கடந்த 25-30 வருடங்களாக, சில உள்நோக்கமுடைய குழுக்கள், சிறிதாக இருந்தாலும் உரத்த குரலில், விஷமத்தனத்துடன் இடைவிடாது ஈஷா அறக்கட்டளையின் மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இன்று, போலியான பத்திரிக்கைகள், சமூக ஊடகங்கள் மற்றும் பணத்தால் இயக்கப்படும் சில ஊடகங்களை பயன்படுத்தி வஞ்சக நோக்கம் கொண்ட இக்குழுக்கள், ஈஷா அறக்கட்டளையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பொய்களால் ஆன வலைப்பின்னலை திட்டமிட்டு பின்னிக் கொண்டிருப்பதை நாம் பார்த்து வருகின்றோம். அரசு அமைப்பு எதுவும் ஒரு நீதிமன்ற வழக்கைக் கூட தொடுக்காத போதிலும், இக்குழுக்கள் உபத்திரவம் ஏற்படுத்தும் பூதாகரமான பல வழக்குகளை தொடுத்து மீண்டும் மீண்டும் ஈஷா அறக்கட்டளையை சர்ச்சையிலும் மோசமான ஊடக செய்தியிலும் மூழ்கவைக்க செயல்பட்டு வருகின்றன. ஈஷா, உலகளவில் 1 கோடி 10 லட்சம் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் 100 கோடி மக்களின் வாழ்வைத் தொட்டுள்ள இவ்வேளையில், உண்மையை வெளியிட வேண்டும் என்று மக்கள் மீண்டும் மீண்டும் வேண்டிக் கொண்டதற்கிணங்க, பொதுவாக புனையப்படும் சில கட்டுக்கதைகளுக்கு எதிரான உண்மை நிலவரம் என்ன என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.