பாரதம் - உலகின் ஆன்மீகத் தலைநகரம் என்று சும்மா அழைக்கப்படவில்லை. இங்கிருந்து உலகின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் இந்திய யோகிகள் பல்லாயிரம் ஆண்டுகளாய் பயணப்பட்டு யோக அறிவியலை மனித நலத்திற்காக பல இடங்களுக்கு சென்று வழங்கி இருக்கிறார்கள். வியாபாரத்தில் மட்டுமல்ல, கலைகளில் மட்டுமல்ல, பொருள் வளம், மனித வளம், இயற்கை வளத்தில் மட்டுமல்ல, இந்திய தேசம் கண்டது பரிபூரண வளம் - ஆன்மீக வளம். இதனை தன்னுடன் மட்டும் வைத்துக் கொள்ளாமல் உலகம் முழுமைக்கும் வழங்கிய பெருமை பாரதத்திற்கு உண்டு. ஆன்மீகத்தை தேடி, இந்தியாவை நோக்கி பயணப்பட்டோர் ஏராளம். இந்தக் கட்டுரையில் சத்குரு, நம் தேசத்திற்கு பயணமான சில புகழ்பெற்ற பயணிகளைப் பற்றி எழுதுகிறார்...