அது இங்கேயே இருக்கும்போது, நீங்கள் அதை தவறவிட்டால், அது ஒரு மிகப்பெரிய சோகம் அல்லவா? தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுக்குள் இருந்தால், அதை நீங்கள் ஆராய வேண்டும்; அவ்வளவுதான்

நம்பிக்கை என்பது பற்றி...

உங்களுக்குள் அந்த பரிமாணத்தை அணுகும் அறிவியல் முறைகள் நிறையவே உள்ளன, அது படைப்பின் மூலமாகும்; நீங்கள் சுமக்கும் உடல் உள்ளிருந்து உருவாக்கப்படுகிறது. விஞ்ஞானத்தை முன்வைக்க இயேசுவிற்கு தனது வாழ்க்கையில் போதுமான நேரம் இல்லாத காரணத்தால், அவர் விசுவாசத்தைப் பற்றி பேசினார், ஏனெனில் அது ஒரு விரைவான வழி. "குழந்தைகள் மட்டுமே தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பார்கள்" என்று அவர் சொன்னபோது, அவர் சிறு குழந்தைகளைப் பற்றி பேசவில்லை, அவர் எல்லாவற்றையும் பற்றி முன்கூட்டியே முடிவுகளை எடுக்காமலும், பாரபட்சம் பார்க்காமலும் இருக்கும் குழந்தை போன்றவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்,

நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும், அது தவறாகத்தான் இருக்க வேண்டும், ஏனென்றால் உங்களின் எந்த முடிவுகளுக்கும் வாழ்க்கை பொருந்தாது. பல முடிவுகளைக் கொண்ட ஒருவருக்கு வாழ்க்கையோ அல்லது வாழ்க்கையின் மூலமோ பலனளிக்காது. அந்த சுமையை நீங்கள் இறக்கி வைத்தால், பின் அதுதான் எளிய வழி.

அவருடைய வாழ்க்கையின் முடிவில் இயேசு கொல்லப்படுவார் என்று உறுதியாகத் தெரிந்தபோது, அவருடைய சீடர்களுக்குள் தோன்றிய ஒரே கேள்வி என்னவென்றால், “நீங்கள் உங்கள் உடலை விட்டு வெளியேறி, உங்கள் பிதாவின் ராஜ்ஜியத்திற்குச் செல்லும்போது, நீங்கள் அவருடைய மடியின் வலது புறத்தில் உட்கார்ந்திருப்பீர்கள். நாங்கள் எங்கே இருப்போம்? எங்களில் யார் உங்கள் வலது புறத்தில் இருப்பார்கள்? ”அவர்களின் குருவை - அவர்கள் கடவுளின் மகனாகப் பார்த்தார்கள் - அவர் ஒரு பயங்கரமான மரணத்திற்கு ஆளாக்கப் போகிறாரா? அதுதான் அவர்களின் கேள்வி! ஆனால் அந்த மனிதனின் தரத்தைப் பாருங்கள் - அவர் இந்த குணத்தை தனது வாழ்நாள் முழுவதும் காட்டினார் - எல்லோரும் அவரை எந்த வழியில் இழுக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, அவர் விரும்புவதை நிறைவேற்றுவதற்கான அவரது நோக்கம் தொடர்ந்தது. எனவே அவர் கூறினார், “இங்கே முதலில் நிற்பவர்கள் அங்கே கடைசியாக நிற்பார்கள். இங்கே கடைசியாக நிற்பவர்கள் அங்கே முதலில் நிற்பார்கள் என்று.” அவர் ஏற்றத்தாழ்வுகளை அழித்தார்; இது முண்டியடித்துக்கொண்டு சொர்க்கத்திற்கான உங்களின் வழியைக் கண்டுபிடிப்பது பற்றி அல்ல. உள்முக பயணத்தில் தூய்மை மட்டுமே வேலை செய்யும்.

இயேசுவின் உணர்வு வாழட்டும்!

நம்பிக்கை அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு வாழ்க்கையைப் பார்க்கும் நேரம் இது. எல்லாவற்றிற்கும் மேலாக, படைப்பின் ஆதாரம் உங்களுக்குள் இருக்கிறது. நீங்கள் அதை செயல்பட அனுமதித்தால், எல்லாம் இணக்கமாக இருக்கும்; அதுவே அவருடைய போதனைகளின் அடிப்படையாகும். இயேசுவின் வார்த்தைகள் உலகிற்கு அதிக தியாகத்தையும், பக்தியையும், அன்பையும் கொண்டு வந்துள்ளன, ஆனால் அவருடைய வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம்; "தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுக்குள் இருக்கிறது" என்பது அவருடைய போதனையின் அடிப்பகுதியும் அடிவாரமும் ஆகும்.

அது உங்களுக்குள்ளே இருந்தால், அது ஒரு ஆன்மீக செயல்முறை. ஆன்மீக செயல்முறை என்பது ஒரு குழு வழிபாட்டு முறை அல்லது ரசிகர் மன்றம் என்று அர்த்தமல்ல. இது ஒரு தனி நபர் தேடல். இது யோகாவின் சாராம்சம் மற்றும் கிழக்கத்திய கலாச்சாரங்களின் ஆன்மீக செயல்முறை. துரதிர்ஷ்டவசமாக, இயேசு பேசிய மிக முக்கியமான கூறுகள் தற்போது வலுவிழந்துவிட்டன. அவரது வார்த்தைகளின் சாரத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான நேரம் இது - ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமல்ல, அனைவருக்கும். இயேசுவின் உணர்வு வாழட்டும்.